அழகு / ஃபேஷன்

ஹேர் கலரிங் செய்ய போறிங்களா ? அப்ப இதை படிங்க...?

கல்கி டெஸ்க்

இன்றிய நவீன உலகினில் அழகாக இருக்க வேண்டும் என்பதை யார் தான் விரும்புவதில்லை. தங்களை அழகுபடுத்தி காட்டுவதில் ஆண், பெண் வித்தியாசமின்றி இருக்கிறார்கள் என்பதே யதார்த்தம். தற்போது தலைமுடி அழகினை பராமரிக்க அனைவருமமே ஹேர் கலரிங் கலச்சாரத்திற்கு மாறி வருகின்றனர். இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே ஹேர் கலரிங் செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதுவும் தற்போது கெமிக்கல் இல்லாத ஆர்கானிக் கலர்கள் கிடைப்பதால், இளம் பெண்கள் மத்தியில் ஹேர் கலரிங் செய்து கொள்ளும் பழக்கம் அதிகமாகிவிட்டது. இளம் பெண்கள் முதல் வயதான பெண்மணி வரை ஹேர் கலரிங் செய்து அசத்தி வரும் இந்த சமயத்தில், முடியின் நிறத்தை நீட்டிக்க என்ன செய்ய வேண்டும், எதையெல்லாம் செய்யக்கூடாது என தெரிந்து கொள்வோமே...!

ஹேர் கலரிங் செய்யும் பொது கவனிக்க வேண்டியவை :

ஹேர் கலரை பயன்படுத்துவதற்கு முன்னதாக உங்களுக்கு அலர்ஜி உள்ளதா என்பதை பரிசோதித்து பார்க்க வேண்டும்.

ஹேர் கலரிங் முறை, பராமரிப்பு, முடி தொடர்பான சிக்கலைத் தடுக்க கூடிய சிகிச்சை முறைகள் ஆகியவற்றை நன்றாக அறிந்து கொண்டே பிறகே ஹேர் கலரிங் செய்ய முடிவெடுங்கள்.

ஹேர் கலரிங் செய்பவர்கள், நிரந்தமாக செய்து கொள்வதா அல்லது தற்காலிகமாக செய்து கொள்வதாஎன்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

ஹேர் கலரிங் செய்வதற்காக பயன்படுத்தப்படும் வண்ணங்கள், திரவம், பவுடர், ஆயில் கிரீம்கள் மற்றும் ஜெல்கள் உட்பட பல வகைகளில் கிடைக்கிறது. அம்மோனியா இல்லாத நிரந்தர வண்ணங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

நிரந்தர ஹேர் கலரிங் செய்வதற்காக ஜெல் மற்றும் பிற பொருட்கள் ஆகியவையும், தற்காலிக மற்றும் குறிப்பிட்ட காலம் நிரந்தரமாக இருக்கும் செமி-பெர்மனன்ட்கலரிங் செய்வதற்காக, மஸ்காரா, கிரேயான்ஸ் மற்றும் வண்ண கூந்தல்ஸ்பிரேக்கள் ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன.

கூந்தலின் நீளத்தை பொறுத்து, அதற்கு ஹேர் கலரிங் செய்வதற்கான செலவும் ஏற்படும். குட்டையான மற்றும் நடுத்தர அளவிலான கூந்தல் வகைகளுக்கு, “ஹேர்கலரிங் செய்தால், மிக அழகாக தோற்றமளிக்கும்.

நரை முடியை மறைப்பதற்காக ஹேர் கலரிங் செய்ய விரும்புபவர்கள், நிரந்தமானஹேர் கலரிங் முறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

ஒட்டு மொத்த கூந்தலையும் ஹேர் கலரிங் செய்து கொள்ளுவதா? அல்லது அங்கங்கே ஹைலைட் மட்டும் செய்து கொள்ளுவதா என்பதையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

ஹைலைட்டிங், ஸ்ட்ரீக்கிங், பிராஸ்டிங், பிங்கர் பெயின்டிங் ஆகியவை ஹேர்கலரிங் செய்யப்படும் பல்வேறு முறைகள். இருக்கிறது .

இன்றைய நவீன இலாம் தலைமுறையினர் பொதுவாக, ஹை லைட்டிங் மற்றும் ஸ்ட்ரீக் கிங் ஆகியவற்றையே விரும்புகின்றனர். கூந்தல் பல பாகங்களாக பிரிக்கப்பட்டு வண்ணங்கள் பூசப்படுவதற்கு “ஹைலைட்டிங் என்று பெயர்.

பிரவுன் மற்றும் கோல்டன் நிறங்கள், மாநிற சருமத்தினருக்கும் சிவப்பு நிறம், நல்ல வெண்மையான சருமத்தினருக்கும் பொருத்தமாக இருக்கும் என, நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஹேர் கலரிங் செய்வதை விட அதனை பராமரிப்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் ஒவ்வொரு வண்ணத்திற்கும் என தனித்துவமான கவனிப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் உள்ளன.

உங்கள் ஹேர் கலருக்கு ஏற்ற ஷாம்பு, கண்டிஷனர், ஹேர் மாஸ்க் மற்றும் லீவ்-இன் கண்டிஷனர்களை பயன்படுத்துவது அவசியம்.

ஹேர் கலரிங் சிகிச்சை அதிகப்படியான ரசாயனங்களைக் கொண்டிருப்பதால், முடியை கலர் செய்த பிறகு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக சருமம் மற்றும் ஹேர் கேர் நிபுணர்களை அல்லது மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

சிறுகதை - அகழாய்வில் ஓர் அதிசயம்!

வாங்க விமானத்தில் பறக்கலாம்!

ஹேர் கலரிங் பண்ணிக்கொள்ள ஆசையா? கவனிக்க வேண்டியது என்ன? எந்த வகையான கலரிங் நல்லது?

சிரித்து வாழ வேண்டும்!

உடலை இலகுவாக வைக்கும் ஆரோக்கிய உணவுகள்!

SCROLL FOR NEXT