Face pack 
அழகு / ஃபேஷன்

ஃபேஸ்பேக்கை நீண்ட நேரம் முகத்தில் வைத்திருப்பீர்களா? போச்சு!

சுடர்லெட்சுமி மாரியப்பன்

சருமம் மென்மையாக இருக்க வேண்டும் என்று பலர் பல வித ஃபேஸ்பேக் பயன்படுத்துவதுண்டு. ஆனால் அந்த ஃபேஸ்பேக்கை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறீர்கள்? என்பதை சற்று சிந்தியுங்கள்.

சிலர் இரவு தூங்கும் போது ஃபேஸ்பேக் பயன்படுத்தி, காலையில் அதை அகற்றுவதுண்டு. அவ்வாறு செய்வது மிக தவறு. ஃபேஸ்பேக் பயன்படுத்துவது நல்லதுதான். ஆனால் அதை சரியான முறையில், பயன்படுத்துவது முக்கியம்.

உங்களின் நோக்கம் மென்மையான சருமத்தை பெறுவது என்பதால், அதிக நேரம் முகத்தில் ஃபேஸ்பேக்கை வைத்திருக்கும்போது அதை பெற முடியாமல் எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.

ஃபேஸ்பேக் பயன்படுத்துவதன் நன்மைகள்

ஃபேஸ்பேக் போட்டுக் கொள்வதன் மூலம், அதிக  வைட்டமின்கள் சருமத்திற்கு கிடைக்கின்றன. அவை உங்கள் சருமத்திற்கு கூடுதல் ஊக்கத்தை அளிக்கவும், சருமத்தை அழகுபடுத்தவும் உதவியாக இருக்கும்.

ஃபேஸ்பேக் பயன்படுத்தும் போது நாம் கவனிக்க வேண்டிய விஷயம்

முதலில் உங்களுடைய சருமத்தை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும். அதாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சருமத் தன்மை இருக்கும். வறண்ட சருமம், எண்ணெய் சருமம், சாதாரண சருமம், உணர்திறன் வாய்ந்த சருமம் மற்றும் கலவையான சருமம். இதில் உங்களுடைய சருமதிற்கு ஏற்ற ஃபேஸ்பேக்கை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஃபேஸ்பேக்கை நீண்ட நேரம் முகத்தில் வைத்திருக்கலாமா?

உண்மையில், ஃபேஸ்பேக்கை நீண்ட நேரம் முகத்தில் வைத்திருக்க கூடாது. ஒவ்வொரு ஃபேஸ்பேக்கிற்கும் நேரம் மாறுபடும்.

எடுத்துக்காட்டாக:

Clay masks: இந்த facemask-ஐ பயன்படுத்துவோர் 10-15 நிமிடங்கள் முகத்தில் வைத்திருந்தால் போதுமானது.

Sheet masks: இந்த facemask-ஐ பயன்படுத்துவோர், பேக்கேஜிங்கில் பரிந்துரைக்கப்பட்ட நேரத்திற்கு முகத்தில் வைத்திருக்கலாம். பொதுவாக என்று பார்த்தால், சுமார் 15-20 நிமிடங்கள்.

Cream or gel masks: இந்த ஈரப்பதமூட்டும் facemask-ஐ 30 நிமிடங்கள் வரை வைத்திருக்கலாம்.

ஃபேஸ்பேக்கை நீண்ட நேரம் முகத்தில் வைப்பதனால் ஏற்படும் விளைவுகள்

  • சில ஃபேஸ்பேக்கை நீண்ட நேரம் முகத்தில் வைத்திருப்பதால், அது உங்கள் சருமத்தின் அத்தியாவசிய ஈரப்பதத்தை அகற்றி, வறட்சி மற்றும் எரிச்சலுக்கு வழிவகுக்கலாம்.

  • முகப்பரு வெடிப்புகள் மற்றும் பிற சருமப் பிரச்சனைகளும் ஏற்படலாம்.

  • உணர்திறன் வாய்ந்த சருமத்தை எரிச்சலடையச் செய்து, சிவத்தல், அரிப்பு அல்லது ஒவ்வாமை போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.

எனவே ஃபேஸ்பேக்கை வெகுநேரம் முகத்தில் வைத்திருக்காமல், சரியான நேரத்தில் அகற்றுவது நல்லது.

ஆந்தைகள் இரவில் பார்ப்பது எப்படித் தெரியுமா?

வளர்சிறார்கள் வளர்சிதை மாற்றம் சிறப்புடன் நடைபெற உட்கொள்ள வேண்டிய உணவுகள்!

ஐந்தாம் நாள் - மகோன்னத வாழ்வருள்வாள் மஹாலக்ஷ்மி!

Scientists Best Quotes: அறிவியலாளர்களின் தலைசிறந்த15 மேற்கோள்கள்! 

ஒரே நாளில் மூன்று விதமான கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான்!

SCROLL FOR NEXT