பெண்களுக்கு விதவிதமாக உடை அணிவதில் எப்போதுமே அலாதி பிரியம் உண்டு. பெண்களுக்கு பிடித்த மார்டன் உடை என்று சொல்லும் போது அதில் கட்டாயமாக ஸ்கர்ட் இருக்கும். இந்த பதிவில் எத்தனை விதமான ஸ்கர்ட் வகைகள் உள்ளன என்பதை பற்றி காணலாம்.
ஏ லைன் ஸ்கர்ட் (A line skirt)
ஏ லைன் ஸ்கர்ட் என்பது இடுப்பில் கச்சிதமாக ஃபிட்டாகி கால் வரை விரிந்து கொண்டே செல்லும் ஸ்கர்ட். இதை அணியும்போது ஆங்கில எழுத்தான ‘ஏ’ போன்ற தோற்றத்தை தரும். இந்த ஸ்கர்ட் எல்லா உடலமைப்பு கொண்டவர்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.
டிவைடட் ஸ்கர்ட் (Divided skirt)
இதை பார்பதற்கு ஸ்கர்ட் போன்ற தோற்றத்தை கொடுக்கும். ஆனால் உண்மையிலேயே இது ஒரு பேன்ட். விக்டோரியா காலத்தில் பெண்கள் குதிரை சவாரி செய்வதற்காக இதுபோன்ற ஸ்கர்ட்கள் வடிவமைக்கப் பட்டது. அப்போதுதான் பெண்களால் ஆண்களுக்கு நிகராக சுலபமான குதிரை சவாரி செய்ய முடியும் என்பதற்காக இந்த டிசைன் வடிவமைக்கப்பட்டது.
பப்பிள் ஸ்கர்ட் (Bubble skirt)
பப்பிள் ஸ்கர்ட்டை தூலிப் ஸ்கர்ட் அல்லது பலூன் ஸ்கர்ட் என்றும் அழைப்பார்கள். இந்த ஸ்கர்ட்டின் அடிப்பாகத்தை திரும்ப உள்பக்கமாக மடக்கி வைத்து தைத்து பலூன் போன்ற அமைப்பை உருவாக்குகிறார்கள். இந்த டிசைன் 1950,1980,2010 என்று ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பிரபலமடைந்து வருகிறது.
விரேப் ஸ்கர்ட் (Wrap skirt)
தற்போது பெண்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது இந்த விரேப் ஸ்கர்ட்தான். இது ஒரு தூணிபோல இருக்கும், அதில் கொடுக்கப்பட்டுள்ள நாடாவை வைத்து நாமே இடுப்பில் கட்டிக்கொள்ள வேண்டும். இந்த ஸ்கர்ட்டை அணிவதால், அது நம்முடைய உடலை மிகவும் ஒல்லியாக காட்டும் என்பதால் பிரபலமடைந்தது.
அசிம்மெட்ரிக் ஸ்கர்ட் (Asymmetrical skirt)
இதை வாட்டர்பால் ஸ்கர்ட்(Water fall skirt) என்றும் கூறுவார்கள். இதன் பெயருக்கு ஏற்றார் போல், இதனுடைய முன் பகுதி பெரிதாகவும் பின் பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதிகள் சிறிதாகவும் வடிவமைக்கப்பட்டு பார்ப்பதற்கு நீர்வீழ்ச்சி போல தெரியும்.
டையர்டு ஸ்கர்ட் (Tiered skirt)
டையர்டு ஸ்கர்ட் வகை ஒவ்வொரு இடைவெளி விட்டு அழகாக அடுக்கடுக்காக தைக்கப்பட்டிருக்கும். இந்த ஸ்கர்ட் முட்டி வரைக்கும் அல்லது முழுநீள அளவையும் கொண்டிருக்கும். இந்த வகை ஸ்கர்ட் பெண்களுக்கு நலினத்தை கொடுக்கும்.
யோக் ஸ்கர்ட் (Yoke skirt)
இந்த ஸ்கர்ட்டில் நீளமான இடுப்பளவை கொண்டிருக்கும். அதற்கு கீழ் இன்னொரு டிசைன் அமைக்கப்பட்டிருக்கும். அந்த நீளமான இடுப்பளவை கொண்டதையே ‘யோக்’ என்று கூறுவோம். இந்த யோக்கை அமைக்க இரண்டு மடங்கு துணி பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை ஸ்கர்ட் வயிற்றுப்பகுதியை ஹைலைட்டாக காட்டுவதற்காக அமைக்கப்பட்டதாகும். யோக்கிற்கு கீழ் அமைக்கப் பட்டிருக்கும் டிசைன் மேலும் இந்த ஸ்கர்டிற்கு அழகையும், நலினத்தையும் கூட்டுகிறது.