7 styling mistakes that women must avoid! Image credits: India Today
அழகு / ஃபேஷன்

பெண்கள் தவிர்க்க வேண்டிய 7 ஸ்டைலிங் மிஸ்டேக்ஸ்...நோட் பண்ணிக்கோங்க!

நான்சி மலர்

ம்முடைய அன்றாட வாழ்வில் நாம் தெரியாமல்  செய்யும் சில ஸ்டைலிங் மிஸ்டேக்ஸை தவிர்த்தாலே போதும் மேலும் நாம் கூடுதல் அழகாகத் தெரிய முடியும். அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

1.உங்களுடைய உடல் ஸ்லிம்மாக தெரிய வேண்டும் என்று மிகவும் பிட்டான உடைகளை அணியாதீர்கள். ஏனெனில், அது உங்களுடைய உருவத்தை தவறாக காட்டக்கூடும். அதற்கு பதில் ஒரு Proper tailor fit உடையை அணிவது சிறந்தது.

2.உங்களுடைய Ankle, neckline, wrists ஆகியவற்றை மறைப்பதுபோல உடையணியாமல், எந்த உடை அணிந்தாலுமே இந்த பாகங்கள் தெரிவதுபோல பார்த்துக்கொள்வது சிறப்பாகும். அது உங்களுடைய ஓவர் ஆல் லுக்கை அதிகமாக உயர்த்திக் காட்டும்.

3.இறுக்கமான டாப் பயன்படுத்தும்பொழுது இறுக்கமான ஃபேன்ட் பயன்படுத்த வேண்டாம். எதாவது ஒன்றை டாப் அல்லது ஃபேன்ட்டை தளர்வாக அணிந்துக் கொள்வது சிறப்பு.

4.உடையை தேர்ந்தெடுக்கும் போதோ அல்லது அணியும் பொழுதோ Patterns ஐ கலந்து போட வேண்டாம். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும்  என்றால், Polka print top உடன் Striped Pants அணிவதை தவிர்த்துவிட்டு ஒரே மாதியான Patterns ஐ பயன்படுத்தவும்.

5.Western உடைகள் அணியும்பொழுது Traditional ஆக தெரிய வேண்டும் என்று பூ வைப்பதை தவிர்க்கவும். அது பார்ப்பதற்கு நன்றாக இருக்காது.

6. பெண்கள் தங்களுக்கு வசதியான, அழகான உடைகளை தேர்வு செய்து உடுத்துவதே சிறந்தது. அடுத்தவர்களை இம்ப்ரஸ் செய்ய, அவர்களைப்போல இருக்க வேண்டும் என்று நினைத்து உடை உடுத்துவது நன்றாக இருக்காது. உடை உடுத்துவது நம்மை Confident ஆக வைத்துக் கொள்ளவும், அழகாக காட்டுவதற்காகவுமேயாகும்.

7. இன்று பல பெண்கள் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் வருபவர்களின் ஃபேஷன் ஸ்டைலை பின்பற்றுகிறார்கள். தங்களுக்கு என்று தனி அடையாளமாக ஃபேஷன் ஸ்டைலை வைத்துக் கொள்வதில்லை. அதிகமாக டிரெண்டாகும் ஃபேஷனான உடைகளை அணிய வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதை தவிர்த்துவிட்டு உங்களுக்கென்று ஒரு ஸ்டைலை கண்டுப்பிடித்து அதற்கு ஏற்றவாறு உடையுடுத்துவது சிறப்பு. இந்த 7 ஸ்டைலிங் மிஸ்டேக்குகளை பெண்கள் தவிர்த்தால் அழகாக ஜொலிக்கலாம். முயற்சித்துப் பாருங்களேன்.

கவனத்தை கவனத்தோடு கையாளுங்கள்!

உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டியதன் அவசியத்தை அறிந்துக் கொள்வோம்!

பேச்சுத் திணறல் காரணங்களும் அவற்றை எதிர்கொள்ளும் விதங்களும்!

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

SCROLL FOR NEXT