Hydra facial benefits Image Credits: InStyle
அழகு / ஃபேஷன்

பெண்கள் Hydra facial செய்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றிப் பார்க்கலாம்!

நான்சி மலர்

ல்லா பெண்களுக்குமே தனக்கு கண்ணாடி போன்ற பளபளப்பான மற்றும் மென்மையான சருமம் இருக்க வேண்டும் என்ற ஆசையிருக்கும். அப்படிப்பட்டவர் களுக்காகத்தான்  ஹைட்ரா ஃபேஷியல் இருக்கிறது.

தற்போது இது இளம்பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. ஏனெனில் சர்ஜரி போன்ற எந்த விஷயமும் இதில் இல்லாமல் ஸ்பா டிரீட்மெண்ட் போல செய்து கொள்வதாலும், நல்ல பலனைக் கொடுப்பதாலும், விலையும் சற்று குறைவு என்பதாலும் பலராலும் விரும்பப்படுகிறது.

இந்த ஹைட்ரா ஃபேஷியலை யார் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எப்படிப்பட சருமம் உள்ளவர்களும், sensitive, dry, oily சருமம் உள்ளவர்களும் தாராளமாக செய்து கொள்ளலாம்.

ஹைட்ரா ஃபேஷியல் செய்து கொள்ளும் போது Exfoliation, cleansing, extraction, hydration போன்றவை செய்யப்படும். இப்படி செய்வதால் சருமத்தில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் போன்றவற்றை நீக்கி சருமத்தை சுத்தப்படுத்தி மென்மையாக்குகிறது.

ஹைட்ரா ஃபேஷியல் சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கும். இதை செய்துகொள்ள வெறும் 30 நிமிடமே போதுமானதாகும். இதை செய்த உடனேயே சருமத்தில் மாற்றத்தையும், பளபளப்பையும் காணமுடியும்.

ஹைட்ரா ஃபேஷியல் செய்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள், முகத்தில் இருக்கும் கோடுகள், முகச்சுருக்கம் நீங்கும், ஆக்னே, பிக்மெண்டேஷன், சருமத்தில் உள்ள ஆயில் போன்ற பிரச்னைகளை சரிசெய்யும். சருமத்தை பளபளப்பாகவும், மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் இருக்க செய்யும். ஏதேனும் நிகழ்ச்சிக்கு முன்போ அல்லது திருமணம் போன்ற முக்கிய தருணங்களுக்கு முன்போ ஹைட்ரா ஃபேஷியல் செய்துக் கொள்வது நல்ல பலனை தரும்.

ஹைட்ரா ஃபேஷியல் செய்த பிறகு சருமத்தில் பயன்படுத்தும் சீரம், க்ரீம் போன்றவை இன்னும் ஆழமாக இறங்கி வேலை செய்வதாக சொல்லப்படுகிறது. இதை செய்வதற்கு ஒரு செஷனுக்கு ரூபாய் 6000 முதல் 10,000 வரை செலவாகிறது. இது 4-6 வாரங்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கிறது. இந்த ஃபேஷியல் செய்து கொள்வதால் எந்த வலியும் ஏற்படாது. சாதாரணமாக ஸ்பா டிரீட்மெண்ட் செய்து கொள்வது போலத்தான் இருக்கும்.

ஹைட்ரா ஃபேஷியல் செய்து முடித்ததும் நல்ல பலன் கிடைக்க சூரிய ஒளியிலிருந்து தள்ளி இருக்கவும், சருமத்தில் சுடுதண்ணீர் பயன்படுத்த வேண்டாம், மேக்கப் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மாய்ஸ்டரைசர் மற்றும் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதால் மேலும் இதன் பலன் அதிகரிக்கும்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT