Skin Care tips
Skin Care tips 
அழகு / ஃபேஷன்

சரும பராமரிப்புக்கு நேரமில்லையா? கவலையை விடுங்க... இந்த 10 மட்டும் செய்யுங்க!

வசுந்தரா

தொகுப்பு: நான்சி மலர்

இன்றைய காலக்கட்டத்தில், நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறோம். இருப்பினும் நம்முடைய சருமத்தைப் பொலிவாகவும், பளபளப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளாத சரும பராமரிப்பு குறிப்புகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்குத்தான் இந்தப் பதிவு. இந்த சரும பராமரிப்பு விரைவாக செய்யக்கூடியது மட்டுமில்லாமல் அதிக பலனையும் தரக்கூடியதாகும்.

1. பொதுவாக நேரமே இல்லை என்று சொல்பவர்கள்கூட இரவு உறங்க செல்வதற்கு முன் சுலபமான சரும பராமரிப்பு செய்துகொள்ளலாம். இரவு தூங்க செல்லும்முன் முகத்தைக் கழுவிவிட்டு படுப்பதே மிகவும் புத்துணர்ச்சி தரக்கூடிய விஷயமாகும்.

2. முகத்தைக் கழுவிய பிறகு ரெட்டினால்(Retinol) அல்லது விட்டமின் சி(Vitamin C) போன்ற சீரத்தைப் பயன்படுத்தலாம்.  சீரத்துடன் ஏதேனும் நைட் க்ரீமை சேர்த்து பயன்படுத்தலாம். இப்படி ஒவ்வொரு படியாக சரும பராமரிப்பை அதிகரித்துகொண்டு போவது சருமத்தைப் பொலிவுற செய்யும். எனவே,  இரவு சில நிமிடங்கள் சரும பராமரிப்பிற்கு ஒதுக்குங்கள்.  இரவு சரும பராமரிப்பிற்கு பிறகு காலையில் எழுந்து முகத்தை கழுவும்போது, முகம் நன்றாக பொலிவாக இருப்பது நமக்கு மகிழ்ச்சியை தரும்.

3. சிலருக்குச் சரும பராமரிப்பு முறைகள் செய்வதில் பயம் இருக்கும். அதற்காக ஏதாவது செய்யப் போக பிரச்னை வந்துவிடுமோ என்று பயப்படுவார்கள். சரும பராமரிப்பிற்காக உள்ள பொருட்களைப் பயன்படுத்துவதற்கு எந்தப் பயமும் தேவையில்லை. சரும பராமரிப்பிற்கென்று உள்ள கிளென்ஸர், டோனர், மாய்ஸ்டரைசர் சருமத்தின் பி.ஹைச் அளவை சரியாக வைத்துக்கொள்ளும். சருமத்தில் பி.ஹைச்சின் அளவு சரியாக இருந்தால் தானாகவே சருமமும் பளபளக்க தொடங்கிவிடும்.

Skin Care tips

4. சரும பராமரிப்பில் அடிப்படையாக செய்ய வேண்டியது கிளென்சிங். டோனரை ஸ்பிரே செய்துவிட்டு,  மாய்ஸ்டரைசர்ஸ் போட்டுக்கொள்ளலாம். இதையெல்லாம் செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும். இதனால் சருமத்திற்கு தேவையான நீர்சத்து கிடைத்துவிடும்.

5. சன்ஸ்கிரீன் என்பது எப்போதும் பையில் வைத்துக்கொள்ளுங்கள். வீட்டை விட்டு வெளியில் போவதற்கு முன் பயன்படுத்தலாம். போக வேண்டிய இடத்தை அடைந்த பிறகு  2 மணி நேரத்திற்கு பிறகு மறுபடியும் சன்ஸ்கிரீனை பயன்படுத்தலாம். முடிந்தால் முகத்தை கழுவி விட்டு சன்ஸ்கிரினை போடலாம். இல்லையேல் அப்படியே கூட போட்டுக்கொள்ளலாம். வெயில் காலங்களில் சன் ஸ்கிரீனை பயன்படுத்துவது மிகவும் நல்லதாகும். இதனால் சருமம் டேன்(Tan) ஆகாமலும், பேர்ன்(Burn) ஆகாமலும் பாதுகாக்கும். இதுபோல சன் ஸ்கிரீனை ஒரு நாளில் 3 முறையாவது பயன்படுத்துவது சிறந்தது.

