நம்முடைய சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து சருமத்திலிருந்து வெளியாவதை தடுத்து நம்முடைய சருமத்தை பாதிப்பிலிருந்து பாதுகாக்க மாய்ஸ்சரைசர் பயன்படுகிறது. இதில் நிறைய வகைகள் இருக்கின்றது. எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கும், வறண்ட சருமத்திற்கும் எந்த வகை மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவது போன்றவற்றை இந்த பதிவில் காணலாம்.
நல்ல மாய்ஸ்சரைசர் சரும பாதிப்பை சரி செய்யவதற்கு உதவும். செங்கல்லும், சிமெண்ட்டும் எப்படி ஒரு சுவரில் அமைந்திருக்கிறதோ அப்படித்தான் நம்முடைய சருமத்தில் செல்கள் அமைந்திருக்கும். இதில் செங்கல் என்பது நம்முடைய சருமத்தில் உள்ள செல்கள். அதை கெரட்டினொசைட்ஸ் (Keratenocytes) என்று கூறுவோம். சிமெண்ட் என்பது என்னவென்றால், நம்முடைய சருமம் உருவாக்கும் எண்ணெய் மற்றும் கொழுப்புக்கள். தினமுமே இந்த பேரியர் டேமேஜ் ஆகி புதிதாக உருவாகும். வயது ஆக ஆக இந்த பேரியரை உருவாக்கக்கூடிய தன்மை குறைந்துக்கொண்டே போகும். இதனால் சரும பாதிப்பு அதிகமாக நடக்கும். ஒரு மாய்ஸ்சரைசரில் Barrier repair செய்யக்கூடியவை எதுவென்றால், செராமைட்ஸ் (Ceramides), கொலஸ்ட்ரால் (Cholesterol) ஆகியனவாகும்.
செரமைட்ஸ் என்பது நம்முடைய சருமத்தில் இயற்கையாகவே உருவாகக்கூடிய ஒருவித கொழுப்புகள். செரமைட்ஸ்ஸில் 12 விதமான வகைகள் உள்ளது. எனினும் 3 முதல் 5 வகை செரமைட்ஸே நம்முடைய சருமத்திற்கு தேவைப்படுகிறது. கொலஸ்ட்ராலும் நம் சருமத்தில் இயற்கையாகவே இருக்கும். ஒரு மாய்ஸ்சரைசரில் செராமைட்ஸ் மற்றும் கொலஸ்ட்ரால் சேர்க்கப் பட்டிருக்கிறது என்றால், கண்டிப்பாக அது சரும பாதிப்பை சரிசெய்வதற்கு உதவும்.
இரண்டாவது மாய்ஸ்சரைசரிங். இதை இரண்டு விதமாக செய்யலாம். நம்முடைய சருமத்தில் நிறைய மாய்ஸ்சரைசரை தக்க வைக்கலாம். அல்லது சருமத்திலிருந்து வெளியாகும் ஈரப்பதத்தை தடுக்கலாம். சருமத்திற்கு நிறைய ஈரைப்பதத்தை கொடுக்கக்கூடியது, ஹைலூரானிக் ஆசிட் (hyaluronic acid), கிளிசரின் (Glycerin). இந்த இரண்டிற்குமே அதை சுற்றியுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிக்கொள்ளும் தன்மை உண்டு.
சருமத்திலிந்து வெளியாகும் ஈரப்பதத்தை தடுத்து வைத்து கொள்ளக்கூடிய இரண்டு Component என்னவென்றால், Squalene, dimethicone ஆகியவையாகும். இந்த இரண்டும் சருமத்திற்குள்ள உள்ள இடங்களை நிரப்பி சருமத்திலிருந்து ஈரப்பதம் வெளியாவதை தடுத்து தக்கவைத்துக்கொள்ளும்.
அன்றாட வாழ்வில் அதிகமாக சருமத்தின் மீது சூரிய ஒளி படும்போதும், ஸ்ட்ரெஸ் மூலமாகவும் டாக்ஸின்களை அதிகப்படுத்தும். இதனால் செல்லில் பாதிப்புகள் அதிகரிக்கும். இதனால் சருமத்தில் பிக்மெண்டேஷன், சுருக்கம், வயதான தோற்றம் வரக்கூகும். விட்டமின் சி, விட்டமின் ஈ ஆகியவை மாய்ஸ்சரைசரில் பயன்படுத்தும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகும். அதிகமாக மாய்ஸ்சரைசரில் விட்டமின் ஈ பயன்படுத்துவார்கள். சென்டல்லா என்பது வல்லாரை கீரையாகும். இதிலிருந்து எடுக்கக்கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட் இருக்கிறது. இது உடலில் ஏற்பட்டிருக்கும் காயத்தை கூட சரி செய்யும் என்று கூறப்படுகிறது. இதையும் மாய்ஸ்சரைசரில் பயன்படுத்துகிறார்கள்.
கடைசியாக நையாசினமைட்டும் Niacinamide) மாய்ஸ்சரைசராக பயன்படுகிறது. இது விட்டமின் B3 யில் ஒருவகையாகும். இது மாய்ஸ்டரைசர் மட்டுமில்லாமல் நம்முடைய சருமத்தின் எண்ணெய் பசையையும் குறைக்கும். எனவே எண்ணெய் பசையுள்ள சருமம் உள்ளவர்கள் இதை பயன்படுத்தலாம்.