மரு ஒரு சிலருக்கு அழகையும் கொடுக்கும், சிலருக்கு தேவையில்லாத இடத்தில் தோன்றி அழகை கெடுக்கவும் செய்யும். இதனால் மக்கள் மருவை எடுக்கவே முயற்சிப்பர். ஆனால் எப்படி எடுப்பது என தெரியாமல் தவறாக முயற்சித்து அது வேறு ஏதோ பிரச்சனையில் கொண்டு போய்விடும். அதன் பிறகு மருத்துவர்களை அணுகி எந்த பலனும் இல்லை. நாளடைவில் சிகிச்சை பெற்று அதை சரி செய்வார்கள். இதற்கு நிறைய செலவும் ஆகும். ஆனால் எளிய வழியில் மருவை எடுக்க இதோ சில டிப்ஸ்..
செலஃபைன் டேப் கொண்டு நீக்கலாம்
உடலில் எந்த இடத்தில் மரு தோன்றியதோ, அந்த இடத்தில் டக்ட் டேப் அல்லது செலஃபைன் டேப்பை ஒட்டிவிட வேண்டும். தண்ணீர் எதுவும் உட்புகாத வண்ணம், அதை அப்படியே ஒட்டி வைக்க வேண்டும். குறைந்தது ஆறு நாட்களுக்கு அதை அப்படியே விட்டுவிட வேண்டும். குறிப்பிட்ட நாட்களைக் கழித்து அதை நீங்கள் நீக்கிய பிறகு, அந்த இடத்தை தண்ணீர் கொண்டு குறைந்தது 20 நிமிடம் கழுவ வேண்டும். உங்களிடம் ஃப்யூமிஸ் ஸ்டோன் இருந்தால், அதன்மீது மெதுவாக தேய்க்கவும். மருக்கள் உடனடியாக விழுந்திடும்.
தேயிலை மரத்தின் எண்ணெய்
பலருக்கும் அறியாத வழிமுறை இது. தேயிலை மர எண்ணெய்யின் மூலம் மருக்களை எளிதாக நீக்கலாம். தேயிலையில் இருந்து எண்ணெய் தயாரிக்கப்படுவதும் பலருக்கும் புதிய தகவலாக இருக்கும். உங்களுக்கு தேயிலை எண்ணெய் கிடைத்தால், அதை மூன்று சொட்டு மட்டும் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சில துளி ஆமணகுக்கு எண்ணெய்யையும் கலந்துகொள்ள வேண்டும். அதை மருக்கள் உள்ள பகுதிகளில் தேய்த்து வரவேண்டும். ஒரு வாரம் இப்படி செய்து வந்தால், விரைவாகவே மருக்கள் உதிர்ந்துவிடும்.
நெயில் பாலிஷ்:
மருக்களின் மீது இரண்டு அல்லது மூன்று அடுக்கு வரை நெயில்பாலிஷ் வைக்கவும். இதை நாளொன்றுக்கு 2 முதல் 3 முறை செய்யவும். இது மருவுக்கு செல்லும் ஆக்ஸிஜன் விநியோகத்தை குறைக்க உதவுகிறது. இதனால் மருக்கள் விழலாம்.