banana flower 
அழகு / ஃபேஷன்

சருமப் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வாழைப்பூ! 

கிரி கணபதி

நாம் விரும்பி சாப்பிடும் வாழைப்பழம் மட்டுமின்றி வாழைப்பூவும் நம் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. குறிப்பாக, சருமப் பிரச்சனைகளுக்கு இது ஒரு இயற்கையான தீர்வாக அமைகிறது. வாழைப்பூவில் உள்ள விட்டமின்கள், தாதுக்கள் சருமத்தை பொலிவாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவுகின்றன. இந்தப் பதிவில் வாழைப்பூவின் சரும பயன்கள் மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விரிவாகக் காண்போம். 

வாழைப்பூவின் சரும நன்மைகள்: 

  • வாழைப்பூவில் உள்ள நீர்ச்சத்து சருமத்தை ஈரப்பதமாக வைத்து, வறட்சியைத் தடுக்கிறது. 

  • இதில் நிறைந்திருக்கும் இயற்கை எண்ணைகள் சருமத்தை மென்மையாக்கி உதட்டில் ஏற்படும் விரிசல்களை குணப்படுத்துகிறது. 

  • வாழைப்பூவில் உள்ள வைட்டமின் சி சருமத்தை பொலிவாக்கி, இறந்த செல்களை நீக்குகிறது. மேலும், இதில் உள்ள பொட்டாசியம் முடி வேர்களை வலுப்படுத்தி முடி உதிர்வைத் தடுக்க உதவும். 

  • வாழைப்பூவில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது. இதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தோல் அலர்ஜியை குறைக்கிறது. 

  • இந்தப் பூவில் உள்ள குளுட்டத்தியோன், சருமத்தை ஆரோக்கியமாக்கி நிறமி மாற்றங்களைக் குறைக்கிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ சருமத்தை என்றும் இளமையாகப் பராமரிக்க உதவும்.

வாழைப்பூவை சருமத்தில் பயன்படுத்தும் வழிகள்: 

வாழைப்பூவை நன்றாக அரைத்து தேன் அல்லது தயிர் சேர்த்து ஃபேஸ் பேக் போல முகத்தில் பூசலாம். பின்னர், 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுவது சருமத்தை மென்மையாக்கி பொலிவாகும். 

வாழைப்பூவை நன்றாக அரைத்து சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து முகத்துக்கு பயன்படுத்தினால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும். 

வாழைப்பூவை அரைத்து தண்ணீரில் கலந்து அதை வடிகட்டி முகத்தை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். இது சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்து பருக்களை நீக்க உதவும். 

வாழைப்பூவை மிக்ஸியில் போட்டு அரைத்து அதில் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து முடியில் தடவி தலைக்கு குளித்தால், முடி ஆரோக்கியமாக மாறி முடி உதிர்வு தடுக்கப்படும். 

வாழைப்பூ என்பது இயற்கையின் அற்புதமான பரிசு. இது பல்வேறு விதமான சருமப் பிரச்சனைகளுக்கு மிகவும் பயனுள்ள தீர்வாகும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவுகின்றன. எனவே, இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி சருமத்தை பராமரிக்க விரும்புபவர்கள் வாழைப்பூவை தங்கள் அன்றாட சருமப் பராமரிப்பு முறையில் சேர்த்துக் கொள்வது நல்லது. இருப்பினும் இதை நீங்கள் இப்போதுதான் முதல் முறை பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், இது உங்கள் சருமத்திற்கு ஒத்து வருகிறதா என்பதை பரிசோதித்துப் பார்த்து முயற்சிக்கவும். 

திருவிழாக்களில் கொடியேற்றம் மற்றும் வாகன பவனியின் தத்துவம் தெரியுமா?

வெற்றிக்கு உதவும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள கற்க வேண்டிய 7 பழக்கங்கள்!

அத்திப்பழம் வெஜிடேரியனா அல்லது நான்-வெஜிடேரியன் ஃபுரூட்டா?

ஆரோக்கியத்தை வாரி வழங்கும் வாழைப்பூ!

Biography of Picasso: 20ஆம் நூற்றாண்டின் கலைப் புரட்சியாளர். 

SCROLL FOR NEXT