Types of socks... Image credit - amazon
அழகு / ஃபேஷன்

மகளிரின் ஆடைகளுக்கேற்ற 8 சாக்ஸ் வகைகள்!

ஆர்.ஐஸ்வர்யா

ணியும் ஆடைகளுக்கேற்ப பொருத்தமான காலணிகளை அணியும்போது அத்துடன் பொருத்தமான காலுறைகள் அணிவதும் அவசியம். ஆடைகளின் நீளம், ஸ்டைல் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு சரியான சாக்ஸ் வகைகளை எப்படி தேர்வு செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம். 

கணுக்கால் சாக்ஸ் (Ankle socks)

Ankle socks

கணுக்கால் சாக்ஸ்கள் அன்றாடம் அணியும் உடைகளுக்கு ஏற்றதாக இருக்கும். குறிப்பாக சாதாரண குர்த்திகள், சுடிதார்கள் மற்றும் சல்வார் கமீஸ்களுக்கு ஏற்றதாக இருக்கும். இது நல்ல ஸ்டைலிஷ் லுக் தரும். கவுன் டைப் உடைகளுக்கும் இது நன்றாக இருக்கும். 

இந்த சாக்ஸ்களுக்கு பொருத்தமாக லோஃபர்ஸ், மற்றும் ஜூட்டிஸ் எனப்படும் முன்புற கால் விரல்களை மூடிய காலணிகள் ஏற்றவை. இவை நேர்த்தியான தோற்றத்தை தருகின்றன. 

ஷீர் சாக்ஸ் (Sheer socks)

Sheer socks

புடவைகள், லெஹங்காக்கள், அனார்கலி சூடிதார்களுக்கு இவை பொருத்தமாக இருக்கும். இவற்றுடன் தட்டையான செருப்புகள் அல்லது ஹீல்ஸ் அணிந்து கொள்ளலாம். 

காட்டன் க்ரூ சாக்ஸ் (Cotton crew socks)

Cotton crew socks

பருத்தியாலான சல்வார் கம்மீஸ், குர்த்தாவுடன் கூடிய லெக்கின்ஸ் அல்லது சுடிதார் போன்ற ஆடைகளுக்கு இந்த வகையான சாக்ஸ்கள் ஏற்றவை. நன்றாக வியர்வையை உறிஞ்சக்கூடியவை. ஃபிளாட் மாடல் செருப்புகள், ஜூட்டிஸ் போன்ற பாரம்பரிய காலணிகளுடன் மேட்ச் ஆக இருக்கும். 

எம்பிராய்டரி சாக்ஸ்

Embroidery socks

திருமண விசேஷங்கள், பண்டிகைகளுக்கு அழகான லெஹங்காக்கள் வேலைப்பாடுகள் கொண்ட புடவைகள் அல்லது சுடிதார்களை பெண்கள் அணிவார்கள். அப்போது இந்த எம்பிராய்டரி சாக்ஸை உபயோகிக்கலாம். பாரம்பரிய விழாக்களுக்கு ஏற்றவை. அணிவதற்கு மென்மையாக இருக்கும். நேர்த்தியான தோற்றத்தை தரும் இவற்றுடன் செருப்புகள் அல்லது ஹீல்ஸ்கள் அணிந்து கொள்ளலாம். 

நோ ஷோ சாக்ஸ் (No show socks)

No show socks

இந்த வகையான சாக்ஸ்கள் அணிந்திருப்பது கண்களுக்கு தெரியாதது போல இருக்கும். பாரம்பரிய உடைகளுடன் அணிய ஏற்றவை. அணிவதற்கு வசதியாக இருக்கும். நார்மலாக அணியும் ஷூக்களுடன் அணிந்து கொள்ளலாம். பாதங்களுக்கு மிகவும் சௌகரியமான உணர்வைத் தரும்.

லெக் சாங்ஸ் (Leg socks)

Leg socks

இவை முழங்காலுக்கு சற்று கீழ் வரை உயரத்தில் இருக்கும். சாதாரண குர்தாக்கள் லெக்கின்ஸ் அணியும் போது இவற்றை அணிந்து கொள்ளலாம். கால்களுக்கு சௌகர்யமான உணர்வை தருகின்றன. இவற்றை சாதாரண செருப்புகளுடன் அணிந்து கொள்ளலாம். 

கம்பளி சாக்ஸ் (Woollen socks) 

Woollen socks

குளிர்காலத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். கால்களை மிகவும் வெதுவெதுப்பாக வைத்திருக்கும். பார்க்கவும் அழகாக இருக்கும். இவற்றுடன் பூட்ஸ்கள் அல்லது கால்களை மூடிய ஷூக்களுடன் அணிந்து கொள்ளலாம். இதனுடன் குளிர் காலத்திற்கேற்ற வகையிலான குர்தாக்கள் உல்லன் சல்வார் கம்மீஸ்களுடன் அணிந்து கொள்ளலாம்.

முழங்கால் சாக்ஸ்கள் (Knee socks) 

Knee socks

இந்திய மேற்கத்திய பாணி, அல்லது இரண்டும் கலந்த உடைகள், குட்டையான குர்த்தாக்களுடன் அணிந்து கொள்ளலாம். இவற்றுடன் ஷூக்கள் பாரம்பரிய செருப்புகள் போன்றவற்றுடன் அணிந்து கொள்ளலாம். 

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT