Plus size dresses... image credit - pixabay.com
அழகு / ஃபேஷன்

பிளஸ் சைஸ் பெண்களுக்கு ஏற்ற ஆடை வடிவமைப்புகள்!

கல்கி டெஸ்க்

-மரிய சாரா

ழகும் ஸ்டைலும் உங்களுடையதே. ஒவ்வொருவருமே அவரவரைப் பொருத்த அளவில் மிகவும் அழகானவர்கள், தனித்துவமானவர்கள்தான்.

ஆடை என்பது ஒருவரின் உடலை மறைப்பதற்கு மட்டுமானதல்ல; ஒருவரது தனித்துவத்தையும் தன்னம்பிக்கையையும் உயர்த்துவதற்குமானததுதான். நான் குண்டாக இருக்கிறேன் என நினைக்கும் பெண்கள் உடைகளைத் தேர்ந்தெடுப்பதில் சில வழிமுறைகளைப் பின்பற்றுவதுதோடு,  நான் எனக்குப் பிடித்தவாறு இருப்பதுதான் எனது அழகு என தன்னம்பிக்கையும் கொண்டு இருந்தால்தான் உண்மையாகவே அழகாகத் தெரிவார்கள். அப்படியான சில குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.

1. முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்:

இதுதான் அழகு; இது அழகு இல்லை என யாரும் சொல்லிவிட முடியாது. நாம் ஒவ்வொருவருமே அனைத்திலும் அழகுதான். ஆழ்மனதில் விதைக்கப்படும் இந்த உயரிய சிந்தனைதான் நாம் சமூகத்தில் மனவலிமையுடன் அனைத்தையும் எதிர்கொள்ளத் தேவையான முதல் அம்சம்.  

2. உங்கள் உடல் வகையை அறிந்துகொள்ளுங்கள்:

உங்களின் உடலின் வடிவம் apple shape, pear shape, என எந்த வகையானது என்பதை தெளிவுபடுத்திக்கொள்வது, அதற்குத் தகுந்தாற்போல் உங்கள் உடைகளை நேர்த்தியாக தேர்வு செய்து அணிவதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். A-line ஷர்ட்டுகள், டிரஸ்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது ப்ளஸ் சைஸ் உடலமைப்பு உள்ளவர்களின் உங்கள் இடுப்பைச் சமப்படுத்தி ’சிக்’கெனக் காட்டும்.

3. வண்ணங்கள் மற்றும் துணிகளின் தன்மை

நீங்கள் chubby ஆக இருப்பதால் print போடப்பட்ட துணிகளை மொத்தமாக தவிர்க்க வேண்டாம். லைட் கலர் துணிகளைத் தவிர்த்து எப்போதும் டார்க் கலர் துணிகளை அணிவது உங்களை மேலும் அழகாக காட்டும்.  நெகிழ்வு தன்மை அதிகமாக உள்ள துணிகள் உங்களுக்கு ஏற்றவை.

 4. உங்கள் பாடி ஷேப்பிற்கு ஏற்ற ஆடைகள்

நீண்ட குர்த்தாக்கள் (long Kurthis) மற்றும் சல்வார் (salwar) பலாசோ (palaso) உங்களை உயரமாகக் காட்டும் என்பதால் நீங்கள் இன்னும் தன்னம்பிக்கையுடன் நடை போடலாம். Jersey, cotton blends and knits முதலிய துணிகளில் வடிவமைக்கப்படும் ஆடைகள் இறுக்கமான உணர்வைத் தவிர்ப்பதோடு, நீங்கள் மிகவும் இலகுவாக, இயல்பாக நடக்கவும் உதவும்.

5. ஆடை கச்சிதமாகப் பொருந்துவதுதான் முக்கியம்:

நீங்கள் எந்த சைஸ் உடல் உள்ளவராக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் தன்னம்பிக்கையுடன் வலம் வர உங்கள் சைஸ் ஒரு பெரிய தடையே இல்லை. உங்கள் உடல் அளவுக்கு தகுந்த சரியான fitting இருக்கும் ஆடைகளை தேர்வு செய்து அணிவதன் மூலம் உங்கள் மீதும் உங்கள் உடைகளின் மீதும் உங்களுக்குத் தனி பிரியம் ஏற்படுவதை நீங்கள் உணர முடியும்.

6. தன்னம்பிக்கையே ஆயுதம்:

எந்த உடை உடுத்தினாலும் மனதில் தன்னம்பிக்கை எனும் ஆடை மட்டுமே சரியாகப் பொருந்தும். நீங்கள் தன்னம்பிக்கையுடன் திடமாய் இருந்தால், எந்த உடையிலும் செல்லலாம். உங்களின் மதிப்பும் அழகும்,  உங்களின் உடலிலும், உங்கள் ஆடையிலும் வெளிப்புறத் தோற்றத்திலும் இல்லை என்பதை உணர்வதே நீங்கள் அழகாய் தெரிய காரணமாக அமையும். நீங்களே உலகில் மிகவும் அழகானவர். உங்களை முதலில் நீங்கள் நேசியுங்கள். பின் உலகம் தானாய் நேசிக்கும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT