wrinkle free tour  dresses
wrinkle free tour dresses Image credit - travelandleisure.com
அழகு / ஃபேஷன்

பெண்களுக்கான சுருக்கம் இல்லாத 8 கோடைக்கால பயண ஆடைகள்!

எஸ்.விஜயலட்சுமி

விடுமுறையை உற்சாகமாக கழிக்க பயணங்கள் செய்வது வழக்கம். நாம் எடுத்துச் செல்லும் உடைகள் பார்ப்பதற்கு வசீகரமாகவும் அணிவதற்கு சௌகரிய மாகவும் சூட்கேஸில் அதிக இடம் பிடிக்காததாகவும் இருக்க வேண்டும்.  பயணத்தின்போது உடைகள் சுருக்கம் இல்லாமல் நேர்த்தியாக இருப்பது அவசியம். அப்போதுதான் நாம் எடுக்கும் செல்பி மற்றும் புகைப்படங்களில் அழகாக தெரிவோம். கோடைகால பயணத்திற்கு ஏற்ற சுருக்கங்கள் இல்லாத வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள ஆடைகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். 

1. பிரட்டி கார்டன் மிடி (Pretty garden midi)

பாலியெஸ்டரால் செய்யப்பட்ட பாப்லின் பிரட்டி கார்டன் மிடி பார்ப்பதற்கு அழகாக இருக்கும். சுருக்கம் இல்லாமல் இருக்கும். இது  பிளீட் வைத்த ஸ்கர்ட் டைப்பில் இருக்கும். துவைத்தாலும் சுருக்கம் ஏற்படாது. அயர்ன் செய்யாமல் அப்படியே அணிந்து கொள்ளலாம். நேர்த்தியாகவும் கம்பீரமாகவும் இருக்கும்.

2.  பாபாட்டன் பவர் பிளேசர்; (Babaton power Blazer).

இந்த பிளேசர் பகல் முழுவதும் அணிந்து கொண்டாலும் சௌகரியமாக இருக்கும் இதனுடன் வெள்ளை டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து கொண்டால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். இது திறந்த முகப்புடன் காலர் இல்லாமல் புது பாணியான தோற்றத்தை தரும். சுற்றுச்சூழலுக்கு உகந்த துணியால் தயாரிக்கப்பட்டது எனவே பயணத்தின்போது சௌகரியமாக இருக்கும்.

3.  லைட் வெயிட் ஓபன் ஃப்ரெண்ட் கார்டிகன் (Front open Cardigan)

பகலில் வெப்பமாகவும் இரவில் குளிர்ச்சியாகவும் இருக்கும் இடங்களுக்கு இந்த கார்டியன் ஏற்றது. சுருக்கம் இன்றி  கனமின்றி இலகுவான இருக்கும்.

4. வைட் லெக் பேண்ட் (wide leg pant)

இது நன்றாக நீடித்து உழைக்கக் கூடியது மற்றும் அணிவதற்கு மென்மையானது. எலாஸ்டிக் வைத்த இடுப்பு பகுதியும் அகலமான கால் பகுதியும் நாள் முழுவதும் அணிவதற்கு சௌகரியமான உடையாக இருக்கிறது. இதற்கு மேட்ச் ஆக டி-ஷர்ட் அல்லது பாடி சூட் அணிந்து கொள்ளலாம். பார்ப்பதற்கு ஸ்டைலாக இருக்கும்.

5. வளைந்த டேங்க் டாப் (curved Hem tunic tank top) 

மென்மையான பாலிஸ்டர் கலந்த துணிவகை இது. கோடையில் அணிந்தாலும் சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கிறது. வியர்வையை வெளியேற்றுகிறது. பல  அழகிய வண்ணங்களில் கிடைக்கிறது. லெகின்ஸ் மற்றும் ஷார்ட்சுடன் அணிய ஏற்றது.

6. எஷென்ஷியல் டீ ட்ரெஸ்; (Essential Tee dress)

பார்ப்பதற்கு ஸ்டைலிஷ் ஆகவும் பயணத்தின் போது அணிவதற்கு ஏற்றதாகவும் இருக்கிறது.  வியர்வையை உறிஞ்சுவதற்கு ஏற்ற வகையில் சுபிமா பருத்தியால் உருவாக்கப்பட்டது. இதனுடன் மேட்ச்சாக செருப்பு அல்லது ஸ்பீக்கர் அணிந்தால் நன்றாக இருக்கும்.

Essential Tee dress

7. கோல்ப் போலோ சட்டை; (golf polo shirts)

இதில் வி வடிவ கழுத்துடன் கூடிய  காலர் உள்ளது. பார்ப்பதற்கு டிரண்டியாக இருக்கும் வியர்வையை உறிஞ்சும் விதத்தில் வடிவமைக்கப்பட்டது. இதை அணிந்து கொண்டு விளையாட ஏற்றது.

8. ஹை நெக் ரிவியரா உடை; (High neck Riviera dress)

உடலுடன் ஒட்டிக்கொள்ளாத ஒரு வசதியான மிடி அல்லது மேக்ஸி டைப் உடை இது. அணிவதற்கு சௌகரியமாக இருக்கும். சுருக்கம் இன்றி பார்ப்பதற்கு அழகாக இருக்கும் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது.

பட்டாம் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்தால் ஆபத்தா?

உத்திரகோசமங்கை மரகத நடராஜர் பிரதிஷ்டையான வரலாறு தெரியுமா?

நம் நாட்டில் 56,03,293 கிலோமீட்டருக்கு சாலைகளா? அடேங்கப்பா! பராமரிப்பு?

தெலங்கானாவின் கலாச்சாரத் திருவிழா போனாலு!

இந்த மாதிரியான நண்பர்கள் உங்களுக்கு இருக்கிறார்களா?

SCROLL FOR NEXT