இயற்கையான தோல் பராமரிப்பு என்று வரும்போது எலுமிச்சை அதில் பல வழிகளில் நன்மை பயக்கிறது. எலுமிச்சையில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் விட்டமின் சி நிரம்பியுள்ளதால் தோல் பராமரிப்புக்கு பெரிதும் உதவுகிறது. இந்தப் பதிவில் எலுமிச்சை பயன்படுத்தி பேஸ் மாஸ்க் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
1 ஸ்பூன் தேன்
2 ஸ்பூன் தயிர்
செய்முறை:
ஒரு சிறிய கிண்ணத்தில் எலுமிச்சை சாறு, தேன் மற்றும் தயிர் சேர்த்து ஒன்றாக பேஸ்ட் போல கலக்கி கொள்ளவும். இந்த கலவையை கண் பகுதியைத் தவிர்த்து, முகம் மற்றும் கழுத்து போன்ற இடங்களில் சமமாகத் தேய்க்கவும்.
அப்படியே 5 நிமிடங்கள் மசாஜ் செய்து, பின்னர் 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே விடுங்கள்.
இறுதியில் வெந்நீர் பயன்படுத்தி முகத்தைக் கழுவினால், இயற்கையான பளபளப்பை நீங்கள் உணர முடியும். எலுமிச்சை பழத்தில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துகளும் முகத்தில் இறங்கி பொலிவை ஏற்படுத்தும்.
எலுமிச்சை ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்:
எலுமிச்சை இயற்கையாகவே சருமத்தை பிரகாசிக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. எலுமிச்சையில் உள்ள விட்டமின் சி, ஹைப்பர் பிக்மென்டேஷன், கரும்புள்ளிகள் மற்றும் அழுக்குகளை நீக்க உதவுகிறது.
எலுமிச்சை சாறு முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களுக்கு எதிராகப் போராட உதவுகிறது. தொடர்ச்சியாக எலுமிச்சை ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துவதால் முகத்தில் எண்ணெய் தன்மை குறைந்து, முகப்பரு வருவதைத் தடுக்கிறது.
எலுமிச்சை சாறில் உள்ள அமிலங்கள் இறந்த சரும செல்களை நீக்கி புதிய செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் இது சருமத்தின் pH அளவை சமன்படுத்த உதவுகிறது.
எலுமிச்சை ஃபேஸ் மாஸ்க் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், சருமத்திற்கு இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பளபளப்பு உண்டாகும்.
எலுமிச்சை சாற்றில் ஈரத்தைத் தடுக்கும் பண்புகள் உள்ளன. இது சருமத்திற்கு சரியான நீரேற்றம் மற்றும் ஊட்டமளிப்பதற்கு உதவுகிறது. இதனால் சருமம் எப்போதும் மிருதுவாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
எலுமிச்சை சாறு சருமத்தை இயற்கையாகவே சுத்தப்படுத்துகிறது. சருமத்தில் உள்ள அழுக்குகள் அதிகப்படியான எண்ணெய்கள் போன்றவற்றை திறம்பட நீக்கி, எப்போதும் சுத்தமான நிறத்தைப் பராமரிக்க உதவுகிறது.