(1) பழுத்த பப்பாளி பழத்துண்டில் ஒன்றை எடுத்து முகம், கழுத்து, பாதம் பகுதிகளில் தேய்த்து பயத்தமாவு அல்லது கடலைமாவு கொண்டு தேய்த்து கழுவினால் வறண்ட தோலும் மினுமினுக்கும்.
(2) சாதிக்காய், சந்தனம், மிளகு ஆகியவற்றை சம அளவில் எடுத்து சேர்த்து அரைத்து இந்த விழுதை முகப்பருவில் தொடர்ந்து தடவிவந்தால் முகப்பரு மறைந்து விடும்.
(3) வாரம் ஒருமுறை கருவேப்பிலை அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். வாரம் ஒரு நாள் காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பிலையை அரைத்து உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் இளநரை மாறும்.
(4) வேப்பங்கொழுந்தை மை போல அரைத்து சில சொட்டு நல்லெண்ணெய் சேர்த்து பருக்கள் மீது தடவி வந்தால் விரைவில் ஆறிவிடும்.
(5) பொட்டு வைத்த இடத்தில் அரிப்பும், புண்ணும் வந்தால் வில்வமரகட்டையை சந்தணத்துடன் அரைத்து அதன் குழம்பை பூசி வந்தால் புண் குணமாகும்.
(6) அரை ஸ்பூன் தேனுடன், ஒரு சிட்டிகை பட்டை பொடி கலந்து சருமத்தில், அப்ளை செய்ய வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர, சருமம் மென்மையாக காணப்படும். மேலும் சருமம் பளபளப்பாக காணப்படும்.