Sarees... Image credit - pixabay
அழகு / ஃபேஷன்

புடவை அணிவதில் ஆர்வமா? இந்த 15 டிப்ஸ்களை கவனத்தில் வையுங்கள்!

சேலம் சுபா

டி மாதம் வந்தாலே பெண்களுக்கு கொண்டாட்டம்தான். ஆம் விதவிதமான சேலைகளை தள்ளுபடியில் வாங்கிக் கட்டி அசத்தலாமே?

நம் இந்திய கலாச்சாரத்தில் புடவைக்கு என்று தனி இடம் உண்டு. பின் கொசுவம் மடிசார் என்று அன்றையப் பெண்கள் அழகாக கட்டிய புடவையை இன்றைய பெண்கள்  தலைப்பு ஒத்தையில் விடுவது, குட்டைத் தலைப்பு, புரூச் குத்துவது, வேலைப்பாடு ஜாக்கெட் அணிவது என மேலும் அழகாக அணிந்து கம்பீரம் காட்டுகிறார்கள். 

ஆனால் அந்தப் புடவை கட்டுவதற்கும் சில விதிகள் உண்டு. சிலருக்கு எந்தப் புடவை கட்டினாலும் பொருந்தி நேர்த்தியாக காட்சி தருவார்கள். சிலருக்கு மிக காஸ்ட்லியான  சேலை அணிந்தாலும் சாதாரணமாகவே தெரிவார்கள்.

இதோ புடவை கட்டும் பெண்களுக்கு  பயனுள்ள டிப்ஸ்...

1. முதலில் புடவை வகைகளையும் வண்ணங்களையும் டிசைன்களையும் உங்கள் உடல் அமைப்புக்கும் நிறத்துக்கும் ஏற்றது போல்  தேர்வு  செய்யுங்கள்.

2. சற்று உடல் பருமனாக தோன்றுபவர்கள்  முந்திக்கும் கொசுவத்துக்கும் சிறு சிறு மடிப்புகளாக செய்து  வைத்துப் பின் செய்யுங்கள்.

3. உடல் மெலிதாக இருப்பவர்கள்  மடிப்பு இல்லாமல் முந்தியை ஒற்றையாக விடலாம். கவனம் மிக மெல்லிய  புடவைகளைத் தவிர்ப்பது முக்கியம்.

4. காட்டன் புடவையாக இருந்தால்  கஞ்சி போட்டு பராமரிப்பது அவசியம். இல்லை என்றால் உடலோடு ஒட்டி சிரமம் தரும்.

5. புடவையை தழையத் தழைய முக்கியமா பாதங்களை மறைப்பது போல் கட்டுவது அழகைத் தரும். ஆனால் குப்பையைக் கூட்டும் அளவுக்கு வேண்டாம்.

6.  புடவைக்கு ஏற்ற ஜாக்கெட் எப்போதும் மேட்ச்சாக இருக்க வேண்டும். சில புடவைகளுக்கு மட்டும்  கான்ட்ராஸ்ட் ஜாக்கெட் பொருந்தும். எந்தப் புடவைக்கும் பார்டர் கலர் ஜாக்கெட் போடலாம். வேலைப்பாடு நிறைந்தவைகள் அந்தந்த சேலைகளுக்கு மட்டுமே அணிய முடியும் என்பதால் பொதுவாக இருக்கும் வகையிலும் சிலவற்றை தைத்துக் கொள்ளுங்கள்.

7.  ஜாக்கெட் உள்ளாடைகள் தெரிவதுபோல் ட்ரான்ஸ்பரன்ட்டாக இல்லாமல் இருக்க வேண்டியது முக்கியம். வெளியே தெரியும் உள்ளாடைகளால் புடவையின் அழகு குறைவதுடன்  சங்கடத்தையும் தரும்.

8. உடலைக் கவ்விப் பிடிக்கும்  பிட்டான ஜாக்கெட்களே புடவையின் அழகைக் கூட்டும். தோளில் நழுவும் லூசான பிளவுஸ்களைத் தவிருங்கள்.

9.  செருப்பை ஃப்ளாட்டாக தேர்வு செய்து அணியுங்கள். புடவைக்கு ஹீல்ஸ் பொருந்தாது  என்பது மட்டுமல்ல கால் வலியும் உண்டு பண்ணும்.

10. அடுத்து அலங்காரம். புடவை எந்த வகையோ அதுக்கு எற்ற மாதிரி  அலங்காரமும் இருக்க வேண்டும். சாதா புடவைக்கு ஓவர் மேக்கப்பும், பட்டுப்புடவைக்கு எளிய மேக்கப்பும் வேண்டாம். பிறர் கண்களை உறுத்தாத வகையில் அலங்காரம் இருக்கலாம்.

11. ஃபேன்சி சேலை என்றால் நகை அதிகம் வேண்டியதில்லை. சின்னத்தோடு, கழுத்தில் ஒரு செயின், கையில் ஒரு ப்ரேஸ்லெட் அல்லது கல்லில்லாத வளையல், மெல்லிய வாட்ச் போதும்.

12.பட்டுச் சேலைக்கு பாரம்பரிய நகைகளை அணியலாம். குறிப்பாக எந்தக் கலராக  இருந்தாலும் கல் வைத்த நகைகளை அணிந்து அதற்கேற்ற வளையல் நெற்றியில் கல் பொட்டு வைத்தால் அம்சம்தான்.

13. புடவை அணியும்போது செய்து கொள்ளும் தலையலங்காரமும் முக்கியம். தளரப் பின்னி பூ வைப்பது அழகைத் தரும். முடியை முழுமையாக விரித்துப் போடுவது புடவைக்கு பொருந்தாது.

14.. முக்கியமா இதை கவனத்தில் வையுங்கள். புடவை கட்டி நடக்கும்போது தலை குனியாமல் கூன் விழாமல் கம்பீரமாக நடங்கள். அப்போதுதான் சேலைக்கும் மதிப்பு.. உங்களுக்கும் மதிப்பு.

15. அதே நேரம் புடவையின் நளினம் கெடாதவாறு நடப்பது அவசியம். 

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT