Saree Image credit - herzindagi.com
அழகு / ஃபேஷன்

புடவை கட்டினால் குண்டாகத் தெரிகிறதா? இந்த 7 டிப்ஸ்களை முயற்சித்துப் பாருங்கள்!

நான்சி மலர்

புடவையை விரும்பாத பெண்கள் இருக்கவே முடியாது. எனினும், சில பெண்களுக்கு புடவை கட்டுவதில் சற்று தயக்கம் இருக்கும். சிலருடைய உடல் அமைப்பிற்கு புடவை கட்டும்போது குண்டாக இருப்பதுபோல தோற்றம் ஏற்படும். அதைப்போக்க இந்த 7 டிப்ஸ்களை முயற்சி செய்தாலே போதுமானது. அதன் பிறகு புடவையை விடவே மாட்டீங்க. அதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க.

1. நீங்கள் உயரம் கம்மியாக இருப்பவராக இருந்தால், புடவையை தொப்புளுக்கு கீழே கட்டாமல் தொப்புளுக்கு மேலேயிருந்து கட்டுங்கள். அப்போதுதான் உங்களுடைய உடல் நீளமாகவும், Elongated ஆகவும், உயரமாகவும் தெரிவீர்கள்.

2. Blouse க்கு ஸ்லீவ்ஸ் வைக்கும்போது சின்னதாக வைக்காதீர்கள். அது உங்கள் உடலை கட் பண்ணிக் காட்டும். அதற்கு பதில் ¾ ஸ்வீஸ்ஸோ அல்லது Elbow ஸ்லீவ்ஸோ பயன்படுத்தலாம்.

3. ஒரு புடவை வாங்கும்போது அது பிளைன் கலராக இருந்தால் நன்றாக இருக்கும் அல்லது குட்டியாக பார்டர் இருக்கலாம், சின்ன சின்ன Patterns புடவையில் இருக்கலாம். அதைவிட்டு விட்டு பெரிய பார்டர் உள்ளது, Half sarees வாங்கினால் ரொம்ப உயரம் கம்மியாக தெரியக்கூடும்.

4. நீங்கள் ஒரு புடவையை தேர்ந்தெடுக்கும்போது Banarasi, brocade போன்ற புடவைகளை தேர்ந்தெடுக்காமல் chiffon, georgette, organza போன்ற மெலிதான புடவைகளை பயன்படுத்தும்போது உங்கள் உடலுடன் புடவை ஒட்டியிருக்கும். அதனால் அந்த வகை புடவைகள் உங்கள் உடல்வாகை அழகாக எடுத்துக்காட்டும்.

5. புடவை அணியும்போது வழக்கமாக பயன்படுத்தும் Cotton Inskirt ஐ பயன்படுத்தாமல் Shapewear ஐ பயன்படுத்துவது சிறந்தது. இது உங்களை நளினமாக காட்டும்.

6. புடவையில் Slim ஆக தெரியவேண்டும் என்று நினைப்பவர்கள் மிகவும் Light weight புடவைகளை தேர்ந்தெடுப்பது சிறந்தது. அடர் நிறப்புடவைகளில் செங்குத்தான Pattern ல் டிசைன்களை தேர்ந்தெடுக்கலாம்.

7. கருப்பு நிறம், நேவி ப்ளூ, மரகத பச்சை, ஒயின் ரெட் போன்ற நிறங்களில் புடவை பயன்படுத்தும் போது அது உங்கள் உடலுக்கு ஒல்லியாக இருப்பது போன்ற எப்ஃபெக்ட்டை உருவாக்கும். எனவே, இந்த நிறத்தில் புடவைகளை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

இந்த 7 டிப்ஸ்ஸையும் புடவை கட்டும்போது முயற்சித்துப் பாருங்கள். நீங்களும் புடவையில் அழகாகவும், நளினமாகவும் தெரிவீர்கள்.

பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ்: Hot Flashes என்றால் என்ன? கையாள்வது எப்படி?

இந்த சின்னஞ்சிறு காயில் ஒளிந்திருக்கும் சூப்பர் நன்மைகள் தெரியுமா?

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

SCROLL FOR NEXT