Beauty tips Image credit - pixabay
அழகு / ஃபேஷன்

உங்கள் மூக்கின் ஓரங்களில் உள்ள கருமை நீங்க எளிய வழிகள்!

எஸ்.மாரிமுத்து

மது சமையல் அறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டே மூக்கை சுற்றிய பகுதிகளில் இருக்கும் கருமையை சரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

எலுமிச்சை

எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஒரு பழத்தை வெட்டிய பாதியை மூக்கின் வெளிப்பகுதியில் இருக்கும் கருமையை கிளப் செய்யுங்கள். இதனை வாரம் மூன்று முறை செய்து வந்தால் கருமை மறையும்.

கற்றாழை

கற்றாழை ஜெல்லை எடுத்து கருமை இருக்கும் பகுதியில் தடவி உலர விட்டு பின் நேரில் கழுவவும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் கருமை மறையும்.

முட்டை

முட்டையின் வெள்ளை கருவை தேன் சேர்த்து கலந்து மூக்கின் ஓரங்களில் மென்மையாக தேய்த்து உலரவிட்டு பின் நீரில் கழுவவும். இப்படி தினமும் செய்து வந்தால் கருமை மறையும்.

தக்காளி

தக்காளியில் உள்ள ஆன்ட்டி செப்டி தன்மையை கருமையை எளிதில் வெளியேற்றும் தன்மை உண்டு. தக்காளியை வெட்டி அதனை சருமத்தில் 15 நிமிடங்கள் மசாஜ் செய்து  உலர விட்டு கழுவி வந்தால் நாளடைவில் கருமை மறையும்.

வினிகர்

வினிகருடன் தண்ணீர் அல்லது தயிர் சேர்த்து மூக்கை சுத்தி பகுதிகளில் கண்களில் படாமல் தடவி உலரவிட்டு கழுவி வந்தால் கருமை மறைந்து சருமம் அழகாகும்.

யோகார்ட்

யோகர்டில் லாக்டிக் அமிலம் மற்றும் ப்ளீச்சிங் தன்மை நிறைந்துள்ளது. மூக்கை சுற்றிய பகுதியில் தடவி உலரவிட்டு நீரில் கழுவி வர மறையும் வாரம் இரண்டு நாட்கள் செய்து வந்தால் போதும்.

ஆரஞ்சு பழம்

ஆரஞ்சு பழ ஜூஸ் எடுத்து அதில் மஞ்சள்தூள் கலந்து பேஸ்ட் செய்து மூக்கில் கருமை நிறப் பகுதியில் தடவி இரவு முழுவதும் உலரவிட்டு மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால்கருமை மறைந்து நல்ல பலன் கிடைக்கும்.

தேன்

தேனை முகத்தில் தடவி  உலரவைத்து  கழுவினால், சருமத்தில் உள்ள எண்ணெய் நீங்கி, கருமையும் நீங்கும்.

தேங்காய் எண்ணெய்

எலுமிச்சைசாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து கருமை நிறப் பகுதியில் இரவில் தடவி மறுநாள் கழுவி வந்தால் கருமை நிறம் மறையும். இதனை ஒருநாள் விட்டு ஒருநாள் செய்து வந்தால் கருமை நீங்கி முகமும் அழகாகும்.

இதில் ஏதாவது ஒன்றை விடாமல் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

உங்க ஸ்மார்ட்போனில் இருக்கும் PDF File-களை உடனே டெலிட் பண்ணுங்க! 

ஸ்டீவ் ஜாப்ஸ் கூறிய 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்! 

இயர் பட்ஸ் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

உற்பத்தி கருவிகளை போற்றும் ஆயுத பூஜை நன்னாள் - பாரம்பரியமும் வழிபாட்டு முறைகளும்!

கருப்பைத் தொற்று அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தீர்வுகள்!

SCROLL FOR NEXT