Skin Care tips

6. இப்போது இருக்கும் வெயிலில் செல்லும்போது SPF 30 போட்டுக்கொள்வது நல்லது.  இதனால் சருமம் டேன் ஆகாமல் பொலிவுடனேயே இருக்கும். Broad Spectrum Sunscreen என்ற சன்ஸ்கிரீனை வாங்கி பயன்படுத்தலாம். Ultra Violet A, Ultra Violet B இன்னும் வேறு சில சூரிய கதிர்கள் சருமத்தை பாதிக்காமல் இது தடுக்கும். அதனால் நல்ல தரமான சன்ஸ்கிரீனை வாங்கி பயன்படுத்துவது நல்லதாகும்.

7. Stay hydrated என்று எல்லோரும் சொல்கிறார்கள். இந்த வெயில் காலத்தில் சீக்கிரமே நீரிழப்பு ஏற்படும். அதனால் நிறைய நீர் குடிக்கலாம்.  இளநீர், மோர், ஜூஸ் போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். இதனால் எவ்வளவுதான் வியர்த்தாலும், சருமத்தில் உள்ள ஈரப்பதம் குறையாமல், சருமம் டையர்ட் ஆகாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

8. தண்ணீர் குடித்தால் மட்டும் போதாது. கண்டிப்பாக பேலன்ஸ்டு டையட் இருக்க வேண்டும். அதில் கார்போஹைடிரேட் உள்ள சாதம், உருளைக்கிழங்கு போன்றவை, புரதம் உள்ள பருப்புவகைகள், மீன், முட்டை, கறி ஆகியவை எடுத்துக்கொள்ளலாம். கொஞ்சம் கொழுப்பு சத்து உள்ள நெய், வெண்ணெய் எடுத்துக்கொள்ளலாம். இதுபோன்று கார்போஹைடிரேட், புரதம், கொழுப்பு சத்து ஆகியவற்றை நம் உணவு முறையில் சேர்த்துக்கொள்ளலாம்.

9. நிறைய பழங்களும், காய்கறிகளும் நம்முடைய உணவு முறையில் இருப்பது நல்லது. கார்போஹைட்ரேட்டை குறைத்துவிட்டு புரதம், காய்கறி பழங்களை எடுத்துக்கொள்ளும் போது நம் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேறிவிடும். நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்துமே கிடைக்கும். இதுபோல பார்த்து பார்த்து சாப்பிடும் போது கண்டிப்பாக அது நம் முகத்திலும் பிரதிபலிக்கும். இரும்புச்சத்து, கேல்சியம், விட்டமின் போன்றவை இருக்கும் உணவை எடுத்துக்கொள்வது நல்லது. புதிதான காய்கறி மற்றும் பழங்களை வாங்கி நாமே வீட்டில் சமைத்து சாப்பிடுவது இன்னும் நல்லது.

10. இதுபோல தினமும் சரும பராமரிப்பு செய்வதால் ஸ்ட்ரெஸ் நன்றாக குறைந்து ரிலேக்சாக இருக்க உதவும். இதை தினமும் செய்வதால் நம் சருமத்திற்குப் பொலிவு கிடைக்கும். அதனால் நமக்கும் தன்னம்பிக்கை கிடைக்கும். நேரமே இல்லை என்று சொல்பவர்கள் கூட இதுபோன்ற சுலபமான சரும பராமரிப்பை பின்பற்றலாம்.

இப்போது சொல்லியிருப்பது நேரமே இல்லை என்று சொல்பவர்கள் கூட சீக்கிரமாகவும், சுலபமாகவும் செய்யக்கூடிய சரும பராமரிப்பு முறைகள்.
இந்த வெயில் காலத்தில் இவற்றையெல்லாம் பின்பற்றி சருமத்தையும், ஆரோக்கியத்தையும் பாதுகாத்து பயன் பெறுங்கள்.

அதிக அளவில் மக்களை ஈர்க்கும் உலகின் டாப் 10 மியூசியங்கள்!

iPad Mini: 2024 இறுதிக்குள் அறிமுகமாகும் ஆப்பிள் சாதனம்! 

கோயில் செல்லும்போது அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய ஆன்மிகத் தகவல்கள்!

ஏடிஎம் திருட்டு – பணத்தைப் பாதுகாக்க பத்து வழிகள்!

கொளுத்தும் வெயிலிலும் ஒரு நன்மை இருக்கிறது; எப்படி தெரியுமா?

SCROLL FOR NEXT