Natural Facial tips... 
அழகு / ஃபேஷன்

வாய் மணக்க இயற்கை வழிமுறைகள்!

இந்திரா கோபாலன்

ஹெர்பல் பேஸ்ட்

எலுமிச்சை சாறு 4 சொட்டுக்கள், கற்பூரம் கால் டீஸ்பூன், உப்பு கால் டீஸ்பூன், சர்க்கரை 2 டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை 2 ஸ்பூன் பன்னீரில் குழைத்து ஒரு பேஸ்ட் மேல் செய்து கொள்ளுங்கள். இதை இரவில் படுக்கும் முன் பல் துலக்க பயன்படுத்துங்கள். இந்தப் பொடியைக் கொண்டு வாயை கொப்பளிக்க லாம். இதனால் வாய் துர்நாற்றம் நீங்குவதுடன் பற்களில் இருக்கும் மஞ்சள் கறையும் போய் பற்கள் வெண்மையாகும்.

இன்னொரு முறை

வேப்பம் பூ 25 கிராம், கறிவேப்பிலை 25 கிராம், ஓமம் 25 கிராம் இவற்றை வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ளவும். இதை காலை வேளையில் கால் டீஸ்பூன் வாயில் போட்டு தண்ணீருடன் விழுங்கி விடலாம். அல்லது சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம். 

ஹெர்பல் மவுத் வாஷ்

ஒரு டம்பளர் நீரை கொதிக்கவைத்து அதில் 4 துளசி இலை,பல புதினா இலை, 4 வேப்பிலை போட்டு  மூடி வைக்கவும். 20 நிமிடங்கள் கழித்து இந்த நீரால் வாயை கொப்பளிக்கும்.  குடிக்கவும் பயன்படுத்தலாம்.  இது வயிறு வாய் இரண்டையும் சுத்தம் செய்யும்.  சிலருக்கு அல்சர் இருந்தால் வாய் துர்நாற்றம் ஏற்படும். அவர்கள் இந்த மூலிகை நீரை பயன்படுத்தினால் துர்நாற்றம் நீங்கும்.

வாய் மணக்க

ஜாதி பத்திரி, ஜாதிக்காய், மாசிக்காய், துளசி இவற்றை சமஅளவு எடுத்து பட்டு போல் பொடியாக்கி உப்பும் சர்க்கரையும் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். இதைக் கொண்டு பல்துலக்குவது மற்றும் வாய் கொப்பளிப்பது செய்து வர வாய் துர்நாற்றம் நீங்கி உங்கள் மூச்சு கமகமக்கும்.

முகப் பொலிவிற்கு

முலாம்பழ விதைகளை வெயிலில் காயவைத்து அரைத்து தினம் படுக்கப் செல்லுமுன் தடவிவர  கரும்புள்ளிகள் மறையும்

முகம் எண்ணைப் பசையாக உள்ளதா?  காரட்டை  துருவி பால், முட்டையின் வெள்ளைக்கரு கலந்து முகத்தில் பூசிக்கழுவ எண்ணை தன்மை நீங்கும். 

கெட்டித்தயிர் மஞ்சள் இரண்டையும் கலந்து முகத்தில் தடவி  15 நிமிடங்கள் கழுத்துக் கழுவ வறண்ட முகம் பளபளக்கும்.

வறண்ட தோல் உள்ளவர்கள் தர்ப்பூஸ் பழ வில்லைகளை முகத்தில் வைத்து பிறகு கழுவ தோல் புத்துணர்ச்சி பெறும்.

முகத்தில் கரும்புள்ளிகள் பருக்கள் மறைய முருங்கை இலைச்சாறு எலுமிச்சை சாறு  மற்றும் தேன்  இவற்றைக் கலந்து தடவி வர அவை மறையும்.

Spider Man கதாபாத்திரத்தின் தலைசிறந்த 10 ஊக்கமூட்டும் பொன்மொழிகள்! 

Direct-to-Cell செயற்கைக்கோள் இணைப்பு: புதிய யுகத்தின் தொடக்கம்! 

உங்கள் வீட்டில் சிறிய குழந்தைகள் இருக்கிறதா? அப்படியென்றால் இதுபோன்ற செடிகளை வளர்க்காதீர்கள்!

திருக்கண்ணபுரம் முனையதரையன் பொங்கல் பிரசாதம் உருவான வரலாறு!

கதிரியக்க மாசுக்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும்!

SCROLL FOR NEXT