Saffron 
அழகு / ஃபேஷன்

குங்குமப்பூவே... கொஞ்சுப் புறாவே...

சுடர்லெட்சுமி மாரியப்பன்

குங்குமப்பூ பற்றி அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். அதை உணவுடன் எடுத்துக்கொள்வதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். இந்த குங்குமப்பூ பழங்காலத்தில் இருந்தே மக்களால் பயன்படுத்தப்படும் ஒன்றுதான். முன் காலத்தில் குங்குமப்பூவை கர்ப்பிணி பெண்கள் பாலில் போட்டு குடித்தால், பிறக்கும் குழந்தை நல்ல நிறத்துடன் பிறக்கும் என்ற கருத்து மக்களிடையே இருந்து வந்தது. அது உண்மையோ, இல்லையோ... குங்குமப்பூவை சருமத்திற்கு பயன்படுத்தினால் நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கும் என்பது உண்மை. 

உடனே யோசிக்க ஆரம்பிச்சுட்டீங்களா அதை பற்றி? கவலை படாதீங்க.. அதில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்று இங்கு தெரிந்துக் கொள்வோம். சருமத்தை அழகுப்படுத்த செய்யும் சருமப் பராமரிப்பு பொருள்களில் கூட பெரும்பாலானவற்றில் குங்குமப்பூ பயன்படுத்தப்படுகிறது.

குங்குமப்பூவில் உள்ள நன்மைகள்

  • குங்குமப்பூ சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து, சருமத்தை பளபளப்பாகவும் மென்மையாகவும் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

  • சூரிய கதிர்களால் ஏற்படும் கருமை நிறத்தை சரி செய்வதற்கும் இது  உதவுகிறது.

  • கரும்புள்ளிகள், திட்டுகள் போன்றவை இதை பயன்படுத்துவதினால் குணமாகலாம்.

  • முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை பெறுவதற்கு குங்குமப் பூவில் உள்ள பண்புகள் உதவியாக இருக்கும்.

  • மேலும், சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

  • குங்கும பூவில், வைட்டமின் C மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்திருப்பதால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு இது தீர்வாக அமைகிறது.

குங்குமப் பூவை எப்படி பயன்படுத்த வேண்டும்?

குங்குமப்பூவை ஃபேஸ் மாஸ்க் போன்ற வடிவில் சருமத்திற்கு பயன்படுத்தலாம். அதாவது  குங்குமப்பூவுடன் தேன், தயிர், பால் போன்ற பல பொருட்களை கலந்து ஃபேஸ் மாஸ்க்குகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்றை தொடந்து பயன்படுத்தி வருவதனால், உங்கள் முகம் பளபளப்பு மாறுவதை நீங்களே பார்க்கலாம்.

மேலும்,

  • சருமத்தின் பொலிவை மேம்படுத்துவதற்கு, குங்குமப்பூவுடன் கற்றாழை ஜெல்லை கலந்து முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக பயன்படுத்தலாம்.

  • முகத்தின் பளபளப்பு தன்மையை மேம்படுத்த குங்குமப்பூவுடன் மஞ்சளை கலந்து பயன்படுத்தலாம். இதனுடன் பால் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

  • குங்குமப்பூவை நீங்கள் டோனராக பயன்படுத்தலாம். ரோஸ் வாட்டரில் குங்குமப்பூவை கலந்து அந்த தண்ணீரை முகத்தில் டோனராகவும் பயன்படுத்தலாம்.

இவ்வாறு ஃபேஸ் மாஸ்க், மாய்ஸ்ரைசர்களை நீங்கள் பயன்படுத்துவதால், முகத்தில் ஏற்படும் கருவளையம், முகப்பரு, வறட்சி, கரும்புள்ளிகள் போன்றவை நீங்கி சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

குறிப்பு: உங்கள் சருமத்திற்கு ஏற்றது என உறுதி செய்து பின்பு, எந்த அழகு சாதனைக் கலவையும் பயன்படுத்துவது நல்லது.

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

உங்க பெண் குழந்தைக்கு இந்த உணவுகளைக் கட்டாயம் கொடுக்கவும்!  

SCROLL FOR NEXT