இன்றைய காலக்கட்டத்தில் நாளுக்குநாள் அழகு சாதனப் பொருட்களும், ஒப்பனைப் பொருட்களும் அசுர வளர்ச்சியை அடைந்துகொண்டிருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அழகு சாதனப்பொருட்களை ட்யூப்பில் அடைத்து கொடுத்தகாலம் மாறி, இப்பொழுதெல்லாம் சின்ன கேப்ஸூல் வடிவில் அவை வந்துவிட்டன என்பது பலருக்கும் தெரியாது.
இப்படி சருமத்திற்காகப் பயன்படுத்தும் க்ரீம், ஜெல் போன்றவை சின்ன கேப்ஸ்யூலில் வந்திருப்பது, அதன் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவே அமைந்துள்ளது. உதாரணத்திற்கு,
ஈவியான் 400 கேப்ஸூல் பற்றி பார்க்கலாம்:
நமக்கெல்லாம் பரிட்சயமான விட்டமின் ஈ கேப்ஸூலான ஈ வியான் 400 கேப்ஸூல்கள் சாதாரண மருந்து கடைகளிலேயே கிடைக்கும். இதைச் சரும பொலிவிற்காகவும், முடி வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தலாம். பத்து கேப்ஸூல்கள் கொண்ட ஒரு அட்டை ரூபாய் 200க்கு கிடைக்கும்.
இதுபோன்றே கோலாஜென், ஒமேகா 3, விட்டமின் சி போன்றவையும் கேப்ஸூல்களில் வந்துவிட்டன.
அழகு சாதன கிரீம்கள் கேப்ஸூலில் வருவதால் என்ன பயன்?
பயணம் செய்யும்போது சுலபமாக எடுத்துச்செல்லலாம்.
சிறிய வடிவத்தில் வருவதால் நிறைய இடத்தை அடைத்துக்கொள்ளாது.
அதிக அளவு கிரீம்களையோ ஜெல்களையோ வீணடிப்பதைத் தவிர்க்கலாம்.
இந்த கேப்ஸூல்களிலேயே கிளென்சர், மாய்ஸ்டரைஸர், சீரம் அனைத்தும் இருப்பது பயனுள்ளதாக இருக்கிறது.
இந்த கேப்ஸூல்கள் சிறிய வடிவில் இருப்பதால், அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் கெட்டுபோகாமல் நீண்ட நாட்கள் பயன் தரும்.