டை வகைகள் Image credit - pixabay.com
அழகு / ஃபேஷன்

ஆண்களுக்கான 7 டை வகைகள்!

எஸ்.விஜயலட்சுமி

திருமணங்கள், வேலை நேர்காணல்கள், தொழில் முறை சந்திப்புகள், பார்ட்டிகள் மற்றும் சில விசேஷ நிகழ்வுகளுக்கு ஆண்கள் கோட்,  டை அணியும் வழக்கம் உள்ளது. 7 வகையான டை வகைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

நெக் டை

நெக் டை

இது பாரம்பரியமாக அணியப்படும் ஒரு டை வகை. 57 லிருந்து 60 இன்ச் நீளத்தில் அமைந்திருக்கும். சில்க், பாலிஸ்டர், காட்டன் கம்பளி போன்றவற்றில் தயாராகிறது. ஆனால் பாரம்பரியமாக பட்டில் தயாரித்த நெக் டையை அணிவது வழக்கமாக இருக்கிறது. இந்த வகையான டையை பிசினஸ் மீட்டிங்குகளுக்கும் கேசுவல் நிகழ்வுகளுக்கும் ஆண்கள் அணிந்து கொள்கிறார்கள். திருமணம் போன்ற நிகழ்வுகளில் கட்டாயமாக அணியப்படுகிறது

இது சட்டை காலரை சுற்றி அணிந்து இதன் முடிச்சு தொண்டையில் போடப்பட்டிருக்கும். இரு முனைகளிலும் குறுகியதாகவும் நடுவில் அகலமாகவும் இருக்கும். நீண்ட வரிகள் போட்டது, கட்டம் போட்டது போல்கா புள்ளிகள் போட்டது என டிசைன்களிலும் பலவித வண்ணங்களிலும் கிடைக்கிறது.

வில் டை - Bow Tie

வில் டை - Bow Tie

இது பட்டாம்பூச்சி போல வில் வடிவத்தில் காலரைச் சுற்றி கட்டப்படும் ஒரு குறுகிய துணி அமைப்பில்  இருக்கும். இதன் இரண்டு முனைகளும் தளர்வாக இருக்கும். இதன் தனித்துவமான வடிவத்திற்காக பெயர் பெற்றது. மற்ற டை வகைகளைப் போல் அல்லாமல் இதில் ஒருபோதும் அதிகப்படியான துணி இருக்காது. இது ஒரு சரி செய்யக்கூடிய கொக்கி அல்லது கிளிப் கொண்டு கழுத்தைச் சுற்றி கட்டப்படுகிறது. இதை பொதுவாக பட்டு அல்லது பருத்தியால் செய்யப்படும். பல வண்ணங்கள் வடிவங்கள் மற்றும் அளவுகளில் கிடைக்கும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் ஏற்றமாறு இதனுடைய நிறத்தை மாற்றி அணிந்து கொள்ளும் வழக்கம் உண்டு. 

அஸ்காட் டை

அஸ்காட் டை

இது பொதுவாக பட்டினால் செய்யப்படும் டை வகை ஆகும். திருமணங்கள் வரவேற்புகள் போன்ற விசேஷங்களின் போது அணியக்கூடியது. இங்கிலாந்தில் அஸ்காட் எனப்படும் குதிரைரேஸின் போது பயன்படுத்தப்படும். கூர்மையான முனைகளுடன் கூடிய அகலமான டை இது. நவீன மற்றும் நேர்த்தியான தோற்றத்தை உருவாக்குகிறது. இது திருமணம் மற்றும் வரவேற்பில் அணியப்படுகிறது. ரிச் லுக் தரும். 

க்ராவட் டை

க்ராவட் டை

இது அஸ்காட் டை போலவே இருக்கும். ஆனால் வரலாற்று மற்றும் கலாச்சார, பாரம்பரிய நிகழ்வுகளில் மட்டும் ஆண்கள் இதை அணிந்து கொள்வார்கள். கழுத்தை சுற்றி அணிந்து அதன் மறுமுனையை  சட்டைக்குள் இன் செய்து கொள்வார்கள். 

ஸ்கின்னி டை

ஸ்கின்னி டை

இது ஒல்லியான அமைப்புடன் இருக்கும். இரண்டிலிருந்து மூன்று அங்குல அகலத்திலும் வழக்கமான நெக் டைகளை ஒத்த நீளத்திலும்  இருக்கும். பட்டு பாலியஸ்டர் பருத்தி அல்லது கம்பளி போன்ற பல்வேறு துணிகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது பொதுவாக ஒரு கூரான அல்லது தட்டையான சதுர முனையுடன் இருக்கும். இதை அணியும் போது மிகவும் ஸ்டைலிஷ்ஷாக, மாடர்னாக, நேர்த்தியாகவும்  தோற்றமளிக்கலாம். பலவித வண்ணங்களில் கிடைக்கிறது. சாதாரண வணிக சந்திப்புகள் இரவு நேர பார்ட்டிகளுக்கு ஏற்றது. ஸ்லிம் பிட் சூட்டுகளுடன் அணியலாம். 

க்னிட் டை - Knit Tie

க்னிட் டை - Knit Tie

பாரம்பரிய நெக் டை போன்ற தோற்றத்தில் இருக்கும். கம்பளி, சில்க், காட்டன் மற்றும் சிந்தடிக் துணிகளில் தயாரிக்கப்படுகிறது. இதன் முனை கூர்மையாக இல்லாமல் தட்டையாக சதுர வடிவில் இருக்கும். ஆண்கள் கேஷுவல் மற்றும் ஃபார்மல் நிகழ்வுகளுக்கு அணிந்து கொள்கிறார்கள். இது அணிவதற்கு மிகவும் சௌகரியமாகவும், மென்மைத்தன்மையுடனும் இருப்பதால் தொழில் வல்லுநர்கலுக்கு  மிகவும் பிடித்தமானது.

போலோ டை

போலோ டை

பழைய அமெரிக்க பாரம்பரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. இதன் முனை அலங்காரமான மெட்டல் வடிவத்தில் அமைந்திருப்பது  சிறப்பு. இது தோல் மற்றும் வினைல் மெட்டீரியலிலிருந்து தயாரிக்கிறார்கள். நிறைய டிசைன்கள் கிடைக்கிறது. மேற்கத்திய நாடுகளில் விசேஷங்களின்போது அணிந்து கொள்கிறார்கள். அதே சமயத்தில் சாதாரணமாக வெளியில் செல்லும்போது அணிந்து கொள்கிறார்கள். பட்டன் டவுன் ஷர்ட்டுகள், கேசுவல் டி-ஷர்ட்களுடன் கூட அணிந்து கொள்கிறார்கள்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT