ear jewells... images credit - pixabay
அழகு / ஃபேஷன்

மங்கையரின் காதோரம் கவிதை சொல்லும் அழகிய காதணிகள்!

ஆர்.ஐஸ்வர்யா

ங்கையரின் முகங்களுக்கு அழகு சேர்ப்பது அவர்கள் அணியும் காதணிகள்தான். அழகான வேலைப்பாடுகள் அடங்கிய நான்கு விதமான காதணிகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

போஹேமியன் பாணி காதணிகள் (Bohemian Style Earrings)

Bohemian Style Earrings

ந்த வகை காதணிகள் பெரும்பாலும் இறகுகள், மணிகள், குஞ்சங்கள் மற்றும் இயற்கை கற்கள் போன்றவற்றின் கலவையைக் கொண்டு உருவாக்கப் படுவதால் அழகான கலைத் தோற்றத்தை உருவாக்குகின்றன. இந்த காதணிகளின் சிறப்பம்சம் என்னவென்றால் இவை இயற்கையான பொருட்களில் இருந்து செய்யப்படுகின்றன. மரங்கள், சிப்பிகள், விலை உயர்ந்த கற்கள் போன்றவற்றைக் கொண்டு உருவாகின்றன.

பளிச்சென்ற பிரகாசமான வண்ணங்களில் அழகிய வடிவங்களை கொண்டிருக்கின்றன. இவற்றின் மற்றொரு சிறப்பு அம்சம் இவை கைகளால் செய்யப்படுகின்றன. அதுவே இந்த காதணிகளுக்கு தனி அழகை கொடுக்கிறது. இவை பெரும்பாலும் பழங்குடி இன கலாச்சாரத்தை பிரதிபலிப்பதுபோல் அமைந்திருக்கிறது

மீனகாரி (Meenakari) காதணிகள்

Meenakari

னாமல் வேலைபாடுகளுக்கு மீனகாரி காதணிகள் புகழ்பெற்றவை. இவற்றின் உலோக மேற்பரப்பில் தூளாக்கப்பட்ட தாதுக்களை இணைத்து உருவாக்கப்படுகின்றன. இவற்றில் பொறித்திருக்கும் உருவங்கள் ஆச்சரியத்தை தருபவை. இவற்றில் மலர் வடிவங்கள், விலங்குகளின் உருவங்கள், புவியியல் வடிவமைப்புகள் போன்ற நுணுக்கமான வேலைப் பாட்டுடன் அமைந்திருக்கும். இவை அந்த கலைஞர்களின் கைவினைத் திறனை எடுத்துக்காட்டுகின்றன.

இவை சிவப்பு, பச்சை, நீலம் மற்றும் வெள்ளை போன்ற பிரகாசமான வண்ணங்களில் அமைந்திருக்கும், அதனால் விழாக்களின் போது அணிந்து கொள்ள ஏற்றதாக இருக்கின்றன. பெர்சியாவில் தோன்றிய இந்த காதணிகள் இந்தியாவில் பிரபலம் அடைந்தது, குறிப்பாக ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில். இங்கு மீனகாரி காதணிகள் மிகவும் பிரபலம். இவை அந்த மாநில கலாச்சார பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கின்றன. அவற்றை தங்கள் வடிவங்களில் பிரதிபலிக்கின்றன. 

குந்தன் மற்றும் போல்கி (Kundan and Polki) காதணிகள்

Kundan and Polki

ந்த காதணிகள் வெட்டப்படாத வைரங்களில் (போல்கி) சிக்கலான  தங்க (குந்தன்) நகைகளின் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு ஆடம்பரமான மற்றும் பாரம்பரிய தோற்றத்தை தருகின்றன. செழுமையான மற்றும் ராஜா காலத்து நகைகள் போன்ற தோற்றத்தின் காரணமாக அவை மணப்பெண்கள் அணிவதற்கு பொருத்தமாக இருக்கும். மேலும் சிறப்பு நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

வெட்டப்படாத வைரங்கள் தங்க படலத்தில் அமைக்கப்படுவதால் அவை பிரகாசமான, தனித்துவமான தோற்றத்தை அளிக்கின்றன.  முகலாயர் காலத்தில் தோன்றிய குந்தன் மற்றும் போல்கி வகைகள் பாரம்பரிய இந்திய பாணி காதணிகள் ஆகும். அவை தலைமுறை தலைமுறையாக அவற்றின் எக்காலத்திற்கும் பொருந்தும் நேர்த்திக்காக விரும்பப்படுகின்றன. 

சந்த்பாலி (Chandbali) காதணிகள்

Chandbali

வை அவற்றின் தனித்துவமான பிறை அல்லது அரை நிலவு வடிவத்தால் வகைப்படுத்தப்படுகின்றன. இவை பொதுவாக முத்துக்கள், படிகங்கள் மற்றும் பிற ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்படும். அதனால்  இவை அலங்காரமான தோற்றத்தை தருகின்றன. பாரம்பரிய இந்திய திருமணங்கள் மற்றும் திருவிழாக்களில் சந்த்பாலி காதணிகள் மணப்பெண் நகை வகைகளில் பிரதான இடம் பிடிக்கின்றன.

இவை அழகு மற்றும் செழிப்பின் அடையாளமாக உள்ளது. பாரம்பரிய முக்கியத்துவம் பெற்றிருந்தாலும் நவீன பதிப்புகள் மற்றும் நவீன பாணிகளிலும் கிடைக்கின்றன. அணியும் ஆடைகளுக்கு ஏற்ற டிசைன்களில் இவற்றை பொருத்தமாக அணிந்து அழகை மெருகேற்றிக் கொள்ளலாம் மங்கையர்.       

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT