Benefits of vitamin c serum Image Credits: Re'equil
அழகு / ஃபேஷன்

'விட்டமின் சி' சருமத்திற்கு எவ்வாறு பயன்படுகிறது? முழுமையாக தெரிந்து கொள்ளலாம் வாங்க!

நான்சி மலர்

விட்டமின் சி யை நம்முடைய உடலால் தானாக உற்பத்தி செய்ய இயலாது. அதனால்தான் காய்கறி, பழங்கள் மூலமாக இதை உடல் ஆரோக்கியத்திற்கும், சரும பாதுகாப்பிற்காகவும் எடுத்து கொள்கிறோம்.

ரெட்டினாய்டிற்கு பிறகு விட்டமின் சி தான் நம் சருமத்திற்கு நல்ல பொழிவை தரக்கூடியதாகும். விட்டமின் சி யால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்றால், கோலாஜென் அதிகரிப்பு, சருமப் பொலிவை ஏற்படுத்தும், சருமத்தில் உருவாகும் மெலானின் அதிகரிப்பை குறைப்பதனால் சருமம் பளபளப்பாகும்.

விட்டமின் சி ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட் அதனால் சூரியனிலிருந்து சருமத்திற்கு பாதுகாப்பு தரும். இந்த காரணத்திற்காகத்தான் விட்டமின் சியை நிறைய சன் ஸ்கிரீனில் சேர்த்திருப்பார்கள். விட்டமின் சி நம்முடைய Skin barrier இல் இருக்கும் லிப்பிட்ஸ்ஸூடைய உற்பத்திக்கு இது பெரிதும் உதவுகிறது. நம்முடைய உடலில் எங்காவது அடிபடும்போது அதை சரிசெய்யவும் விட்டமின் சி பயன்படுகிறது.

முதல் முறை விட்டமின் சி சீரமாக பயன்படுத்துபவர்கள் இதை இரவில் பயன்படுத்துவது நல்லது. சிலருக்கு இது ஏற்றுக்கொள்ளலாம். சிலருடைய சருமம் இதை ஏற்றுக்கொள்ளாமால் ஆக்னே(Acne) வரலாம். அதனால் இரவில் பயன்படுத்துவது சிறந்தது. அதன் பிறகு சருமம் பழகியதும் இதை காலையில் சருமப்பராமரிப்பில் பயன்படுத்த தொடங்கலாம். Pigmentation, dullness, uneven skin tone இருப்பவர்கள் கண்டிப்பாக விட்டமின் சியை பயன்படுத்த வேண்டும்.

விட்டமின் சியில் பல வகைகள் உள்ளன. அதில் மிகவும் சிறந்தது L-Ascorbic acid என்பதாகும். அதுமட்டுமில்லாமல் 10-20% உள்ளதாக இருக்க வேண்டும். அப்போதுதான் உடனடியாக பலன் தரும். விட்டமின் சி யுடன் விட்டமின் ஈயும் சில Product ல் சேர்த்து பயன்படுத்தியிருப்பார்கள் அதுவும் சருமத்திற்கு மிகவும் நல்லதாகும்.

விட்டமின் சி சூரிய ஒளியில் படும்போது விரைவில் அக்ஸிடைஸ் ஆகிவிடும். இது ஆக்ஸிடைஸ் ஆகும்போது இதன் நிறம் பிரவுனாக மாறிவிடும். அதன் பிறகு இதை பயன்படுத்துவதில் பயனில்லை. எனவே விட்டமின் சி Package மிகவும் முக்கியமாகும். இது கருப்பு கண்ணாடி பாட்டில்களில் வரும் சீரமாக வாங்கி கொள்வது சிறந்தது. இதனால் சீரம் ஆக்ஸிடைஸ் ஆகாததால் அதிக நாள் வைத்து பயன்படுத்தலாம்.

ஒரு சிலருக்கு மிகவும் சென்சிட்டிவாக இருக்கும் சருமத்தில் சீரம், க்ரீம் போன்றவற்றை போட இயலாத போது அவர்கள் விட்டமின் சியை மாத்திரை வடிவத்தில் எடுத்துக் கொள்ளலாம். விட்டமின் சி சீரத்தை குறைந்தது தொடர்ந்து  3 மாதங்கள் பயன்படுத்தினால் மட்டுமே பலன் தெரியும். எதுவாக இருந்தாலும் எப்போதுமே சருமம் தொடர்பாக எந்த க்ரீமை பயன்படுத்துவதற்கு முன்பும் ஒரு நல்ல சரும மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது சிறந்ததாகும்.

பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ்: Hot Flashes என்றால் என்ன? கையாள்வது எப்படி?

இந்த சின்னஞ்சிறு காயில் ஒளிந்திருக்கும் சூப்பர் நன்மைகள் தெரியுமா?

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

SCROLL FOR NEXT