Pink Lips Tips
Pink Lips Tips 
அழகு / ஃபேஷன்

பிங்க் நிற உதடுகளைப் பெற இவற்றை பாலோ பண்ணுங்க! 

கிரி கணபதி

பெரும்பாலான பெண்களுக்கு அவர்களின் உதடுகள் மென்மையாகவும் பிங்க் நிறத்திலும் இருக்க வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும். இத்தகைய உதடுகளால் முக அழகு மேலும் அதிகரிக்கும். இது நம் உடல் ஆரோக்கியத்தையும் வெளியே காட்டும் காரணியாக உள்ளது. இதற்காக சந்தையில் பல்வேறு பொருட்கள் இருந்தாலும், இயற்கையாகவே உதடுகளை பிங்க் நிறத்தில் மாற்ற வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது. அதற்காக இந்த எளிய குறிப்புகளைப் பின்பற்றுங்கள். 

லிப் பாம் - அதிக நேரம் சூரிய ஒளியில் இருந்தால், உதடுகள் அதனால் பாதிக்கப்பட்டு கருமை நிறத்திற்கு மாறிவிடும். இதைத் தடுப்பதற்கு சூரிய கதிர்களிடமிருந்து பாதுகாக்கும் லிப் பாம் பயன்படுத்த வேண்டும். இவை உங்கள் உதடுகளை பாதிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாப்பது மட்டுமின்றி இயற்கையான பிங்க் நிறம் கிடைக்க உதவும். 

பீட்ரூட் - பீட்ரூட் என்பது இயற்கையிலேயே பிங்க் நிறம் கொண்ட காய்கறியாகும். இதில் உதடுக்கு பிங்க் நிறத்தைக் கொடுக்கக்கூடிய இயற்கை மூலப்பொருள் உள்ளது. பீட்ரூட் சாற்றில் தேங்காய் எண்ணெய் கலந்து லிப் பாம் போல உதட்டில் பூசலாம். இது உங்கள் உதடுக்கு மெல்லிய இளஞ்சிவப்பு நிறத்தைக் கொடுக்கும். இது உங்கள் உதடுகளை ரசாயனங்கள் இன்றி இயற்கையாக பிங்க் நிறத்திற்கு மாற்ற உதவும். 

ஸ்க்ரப் - உங்களின் உதடுகளில் இருக்கும் இறந்த செல்களை அகற்ற வீட்டிலேயே செய்த சர்க்கரை ஸ்க்ரப் பயன்படுத்தலாம். சர்க்கரையை தேன் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கலந்து மென்மையாக உதடில் தேய்க்கலாம். இதைத் தடவியதும் சில நிமிடங்கள் மசாஜ் செய்த பிறகு கழுவ வேண்டும். மென்மையான உதவிகளைப் பெற வாரம் ஒரு முறையாவது இப்படி செய்ய வேண்டும். 

தண்ணீர் - உதடுகள் கருமை நிறத்திற்கு மாறுவதற்கு முதல் காரணமாக நீர் இழப்பு உள்ளது. எனவே உங்களின் உதடுகளுக்கு இயற்கையான பிங்க் நிறம் வேண்டுமென்றால், தினசரி போதிய அளவு தண்ணீர் குடியுங்கள். உங்களை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருங்கள். உடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாதபோது உதடு வெடிப்பு மற்றும் கருமைக்கு வழிவகுக்கும். எனவே தினசரி அதிகப்படியான தண்ணீர் குடிப்பது அவசியம். 

இவற்றை நீங்கள் முறையாக பின்பற்றினாலே, இயற்கையாக உங்களின் உதடு பிங்க் நிறத்திற்கு மாறி உங்கள் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும். 

உங்கள் திறமைகளை வெளிக்காட்டத் தயங்காதீர்கள்!

நீரிழிவு எச்சரிக்கை: இந்த 5 பழக்கங்கள் இருப்பவர்கள் ஜாக்கிரதை!

Mammoth Cave: உலகின் மிகவும் நீளமான குகையை எப்படி கண்டுபிடித்தார்கள் தெரியுமா?

தொலைந்த பொருள் திரும்ப கிடைக்கனுமா? இந்த கோவிலுக்குப் போங்க!

டைனோசர் காலத்திலேயே அழிந்துவிட்டதாக எண்ணப்பட்ட உயிரினம் கண்டுபிடிப்பு… சுவாரசிய தகவல்!

SCROLL FOR NEXT