How to prevent skin problems in adolescence? 
அழகு / ஃபேஷன்

இளமைப் பருவத்தில் வரும் சரும பிரச்சனைகளை தடுப்பது எப்படி? 

கிரி கணபதி

இளமைப் பருவத்தில் சருமப் பிரச்சனைகள் என்பது அனைவருக்குமே ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். ஹார்மோன் மாற்றங்கள், அதிகப்படியான எண்ணெய் உற்பத்தி, சருமத்தில் அடைப்பட்ட துளைகள் போன்ற பல காரணங்களால் இவை ஏற்படலாம். இளம் வயதில் வரும் சருமப் பிரச்சனைகள் தன்னம்பிக்கையை பாதித்து மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். எனவே, இப்பதிவில் இளமைப் பருவத்தில் வரும் சருமப் பிரச்சனைகளைத் தடுப்பதற்கான சில எளிய வழிமுறைகளைப் பற்றி பார்க்கலாம். 

சருமத்தை சுத்தம் செய்யுங்கள்: சருமத்தை தினமும் இரண்டு முறை அதிக இரசாயனம் இல்லாத பொருட்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்வது முக்கியம். இது அழுக்கு எண்ணெய் மற்றும் இறந்த சரும செல்களை அகற்றும். கடுமையான சோப்பு அல்லது ஸ்கிரப் பயன்படுத்துவதை தவிர்த்து, மென்மையான சருமப் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தவும். 

மாய்ஸ்சரைசர் பயன்படுத்தவும்: நமது சருமம் ஈரப்பதமாக இருந்தாலே ஆரோக்கியமானதாக இருக்கும். எனவே அதை ஈரப்பதமாக வைத்திருக்க மாய்ச்சரைசர் பயன்படுத்துவது முக்கியம். இது சருமத்தை மென்மையாகவும் வரட்சி இல்லாமலும் வைத்திருக்க உதவும். சந்தையில் பல்வேறு விதமான மாய்ஸ்ரைசர் கிடைத்தாலும், உங்கள் சரும வகைக்கு ஏற்ற சரியான மாய்சரைசரைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். 

சூரிய பாதுகாப்பு: சூரிய ஒளி சருமத்திற்கு தீங்கு விளைவித்து சரும பாதிப்புகளை ஏற்படுத்தும். சில நேரங்களில் அதிகப்படியாக சூரிய ஒளியில் இருப்பது புற்றுநோய் ஏற்படக் காரணமாகலாம். எனவே சூரிய ஒளியிலிருந்து உங்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். எப்போது வெளியே சென்றாலும் தவறாமல் சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். நேரடியாக சூரிய வெளிச்சம் சருமத்தில் படாதவாறு தொப்பி அல்லது சன் கிளாஸ் அணிந்து கொள்வது நல்லது. முடிந்தவரை நிழலிலேயே இருக்க முயற்சி செய்யுங்கள். 

ஆரோக்கியமான உணவு: ஆரோக்கியமான உணவு உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு முக்கியம். எனவே உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை அதிகம் உண்ணுங்கள். சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலுமாகத் தவிர்க்கவும். இவை உங்களது சரும செல்களை சேதப்படுத்தி அதன் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். 

தூக்கம்: தினசரி நாம் நன்றாக தூங்கினாலே உடலில் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இரவு முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது அவர்களது சரும ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே தினசரி 7-8 மணி நேரம் நன்றாகத் தூங்குங்கள். 

மன அழுத்தம்: மன அழுத்தம் காரணமாகவும் சருமப் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். எனவே மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிகளைக் கண்டறிந்து அவற்றை செயல்படுத்துங்கள். நீங்கள் தினசரி உடற்பயிற்சி, யோகா, தியானம், சுவாச பயிற்சிகள் செய்தாலே மன அழுத்தம் என்பது இல்லாமல் போகும். எனவே இதுபோன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபட்டு மன அழுத்தத்தை விரட்டுங்கள். இது உங்களது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும். 

இப்படி, இளமைப் பருவத்தில் வரும் சருமப் பிரச்சனைகளைத் தடுப்பதற்கு பல எளிய வழிமுறைகள் உள்ளன. இவற்றை முறையாகப் பின்பற்றி ஆரோக்கியமான சருமத்தைப் பெற்று மகிழ்ச்சியாக இருங்கள். 

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT