இந்த கோடைக்கால வெயிலில் எத்தனை முறை குளித்தாலும் உடல் வியர்த்து கசகசவென்று ஆகிவிடும். ஆண்கள் முடியை அதிகமாக வளர்த்து கொள்ளாமல் நன்றாக ஒட்ட வெட்டி கொள்வார்கள். ஆனால் பெண்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறீர்களா? கோடைக்காலத்தில் நீளமான முடியை பராமரிப்பது சற்று கடினமாகவே இருக்கும். உங்களுக்காகத்தான் இந்த பதிவு. கோடைக்காலத்தில் பெண்கள் விதவிதமாக என்னென்ன ஹேர்கட் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
பிக்ஸி கட்(Pixie haircut)
இந்த வகை ஹேர்கட் பெண்களுக்கு டாம்பாய் தோற்றத்தை தரக்கூடியதாகும். நீளமான முடியை வைத்து பராமரித்து அலுத்துப்போனவர்கள் ஒரு மாற்றத்திற்காக இது போன்ற போல்ட் லுக்கான ஹேர்கட்டை செய்து கொள்வது சிறந்தது. அதுவும் இந்த சம்மருக்கு இதுபோன்ற ஹேர்கட் டிரெண்டாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மெஸ்ஸி பன்(Messy bun)
சில சமயங்களில் கூந்தலை பராமரிப்பதை விட்டு விட்டு தூக்கி ஒரு கொண்டை போட்டு கொள்வது சிறந்ததாகும். அதனாலேயே இதற்கு மெஸ்ஸி பன் என்ற பெயர் வந்தது. இருப்பினும் இந்த ஹேர் ஸ்டைல் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலான லுக்கை தரும் என்பதில் சந்தேகமில்லை.
பிரெஞ்ச் பாப் கட்(French bob cut)
சம்மர் என்றாலே மிகவும் பிரபலமான ஹேர்கட் பிரெஞ்ச் பாப் கட் தான். நீளமான அளவில் இல்லாமல் குறைவான அளவுமில்லாமல் இரண்டிற்கும் நடுவில் தோல்பட்டைஅளவிற்கு முடியை வெட்டிக்கொள்வதாகும். இது பார்ப்பதற்கு அழகாகவும் வெயில் காலத்தில் பராமரிக்கவும் சுலபமாகவும் இருக்கும்.
போனி டைல்(Pony tail haircut)
வெயில் காலத்தில் கூந்தல் கசகசவென்று மேல படாமல் இருப்பதற்கான சிறந்த ஹேர்ஸ்டைல் போனி டைல். முடியை அள்ளி எடுத்து தலைக்கு பின்னே கட்டிக்கொள்வது. பார்பதற்கு குதிரை வால் போல் இருப்பதால் இதற்கு போனி டைல் என்று பெயர் வந்தது. போனி டைல்லுடன் பேங்க்ஸ் சேர்த்து ஹேர் ஸ்டைல் செய்வது மேலும் முகத்தை அழகாக காட்டும்.
கர்ல்ஸ்(Curls)
கூந்தலை எப்போதும் ஒரே மாதிரி ஸ்டைல் பண்ணி அலுத்துவிட்டதா? அப்போது ஒரு மாற்றத்திற்கு கர்ல்ஸ் செய்து பாருங்கள். பார்பதற்கு நேர்த்தியாகவும், அழகாகவும் இருக்கும் இந்த ஹேர்கட் கூந்தலை அடர்த்தியாக காட்டும். கோடைக்காலத்திற்கு ஏற்ற சிறந்த ஹேர்கட்களில் இதுவும் ஒன்று.
பிரைட் (braid)
கோடைக்காலத்தில் கூந்தலை பின்னி போடுவதே சிறந்ததாகும். வெயில்காலத்தில் முடி அதிகமாக கொட்டுவதை தடுப்பதற்கான சிறந்த வழி கூந்தலை நன்றாக பின்னி பராமரிப்பதேயாகும். இந்த சம்மரில் இதுபோன்ற டிரெண்டிங்கான ஹேர் கட்களை செய்து கொள்வது ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.