பொதுவாகவே கெமிக்கல் ப்ளீச்களை கைவிட்டு, முகத்திற்கு மட்டும் இயற்கையான ப்ளீச்சினை நம்புவது நமக்கு நல்லது.முகத்திற்கான ப்ளீச் என்பது சருமத்தின் நிறத்தைப் பெறவும், கருமையான திட்டுகளைக் குறைக்கவும் மற்றும் கறைகளைக் குறைக்கவும் ஒரு சிறந்த வழியாகும். முகப்பரு தழும்புகள், தழும்புகள், ஹைப்பர் பிக்மென்டேஷன், தோல் பதனிடுதல் மற்றும் மெலஸ்மா போன்ற தோலின் நிறமாற்றத்தை குறைக்க முகத்தை ப்ளீச்சிங் உதவுகிறது.
ப்ளீச் செய்ய நமக்கு தேவையான பொருட்கள்:
முட்டையின் வெள்ளை கரு – 2 ஸ்பூன்,
லெமன்ஜூஸ் – 1 ஸ்பூன், தேன் – 1 ஸ்பூன்,
பேக்கிங் பவுடர் அல்லது பேக்கிங் சோடா – 1 சிட்டிகை,
கான்பிளவர் மாவு – 1 டேபிள் ஸ்பூன்.
முதலில் ஒரு சின்ன பவுலில் முட்டையின் வெள்ளை கருவை ஊற்றி ஒரு ஸ்பூன் அல்லது விஸ்கை வைத்து நன்றாக அடித்து கலக்க வேண்டும்.
முட்டையின் வெள்ளை கருவில் நுரை வரும். அது வரைக்கும் கலந்து விடுங்கள்.
அதன் பிறகு பேக்கிங் சோடா, தேன், எலுமிச்சம் பழச்சாறு, ஊற்றி
மீண்டும் கை விடாமல் ஒரு நிமிடம் போல அடித்து கலந்து கொள்ளுங்கள்.
இறுதியாக கான்பிளவர் மாவு சேர்த்து கட்டிகள் இல்லாமல் அடித்து கலக்க வேண்டும்.
இதை ஒரு பிரஷை கொண்டு முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.
முகத்தை சுத்தமாக கழுவி துடைத்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு இந்த பேக்கை தொட்டு முகம், கழுத்து முழுவதும் தடவி அப்ளை செய்து 5 நிமிடம் கழித்ததும் முகம் அப்படியே இறுக்கிப் பிடிக்க தொடங்கும்.
இதில் முட்டையின் வெள்ளை கரு இருப்பதால் ஸ்கின்னை டைட் செய்யும்.
15 நிமிடம் கழித்த பிறகு பேக் நன்றாக காய்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட்டு பாருங்கள். முகம் ப்ளீச் செய்வது போல பளிச்சுன்னு இருக்கும்.