மேனி பளபளப்புக்கு... pixabay.com
அழகு / ஃபேஷன்

மேனி பளபளப்புக்கு வெள்ளரிக்காயை இப்படி பயன்படுத்தலாமே!

ஆர்.ஜெயலட்சுமி

பொதுவாகவே அனைவரும் அழகான சருமத்தை பெற வேண்டும் என்று நினைப்பார்கள் அதற்காக பல முயற்சிகளையும் செய்வது உண்டு.

வெள்ளரிக்காய் ஆனது நமது மேனியை பளபளவென வைத்துக் கொள்ள உதவுகிறது.

வெள்ளரிக்காயில் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பி உள்ளது. பல்வேறு தோல் பிரச்சினைகளையும் குணப்படுத்துகிறது.

வெள்ளரிக்காய் சாறு எடுத்து அதனுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை முகத்தில் தடவி சிறிது நேரம் தேய்க்க வேண்டும் இறுதியாக தண்ணீரில் கழுவி  வேண்டும்.

வெள்ளரிக்காய் மாஸ்க் தயாரிக்கலாம் தேயிலை மர எண்ணெய் இரண்டு சொட்டையும் வெள்ளரிக்காய் சாறு ஒரு கப்பையும் சேர்த்துக்கொண்டு கலந்து முகத்தில் மாஸ்க் போல தடவலாம்.

வெள்ளரிக்காய் தோல் நீக்கிய சிறிய துண்டுகளாக சுத்தம் செய்து கொள்ளவேண்டும் பின்பு அடுப்பில் தண்ணீர் வைத்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து அதில் வெள்ளரிக்காயை போட்டு லேசாக வந்தவுடன் எடுத்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதை வடிகட்டி சாரை மட்டும் தனியாக எடுத்து டோனராக பயன்படுத்தலாம்.

வெள்ளரிக்காய் சருமத்தை ஈரத்துடன் வைத்திருக்கும் தோல் அழற்ச்சியை குறைக்கும். சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கும்.

முகப்பரு வருவதைத் தடுக்கும். சரும பிரகாசத்தை ஊக்குவிக்கும்.

முதுமையை தடுக்கிறது. டோனரை இரண்டு நாட்களுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT