ரிஷிகேஷில் உள்ள ஒரு வீட்டை 18 நாடுகளைச் சேர்ந்த 90 பேர் கட்டினார்களாம். அதுவும் எத்தனை நாட்கள் தெரியுமா?
சில வருடங்களுக்கு முன்பு ராகவ் மற்றும் அன்ஷ் குமார் என்ற இளைஞர்கள் உத்தரகண்டில் உள்ள ரிஷிகேஷிற்கு ட்ரெக்கிங் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு ஹாரி பாட்டரில் வரும் ஹாக்ரிட் குடிசை போல கட்டி, அதில் சில நாட்கள் வாழ வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது. அதற்கேற்றவாறு திட்டம் செய்து ஒரு மாதிரி தயார் செய்து கட்டத்தொடங்கினர்.
இந்த குடிசை மக்களையும் இயற்கையையும் இணைக்கும் விதமாக இருக்க வேண்டும் என்று எண்ணினர். பழங்காலத்து கட்டடக் கலையின் உதவியோடு அந்த வேலையில் இறங்கினர். வாரநாட்கள் முழுவதும் அந்த வீட்டைக் கட்டினர். வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து மலைமீது ஏறி சுற்றிப் பார்த்தனர்.
ஒருநாள் மலைமீது ஏறி அங்கையே தங்க வேண்டும் என்று அந்த குடிசை வீட்டைப் பாதி கட்டியப்படியே விட்டுச் சென்றார்கள். அடுத்த வருடத்தில் ஒருவர் அதனைக் கடந்து செல்கையில், எதார்த்தமாக அந்த குடிசையைப் பார்த்தார். அவரும் அந்த குடிசையில் கைவைத்தார். இப்படி ப்ரேசில், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஃப்ரான்ஸ், கனடா, சொல்வேனியா உட்பட 18 நாடுகளில் இருந்து வந்த ஒவ்வொருத்தரும் அந்த வீட்டில் தங்கி அதனை சிறிதளவு சரிசெய்து சரிசெய்து கடந்துச் சென்றார்கள்.
இவர்கள் ஏன் தானாக முன்வந்து அந்த குடிசைக் கட்டினார்கள் தெரியுமா? முதல் வந்த அந்த சகோதரர்கள் போவதற்கு முன் ‘விருப்பம் இருந்தால், குடிசையை வேலைப் பாருங்கள்’ என்று எழுதி வைத்து சென்றிருக்கிறார்கள்.
வந்தவர்களில் கட்டடக்கலைப் பயின்றவர்கள் அதிகம் என்பதால், உள் கட்டமைப்பு வெளிக்கட்டமைப்பு எனப் பார்த்து பார்த்து வேலைப் பார்த்திருக்கிறார்கள்.
கோடைக்காலத்திற்கும், குளிர்காலத்திற்கும் ஏற்றவாறு அறை வெப்பநிலை மாறும் வகையில் கட்டமைத்தார்கள். உள்ளே அறையில் வைக்கப்படும் ஒவ்வொரு கலைப் பொருட்களும் நன்றாக திட்டம் செய்து வைக்கப்பட்டன. அதேபோல், தாவரங்கள், காளான்கள் போன்றவை உள்ளேயும் வெளியையும் வைக்கப்பட்டிருக்கின்றன. மெழுகுவர்த்தி ஆங்காங்கே வைக்கப்பட்டு, இரவு நேரத்தில் ஜொலிக்கிறது. கடைசியாக 2024ம் ஆண்டு, இந்த குடிசை தனது முதல் விருந்தாளியை உள்ளே அழைத்து வியப்படையச் செய்தது.
ரிஷிகேஷ் வழியாக செல்லும் யாராயினும், மலையேருவதற்கு சில நாட்கள் இடைவெளிவிட்டு இந்த குடிசையில் பணம் செலுத்தாமல் நேரம் செலவிட்டு பின் பயணத்தைத் தொடரலாம்.