National Photography Day 
கலை / கலாச்சாரம்

National Photography Day!

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19ஆம் தேதி புகைப்பட ஆர்வலர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் ஒன்றுகூடி தேசியப் புகைப்பட தினத்தைக் கொண்டாடுகின்றனர். வரலாற்றின் சிறந்த தருணங்களை படம் பிடிப்பதற்குப் பின்னால் உள்ள அறிவியல், கலை மற்றும் வரலாற்றை அங்கீகரிப்பதற்காக இந்த சிறப்பு நாள் கொண்டாடப்படுகிறது. இந்த தருணத்தில் நம்முடைய வரலாற்றில் அழியாத முத்திரையைப் பதித்த மற்றும் தாக்கத்தை ஏற்படுத்திய சில புகைப்படங்கள் பற்றி பார்க்கலாம்.

கிரி கணபதி

Man in Moon 1968

Man in Moon 1968

முதல் முறை நிலவில் காலடி எடுத்து வைத்த விண்வெளி வீரர்கள் அங்கே எடுத்த புகைப்படம் வெறும் புகைப்படம் மட்டுமல்ல, அது மனித குலத்தின் எல்லையற்ற ஆர்வம் மற்றும் பிரபஞ்சத்தை ஆராய்வதற்கான உறுதியின் அடையாளமாகும். மனிதனால் கற்பனை செய்ய முடியாத ஒன்றை செய்து காட்டிய நிகழ்வை இந்த புகைப்படம் விளக்குகிறது.

Lunch atop a Skyscraper 1932

Lunch atop a Skyscraper 1932

நியூயார்க் நகரத்தின் ராக்பெல்லர் மையத்தின் கட்டுமானத்தின்போது எடுக்கப்பட்ட இந்த வசீகரமான புகைப்படம், ஒரு உயரமான இடத்தில் இருக்கும் இரும்புச் சட்டத்தின் மேல் கட்டுமானத் தொழிலாளர்கள் சாதாரணமாக அமர்ந்து மதிய உணவு சாப்பிடுவதைக் காட்டுகிறது. நவீன உலகின் சிறப்பான கட்டமைப்புகளை உருவாக்கியவர்களின் பயமின்மை மற்றும் நட்புக்கு இந்தப் புகைப்படம் சான்றாகும். 

Einstein's Birthday 1951

Einstein's Birthday 1951

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது 72 ஆவது பிறந்தநாளில் அவரது நாக்கை வெளியே நீட்டுவதுபோல் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் ஒரு புத்திசாலித்தனமான இயற்பியலாளரின் விளையாட்டுத்தனத்தை நினைவூட்டுகிறது. 

Migrant Mother 1936

Migrant Mother 1936

1936 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த சோகமான தாயின் புகைப்படம், அந்த காலத்தில் பல புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொண்ட கஷ்டங்களின் அடையாளமாக மாறியது. இந்த புகைப்படம் புலம்பெயர் தொழிலாளர்களின் அவல நிலையை வெளிச்சம் போட்டுகாட்டி காண்பவர்களைக் கண்கலங்கச் செய்தது.

Earthrise, NASA 1968

Earthrise, NASA 1968

சந்திரனை சுற்றி வந்த முதல் மனிதப் பயணமான அப்போலோ 8ல் இருந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படம். பூமியின் பலவீனத்தை எடுத்துக்காட்டியது. மேலும் எதிர்கால சந்ததியினருக்கு நமது பூமியை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தது. 

Afghan Girl 1984

Afghan Girl 1984

இந்த புகைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஆப்கான் சிறுமியின் பச்சை நிறக் கண்கள், அகதிகள் போரினால் பாதிக்கப்பட்டு எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு அடையாளமாக மாறியது. 

The Write Brothers First Flight 1903

The Write Brothers First Flight 1903

ரைட் சகோதரர்கள் முதல் முறை விமானத்தை இயக்கும்படியான இந்த புகைப்படம், போக்குவரத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இதுவே நவீன விமானப் போக்குவரத்துக்கு வழிவகுத்தது எனலாம். 

Mushroom Cloud over Nagasaki 1945

Mushroom Cloud over Nagasaki 1945

நகசாக்கியில் அணுகுண்டு வீசப்பட்டபோது அங்கே காளான் வடிவத்தில் எழுந்த புகை மண்டலத்தின் படம்தான் இது.  இந்த புகைப்படம் போரின் விளைவுகளையும், அமைதியின் முக்கியத்துவத்தையும் நினைவூட்டுகிறது. 

Winston Churchill Portrait 1941

Winston Churchill Portrait 1941

வின்ஸ்டன் சர்ச்சிலின் இந்தப் புகைப்படம் இரண்டாம் உலகப் போரின் முக்கியத் தருணத்தின்போது படம்பிடிக்கப்பட்டது. இது பிரிட்டிஷ் தலைவரின் உறுதியையும் மனவலிமியையும் எடுத்துரைக்கிறது. 

Gandhi and the Spinning Wheel 1946

Gandhi and the Spinning Wheel 1946

மகாத்மா காந்தியும், நூல் ராட்டையும் இருக்கும் இந்தப் புகைப்படம் அகிம்சை எதிர்ப்பு மற்றும் இந்திய சுதந்திரத்திற்கான போராட்டத்தின் அடையாளமாகும். காந்தியின் அமைதியான போராட்டத்திற்கான அர்ப்பணிப்பை இது காட்டுகிறது. 

கணவன் மனைவி இந்த 7 விஷயங்களில் வெளிப்படையாக இருக்க வேண்டும்! 

ஆந்திரப் பிரதேசத்தின் புவிசார் குறியீடு பெற்ற பாரம்பரிய இனிப்பு ஆத்ரேயபுரம் பூதரெகுலு!

இந்த கண்ணாடி உங்களை தூங்க விடாது!

மஸ்குலர் டிஸ்டிராபியின் காரணமும் தீர்வும்!

நுரையீரலுக்கு நன்மை செய்யும் நொச்சி இலை பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT