Trending dress... Image credit - pixabay.com
அழகு / ஃபேஷன்

இளம்பெண்களின் தற்போதைய ட்ரெண்டிங் உடைகள் பற்றித் தெரிந்து கொள்வோமே!

ஆர்.ஐஸ்வர்யா

பிளேர் வகை ஜீன்ஸ்கள் (Flare jeans)

Flare jeans

பிளேர் வகை ஜீன்ஸ்கள் இளம்பெண்களின் மனதிற்குப் பிடித்த உடை.  இந்தியாவின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற ஆடை இதுதான். மழையும் குளிரும் வெயிலும் என என்னவாக இருந்தாலும் சரி எல்லா காலத்திலும் அணிய சௌகரியமான ஆடை பிளேர் வகை ஜீன்ஸ்கள்.இதனை எந்த விதமான டாப் உடனும் பொருத்தமாக அணிந்து கொள்ளலாம் என்பது இதன் சிறப்பு.

போல்கா டாட் உடைகள்  (Polka dots dress)

Polka dots dress

போல்கா வகை உடைகள் இன்றைக்கு மட்டுமல்ல எக்காலத்திலும்  விரும்பப்படும் அழகான உடை. இதனை எந்த வயதினரும் அணிய முடியும் என்பது இதன் சிறப்பம்சம். யார் அணிந்தாலும் அவர்கள் வயதைக் குறைத்து அழகை அதிகரித்துக் காட்டும் தன்மை உடையது போல்கா டாட் உடை.

ஜம்ப் சூட்கள் (Jumpsuits)

Jumpsuits

ல்லாவிதமான சூழ்நிலைக்கும் பொருத்தமானதாக ஒரு ஆடை வேண்டும் என்றால் அது ஜம்ப் சூட் தான். பார்ட்டியா, சாதாரண நாளா எல்லாவற்றிலும் உங்களையே உற்று நோக்க வைக்கும் ஒரு ஆடைதான் ஜம்ப் சூட். ப்ளேசர் அல்லது ஸ்னீக்கர் இதற்கு பொருத்தமான தேர்வாக இருக்கும்.

ஷிம்மர் உடைகள் (Shimmer outfits)

Shimmer outfits

ஷிம்மர் உடைகள் வெப்ப நாட்டிற்கு ஏற்ற ஆடைகளில் ஒன்று. மிக எளிமையாக அதே சமயம் ஷைனிங் லுக் தேவைப்படுபவர்களுக்கு இந்த ஆடை பொருத்தமானது. அதற்கு மிக சரியான காலணி அணிந்து கொண்டால் தோற்றத்தை எடுப்பாகக் காட்டும்.

மிட் ட்ரெஸ் (Mid dress)

Mid dress

முழங்கால் வரையிலான ஆடைகள் அல்லது மிடி ஆடைகள் என்றும் அழைக்கப்படுபவை மிட் டிரஸ்கள். மிடி டிரஸ் எந்த வயதினருக்கும் மிகவும் பொருத்தமானது. மிடி ஆடையின் பாணி மற்றும் அலங்காரங்களைப் பொறுத்து,  அதை ஒரு சாதாரண நிகழ்வுக்கோ அல்லது பார்ட்டிகளுக்கோ அணியலாம். ஏர் ஹோஸ்டஸ் போன்ற  பெ ண்களுக்கு மிட் டிரெஸ்கள் ஒரு சிறந்த தேர்வாகும். ஒரு சிறந்த ஜோடி செருப்புகள், ஒரு ஜோடி பூட்ஸ்களுடன் அணியலாம்.

பெப்லம்  டாப்ஸ்; (Peplum tops)

Peplum tops

பெப்லம் டாப்ஸ் என்பது இடுப்பு பகுதியில் ஒரு அழகிய வளைவு போல அமைந்திருக்கும். பார்ப்பதற்கு ஸ்டைலிஷ் ஆக இருக்கும். இது பலவித வண்ணங்களில் பல்வேறு டிசைன்களில் கிடைக்கும். பாலியஸ்டர், காட்டன், ஷிபான், சில்க் போன்ற வகைகளில் இருக்கும். இவற்றை பல்வேறு சந்தர்ப்பங்களில்,  ஃபார்மல் உடையாகவும் கேசுவல் உடையாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT