இறந்த சரும செல்களை வாரத்திற்கு இரண்டு முறை எக்ஸ்ஃபோலிஸ்ட் செய்யும்போது சருமம் பிரகாசமாகிறது. ஆர்கானிக் மற்றும் கெமிக்கல் இல்லாத வீட்டில் உள்ள சமையலறை பொருட்களை வைத்தே செய்யும் 3 ஃபேசியல் ஸ்க்ரப்புகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. வாழைப்பழம், தேன் மற்றும் காபி ஃபேஷியல் ஸ்க்ரப்
வாழைப்பழங்கள், காபி மற்றும் தேன் ஆகியவை சருமத்தை பளபளப்பாக வைத்திருப்பதில் முதலிடம் பிடித்த பொருட்களாகும் . இந்த ஃபேஷியல் ஸ்க்ரப் தயாரிக்க ஒரு பழுத்த வாழைப்பழம், இரண்டு தேக்கரண்டி காபி தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு முதலில் வாழைப்பழத்தை பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு அதை காபி மற்றும் தேனுடன் கலந்து செழுமையான, அடர்த்தியான பேஸ்ட்டை உருவாக்கி இந்த ஸ்க்ரப்பை சருமத்தில் மெதுவாக மசாஜ் செய்து, இருபது நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ முகம் பிரகாசமாகவும் பளபளப்பாகவும் காட்சியளிக்கும்.
2. ஓட்ஸ் மற்றும் யோகர்ட் ஃபேஷியல் ஸ்க்ரப்
ஓட்ஸ் சருமத்தில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றும், தயிர் சருமத்திற்கு ஊட்டமளிக்கும் என்பதால் இந்த ஸ்க்ரப்பை உருவாக்க 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் எடுத்துக் கொண்டு. இந்த இரண்டு பொருட்களையும் பேஸ்ட்டாக உருவாக்கி முகத்தில் சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும். சில நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி,அதன்பிறகு தொடர்ந்து டோனர் மற்றும் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த முகம் பொலிவுறும்.
3. தயிர், மஞ்சள், மற்றும் கடலை மாவு ஸ்க்ரப் செய்யும் முறை
1 டேபிள் ஸ்பூன் தயிர், 2 சிட்டிகை மஞ்சள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு இந்த மூன்று பொருட்களை நன்கு கலந்து பேஸ்ட் ஆக்கி இந்த பேஸ்ட்டை ஐந்திலிருந்து பத்து நிமிடங்களுக்கு மெதுவாக முகத்தில் மசாஜ் செய்து பின்பு கழுவினால் முகம் மிகவும் பிரகாசமாக காணப்படும் இந்த ஃபேஸ் ஸ்க்ரப் முகப்பருவைக் குறைத்து கரும்புள்ளிகளைப் போக்கி சருமத்தை பாதுகாப்பதில் தன்னிகரற்றது
மேற்கூறிய இந்த மூன்று பேஸ் ஸ்க்ரப்புகளுமே எந்தவித ரசாயனங்கள் இன்றி முகத்தை பளபளப்பாக ஆக்குவதில் முக்கிய இடம் பெறுகின்றன.