Beauty tips Image credit - pixabay
அழகு / ஃபேஷன்

பெண்களுக்கு உடல் ரோமங்கள் நீங்க இயற்கை வழிமுறைகள்!

இந்திரா கோபாலன்

சில பெண்களுக்கு கை, கால், தாடையில் எல்லாம் ஆண்களைப் போன்று முடி வளரும் இதைத் தடுக்க இயற்கை சிகிச்சை முறைகள் உள்ளன. 

ப்யூமிஸ் ஸ்டோன் கடைகளில் கிடைக்கும். சந்தனக் கல்லில் சந்தனத்தை இழைத்து அந்த ப்யூமிஸ் ஸ்டோனில்  தடவி வைக்கவும். ரோமங்களை நீக்க வேண்டிய பகுதிகளை கழுவில் துடைத்து விடவும். கடலை மாவு, பார்லி பௌடர் மற்றும் தேன்  மூன்றும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து  சில துளிகள் நீர் விட்டு கெட்டியாகக் குழைத்து ரோமம் நீக்க வேண்டிய பகுதிகளில்  அடர்த்தியாகத் தடவவும்.  அரை மணிநேரம் ஊறிய பிறகு காய ஆரம்பித்ததும் தண்ணீரைத் தெளித்து சந்தனம் தடவிய ப்யூமிஸ் கல்லினால் மென்மையாக ஹோமத்தின் எதிர்த்திசையில் தேய்க்கவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்தால் முடி வளர்ச்சி குறையும்.

விரலி மஞ்சள்,வசம்பு, கோரைக்கிழங்கு, குப்பை மேனியை நன்கு காயவைத்து, சமஅளவு எடுத்து தூளாக அரைத்துக் கொள்ளவும். இதில் நீர் விட்டு  பேஸ்ட் போல் செய்து உடல் முழுக்க  தடவி சிறிது நேரம் அப்படியே விட்டுவிடவும். பிறகு ப்யூமிஸ் கல்லால் எதிர்திசையில் தேய்த்துக் குளிக்கவும். எரிச்சலாக உணர்ந்தால் பாலோ, தயிரோ, தேங்காய் எண்ணையோ தடவி குளிக்கலாம்.

சில பெண் குழந்தைகளுக்கு பிறக்கும்போதே சருமத்தில் ரோமங்கள் நிறைய இருப்பதைப் பார்க்கலாம். கோதுமை மாவில் இரண்டு ஸ்பூன் வெல்லத் தண்ணீர் கலந்து பேக் தயாரித்து குழந்தைகளின் முதுகில் தடவி காய்ந்ததும் மென்மையாக எடுத்து விடலாம்.

சம்பா கோதுமை மாவு, கஸ்தூரி மஞ்சள் தூள், வெட்டி வேர், நித்தியமல்லிச் செடியின் வேர் இவற்றை காயவைத்து அரைத்து தூளாக சமஅளவு எடுத்துக் கொள்ளுங்கள்.  இந்தக் கலவையை உடலில் தேய்த்துக் குளிக்க ரோம் வளர்ச்சி கட்டுப்படும்.

சில பெண்களுக்கு உதட்டுக்கு மேல் பூனை முடி இருக்கும். இதற்கு குப்பைமேனி கீரை 100கிராம், கோரைக்கிழங்கு 100கிராம், வேப்பந்தளிர் 20 கிராம், வெட்டி வேர் 30 கிராம்  இவற்றை வாங்கி நைசாக பொடி செய்து வைக்கவும் தினமும் இப்பொடியை முகம் மற்றும் உடல் முழுவதும் பூசிக் குளிக்க வேண்டும். ஹேர் ரிமூவர் உபயோகிப்பதற்கு பதில் இந்தப்பொடியை உபயோகிக்கலாம்.  

வெட்டி வேர் 100கிராம், நித்தியமல்லிகொடிவேர் 100 கிராம், பூலாங்கிழங்கு 100கிராம் இவை மூன்றையும் அரைத்துப் பொடியாக்கி இதை ஒரு ஸ்பூன் எடுத்து பாலில் கலந்து முகம் தாடை எல்லா இடங்களிலும் போட்டு 10 ,15 நிமிடங்கள் கழித்து கழுவவேண்டும். இதை செய்வதன் மூலம் ரோமம் கட்டுப்படும்.

25000க்கும் மேற்பட்ட எலிகள் ஓடும் கோயில்... அடக் கடவுளே!

இளம் வயதினருக்கு உடற்பயிற்சியின்போது ஹார்ட் அட்டாக் வர காரணம் என்ன?

முந்திரிப் பருப்பு உடலில் கொழுப்புச் சத்தை அதிகரிக்குமா?

ராஜமவுலியை தொடர்ந்து ஆஸ்கார் விருதை குறிவைத்து காய் நகர்த்தும் அமீர்கான்!

சீதையைத்தேடி ராமன் கால் பதித்த பூமியின் சொர்க்கம்!

SCROLL FOR NEXT