Pregnant Lady 
அழகு / ஃபேஷன்

கர்ப்பக்காலத்தில் அழகு சாதன பொருட்களைப் பயன்படுத்தலாமா?

பாரதி

கர்ப்பக்காலத்தில் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தினால் என்ன தவறு? அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விகள் எழுகின்றனவா? இருக்கிறது. கர்ப்பக்காலத்தில் சில அழகு சாதன பொருட்களில் உள்ள ரசாயனம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

சருமத்தையும் கூந்தலையும் அழகாக்க வேண்டும் என்று மேலோட்டமாக பயன்படுத்தப்படும் பொருட்களை மட்டுமா பயன்படுத்துகிறோம்? உடல் மூலமும் சருமத்தை அழகாக்கும் முறைகளையும் பயன்படுத்துகிறோம் அல்லவா? இந்த முறையானது, உங்கள் ரத்தத்தில் தவறுதலாக ரசாயன பொருட்களக் கலந்து அது தாய்ப்பால் மூலமும் குழந்தைகளுக்கு செல்வதற்கு வாய்ப்புள்ளது.

அந்தவகையில் என்னவெல்லாம் செய்யக்கூடாது, பயன்படுத்தக்கூடாது என்று பார்ப்போம்.

1.  வேக்ஸிங் செய்வதை தடுக்கவும். உங்கள் கைகள் மற்றும் கால்களில் இருக்கும் முடிகளை அகற்ற உதவும் இந்த வேக்ஸிங் முறையில் தை கிளைகோலிக் அமிலம் உள்ளது. இந்த அமிலத்தை கர்ப்பக் காலத்தில் பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கலாம். ஆகையால், அதற்கு பதிலாக ஷேவிங் செய்யுங்கள்.

2.  அதேபோல் கரிம பொருட்கள் ஒவ்வாமையை உண்டாக்கி, சருமத்திற்கு ஆபத்தை உண்டாக்கும். இதனால் கர்ப்பக்காலத்தில் பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட பொருட்களை வாங்கிக்கொள்ளுங்கள். இது விலை மலிவும் கூட. பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

3.  சில சமயம் வாசனை திரவியங்கள் கூட ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சில வாசனை திரவியங்கள் கருவில் இருக்கும் குழந்தையின் ஹார்மோன் வளர்ச்சிக்கு எதிராக செயல்படுகின்றன. வாசனை திரவியங்கள், அறை ஃப்ரெஷ்னர்கள், டியோடரண்டுகள் போன்ற கடுமையான வாசனையுள்ள பொருட்களை கர்ப்பிணிகள் தவிர்க்கலாம்.

4.  டாட்டூ போட வேண்டும் என்ற ஆசை வந்தால், குழந்தைப் பிறந்த சில காலங்கள் கழித்து போடலாம்.

5.  சருமத்தைப் பராமரிக்கும் சில அழகு சாதன பொருட்களில் அதிகமாகவே ரசாயனங்கள் உள்ளன. ஆகையால், கர்ப்பக்காலத்திலும், பிரசவத்திற்கு பிறகும் அவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

6.  DHA (De Hydroxysten) ரசாயனங்கள் கொண்ட அழகு பொருட்களைப் பயன்படுத்துங்கள். Tans spray சில சமயம் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆகையால், இந்த காலத்தில் மட்டும் அதனைத் தவிர்த்துவிடுங்கள்.

இந்த ஆறு விஷயங்களை கவனத்தில்கொண்டு செயல்படுங்கள். உங்களுக்குள் ஒரு உயிர் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

SCROLL FOR NEXT