How to Get Rid of Pimples on Shoulders and Back 
அழகு / ஃபேஷன்

தோள்பட்டை மற்றும் முதுகுப் பகுதியில் உள்ள பருக்களை நீக்கும் வழிகள்!

கிரி கணபதி

பருக்கள் என்றாலே வெறுப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். அவை பெரும்பாலும் முகத்தில் மட்டுமே தோன்றும் என கருதப்படுவதுண்டு. ஆனால் நமது உடலில் எந்த பகுதிகளிலும் பருக்கள் ஏற்படலாம். குறிப்பாக, முதுகு மற்றும் தோல் பகுதிகளில் ஏற்படும் பருக்கள் நமக்கு கவலையை ஏற்படுத்தும். வியர்வை, அதிகப்படியான எண்ணெய் மற்றும் உராய்வு காரணங்களால் இப்பகுதிகளில் பருக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களது தோள்பட்டை மற்றும் முதுகில் பருக்கள் இருந்தால், அதை எப்படி சரி செய்வது என்பதற்கான சில பயனுள்ள குறிப்புகளை இப்பதிவில் பார்க்கலாம். 

பருக்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தமாகவும், அதிகப்படியான எண்ணெய் மற்றும் வியர்வை இல்லாமலும் வைத்துக் கொள்ளுங்கள். பரு பாதிப்புக்காக உருவாக்கப்பட்ட க்ளென்சர்களைப் பயன்படுத்தி அவ்வப்போது சுத்தம் செய்யலாம். கைகளால் அழுத்தி தேய்ப்பதை தவிர்க்கவும், ஏனெனில் இது பருக்களின் தன்மையை மோசமாக்கும். 

பருக்கள் இருக்கும் பகுதிகளில் இறந்த செல்களை நீக்குவதற்கு எக்ஸ்போலியட் செய்யுங்கள். இது பரு உருவாவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. வாரம் இரண்டு முறையாவது பிரஷ் பயன்படுத்தி, பரு இருக்கும் பகுதியை நன்றாக தேய்த்துக் கழுவுங்கள்.

தளர்வான ஆடைகளை ஆடைகளை அணிவது பருக்கள் ஏற்படுவதை தடுக்கிறது . இறுக்கமான ஆடைகள் உங்கள் சருமத்திற்கு எதிராக வியர்வை மற்றும் எண்ணெயை சிக்க வைத்து பருவின் நிலைமையை மோசமாக்கும். பருத்தி போன்ற காற்று எளிதாக ஊடுருவக்கூடிய துணிகளால் செய்யப்பட்ட தளர்வான ஆடைகளை தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தவும். இது உங்களது சருமம் சுவாசிக்க அனுமதித்து பருக்கள் உருவாகும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.

ஷாம்புகள், கண்டிஷனர்கள் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் சோப்புகள் போன்றவற்றை கவனத்துடன் பயன்படுத்தவும். இத்தகைய தயாரிப்புகளில் உள்ள சில ரசாயனங்கள் உங்களது பருவின் நிலையை மோசமாக்கும். எனவே அதிக ரசாயனங்கள் இல்லாத பொருட்களை பயன்படுத்தவும். 

முதுகில் உள்ள பருக்களுக்கென்று உருவாக்கப்பட்ட மேற்பூச்சுகளை பயன்படுத்தவும். இது உங்கள் தோள்பட்டை மற்றும் முதுகில் உள்ள பருக்களுக்கு விரைவான தீர்வைக் கொடுக்கும். இத்துடன் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது உங்கள் சருமத்தை வறட்சியில் இருந்து மீட்டெடுக்கும். 

பருக்களை கில்லவோ அல்லது கசக்கவோ வேண்டாம். அவ்வாறு செய்வது மேலும் வீக்கம், வடுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் பரவுவதற்கு வழிவகுக்கும். உங்கள் பருக்கள் தானாக குணமடையும் வழிகளைப் பின்பற்றவும்.

இவை அனைத்தையும் முயற்சி செய்தும் உங்கள் பருக்கள் கடுமையாக இருந்தால், தொடர்ந்து அசௌவுகரியத்தை நீங்கள் எதிர்கொண்டால், தோல் மருத்துவரை அணுகுவது நல்லது. அவர்கள் உங்களுக்கான சரியான ஆலோசனைகளை வழங்கி, பருக்கள் நீங்குவதற்கு உதவுவார்கள். 

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT