பாரிஸில் உள்ள இந்த பிக்காசோ அருங்காட்சியகம் புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிக்காசோவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகம். இங்கு எண்ணிலடங்கா ஸ்பெயின் கலைஞர்களின் ஓவியங்கள், வரைப்படங்கள் ஆகிவயை உள்ளன.
ஸ்பெயினின் பார்சிலோனாவின் எல் பார்ன் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள இந்த பிகாசோ அருங்காட்சியகத்தில், 228 ஓவியங்கள், 149 சிற்பங்கள் மற்றும் 3,100 வரைப்படங்கள் உள்ளன.
இந்த அருங்காட்சியகத்தைத் தொடங்குவதற்கு பிக்காசோவின் நெருங்கிய நண்பரான ஜௌம் சபார்ட்டஸ் தான் உதவி செய்தார். அந்தவகையில் பிக்காசோவின் வரைப்படங்களை பார்சிலோனா நகருக்கு நன்கொடையாக வழங்கினார் அவரது நண்பர். அதாவது கலைப்படைப்புகளை விற்காமல் மக்கள் பார்வைக்காக வைக்க முடிவு செய்தனர். அந்தவகையில் 1963ம் ஆண்டு அதிகார்ப்பூர்வமாக பிக்காசோ அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. இடையில் சில காரணங்களால் மூடப்பட்ட இந்த அருங்காட்சியகம், பிற்பாடு 1985ம் ஆண்டு மீண்டும் திறக்கப்பட்டது.
பிரான்சின் பரம்பரை வரிச் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் பிக்காசோவின் வாரிசுகள் வரிகளை செலுத்திவிட்டு பல கலைப்படைப்புகளை சேகரிக்க ஆரம்பித்தனர். இதன்மூலம் பிரஞ்சு அரசாங்கம் பிக்காசோ அருங்காட்சியகத்தில் முறையாக ஓவியங்கள், சிற்பங்கள், வரைப்படங்கள் ஆகியவற்றை மக்கள் பார்வைக்காக வைத்தனர். அதன்பின்னர் இந்த அருங்காட்சியகம் படிப்படியாக வளர்ச்சியடைய ஆரம்பித்தது. 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிக்காசோவின் 5000 கலைப்படப்புகளை சேகரித்து மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.
மேலும் 1656 மற்றும் 1659ம் ஆண்டுகளின் இடைப்பட்டக் காலத்தில் பாரிஸின் மரைஸ் மாவட்டத்தில் ஜீன் டி பவுலரால் கட்டப்பட்ட ஹோட்டல் சேலேயில், இந்த வரைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் இந்த பிக்காசோ அருங்காட்சியகம் பார்சிலோனியா, மியூசியோ, பிக்காசோ மலாகா போன்ற ஸ்பெயினின் முக்கியமான இடங்களில் திறக்கப்பட்டன. இந்த அனைத்து அருங்காட்சியகங்களிலுமே 1917ம் ஆண்டு மற்றும் 1957ம் ஆண்டின் புகழ்பெற்ற ஓவியங்களின் அச்சுகள் அதிகம் காணப்படுகின்றன. பிக்காசோ ஓவியங்கள் 21ம் நூற்றாண்டில் 100 மில்லியன் டாலருக்கு விற்பனையாகிவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓவியங்கள், வரைப்படங்களைத் தவிர இந்த அருங்காட்சியகத்தில் மண்பாண்டங்கள் மற்றும் நாடக அரங்கங்களும் அதிகம் காணப்படும்.
பிக்காசோவின் 19 வயதில் உருவாக்கப்பட்ட இந்த சாம்ராஜ்ஜியத்தில் அப்போதிலிருந்து இன்றுவரை மிகவும் புகழ்பெற்ற ஓவியமாக Guernica என்ற ஓவியமே உள்ளது. இதுதான் உலகிலேயே மிகவும் புகழ்பெற்ற ஓவியமாகவும் கருதப்படுகிறது.
பிக்காசோவின் அந்த காலத்தின் வாழ்வியலுக்கு ஏற்ற கலைப்படப்புகளும், ரசிக்கும் வகையான கற்பனைக் கலைப்படப்புகளும் சேர்த்து 50 ஆயிரம் ஓவியங்கள் மொத்தமாக உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.