Hirsutism 
அழகு / ஃபேஷன்

பெண்களை பாதிக்கும் Hirsutism பற்றிய முழு விபரங்கள்! 

கிரி கணபதி

பெண்களின் உடல் முழுவதும் தேவையற்ற முடிகள் வளர்வதுதான் Hirsutism எனப்படும் ஒருநிலை. இது பெண்களின் அழகையும் மன உறுதியையும் பாதிக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை. இதனால் பாதிக்கப்படும் பெண்கள் மனதளவிலும், சமூகத்திலும் பெரும் சிக்கல்களை சந்திக்கின்றனர். இந்த பதிவில் Hirsutism பற்றிய சில முக்கியமான தகவல்களைப் பார்க்கலாம். 

Hirsutism-ஆல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆண்களைப் போலவே அதிகமாகவும், பொதுவாக ஆண்களுக்கு வளரும் பகுதிகளிலுமா முடி வளரும். இது பெரும்பாலும் மரபணு காரணிகளாலும், ஹார்மோன் ஏற்ற இறக்கங்களாலும் ஏற்படுகிறது. இந்த நிலை பெண்களின் மனோபாவத்தை பாதித்து, தனிமைப்படுத்தலுக்கு வழிவகுக்கிறது.

ஹைர்சூட்டிசத்திற்கான காரணங்கள்: 

  • ஆண்களில் காணப்படும் டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஆன்ட்ரோஜன் ஹார்மோன்களின் அளவு பெண்களில் அதிகரிப்பது ஹைர்சூட்டிசத்திற்கு முக்கிய காரணமாகும்.

  • PCOS என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான ஹார்மோன் கோளாறு. இது மாதவிடாய் கோளாறுகள், ஆண்ட்ரோஜன் அதிகரிப்பு மற்றும் சிஸ்டிக் கட்டிகள் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. PCOS உள்ள பெண்களில் ஹைர்சூட்டிசம் பொதுவாக காணப்படுகிறது.

  • கார்டிசோல் என்பது நம் உடலில் இயற்கையாகவே உற்பத்தியாகும் ஒரு ஸ்டீராய்ட் ஹார்மோன். இது அதிகரிக்கும் போது ஆன்ட்ரோஜன் உற்பத்தியை அதிகரித்து ஹைர்சூட்டிசத்தை ஏற்படுத்தலாம்.

  • சிலருக்கு குழந்தைப் பருவத்தில் மிகவும் அரிதாக ஏற்படும் அட்ரீனல் குருளை நோய் ஹைர்சூட்டிசத்தை ஏற்படுத்தலாம்.

  • சில குடும்பங்களில் ஹைர்சூட்டிசம் மரபணுவாக கடத்தப்படலாம். 

ஹைர்சூட்டிசத்தின் அறிகுறிகள்:

  • முகம், கழுத்து, மார்பு, வயிறு, தொடை மற்றும் முழங்கால் போன்ற பகுதிகளில் ஆண்களுக்கு ஏற்படும் அளவுக்கு அதிகமாக முடி வளர்வது.

  • சருமம் அதிக எண்ணெய்ப்பதமாக இருப்பது.

  • முகப்பரு.

  • தலைமுடி மெலிந்து போவது.

  • மாதவிடாய் கோளாறுகள்.

  • உடல் எடை அதிகரிப்பு.

  • வளரும் வயதில் பருவமடைதல் தாமதமாகும்.

சிகிச்சைகள்: ஹைர்சூட்டிசத்திற்கான சிகிச்சை அது எதனால் ஏற்பட்டது என்ற காரணத்தைப் பொறுத்து மாறுபடும். எனவே உங்களுக்கு இந்த பாதிப்பு இருக்கிறது என தோன்றினால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது.  

இந்த பாதிப்பை முற்றிலும் தடுக்க முடியாது என்றாலும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் அதன் தாக்கத்தை குறைக்கலாம். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள புரதங்கள் நிறைந்த உணவை உண்ணுங்கள். உடல் எடை அதிகரிப்பு ஹைர்சூட்டிசத்தை மோசமாக்கும். எனவே உடல் எடையைப் பராமரியுங்கள். 

ஹைர்சூட்டிசம் பெண்களின் தன்னம்பிக்கையையும், வாழ்க்கைத் தரத்தையும் பெரிதும் பாதிக்கிறது. இது ஒரு சிகிச்சை அளிக்கக்கூடிய நிலை. ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை பெறுவதன் மூலம் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT