பாரம்பரியம் மிக்க ஆரெம்கேவி நிறுவனம் இந்த வருட தீபாவளி ஸ்பெஷலாக நேச்சுரல்ஸ், லினோ என்று இரண்டு புதிய பட்டுச்சேலை ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆரெம்கேவி நேச்சுரல்ஸ் என்பது கைகளால் நெய்யப்பட்ட நூறு சதவீதம் சுத்தமான இயற்கை சாயங்களால் ஆன காஞ்சிபுரம் பட்டுச்சேலை ரகமாகும்.
ஆரெம்கேவி லினோ சேலைகள், லினோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழக்காமான பட்டு சேலைகளை விட 40% எடை குறைவாக இருக்கும்.
தற்போது பொதுவாக அனைத்து வகையான நூல் இழைகளும் செயற்கை சாயங்களைப் பயன்படுத்தித்தான் பயன்படுத்துகிறார்கள். இவற்றின் பயன்பாடு சுலபமாகவும், செலவு குறைவாகவும் இருப்பதே அதற்குக் காரணமாகும்.
ஆனால், செயற்கை சாயங்களால் நச்சுக் கழிவுகள் ஏற்பட்டு சுற்றுச் சூழலை பெரிதும் பாதிப்பது தற்போது அனைவராலும் உணரப்படுகிறது.
ஆரெம்கேவி நிறுவனம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அராய்ந்து பாரம்பரிய இயற்கை சாயங்களைத் தயாரிக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளது. அவற்றைப் பயன்படுத்தி ஏராளமான புதிய நிறங்களையும் உருவாக்கி உள்ளது.
இவர்கள் அரக்கு, சிவப்பு மண், மாதுளைப் பழத்தோல், வெந்தயம், நெல்லிக்கனி, மல்பெரி இலைகள், சாமந்திப் பூ போன்ற இயற்கையான பொருட்களியயே பயன்படுத்தி சாயங்களையும், வண்ணங்களையும் உருவாக்குகிறோம்.
அவற்றை, பட்டு நூல்களில் ஏற்றி, ஆரெம்கேவியின் திறன் மிகு நெசவாலர்களால் தறிகளில் நெய்யப்படுவதாக பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
இளம் பெண்கள் பட்டுச் சேலைகளை விரும்பினாலும், அவை மிகவும் வெயிட்டாக இருப்பது ஒரு பிரச்னையாக உள்ளது. அதற்குத் தீர்வு காணும் வகையில், ஆரெம்கேவி நிறுவனம் லினோ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, சேலைகளின் எடையைக் கணிசமாகக் குறைத்துள்ளது.
அதன் பயனாக, லினோ பட்டுச் சேலைகள் வழக்கமான பட்டுச் சேலைகளைவிட சுமார் 40% எடை குறைவாக உள்ளன. பட்டுத்துணி நெசவில் லினோ தொழில் நுட்பத்திற்கான காப்புரிமையை ஆரெம்கேவி நிறுவனம் பெற்றுள்ளது. லினோ பட்டுச் சேலைகளை அணியும்போது, பெண்கள் காற்றோட்டமாக உணர்வார்கள்.
1924-ம் வருடம் துவக்கப்பட்ட ஆரெம்கேவி நிறுவனம் கைகளால் நெய்யப்படும் காஞ்சீபுரம் பட்டுச் சேலைகளுக்குப் புகழ் பெற்றது. கடந்த காலத்தில், சின்னஞ்சிறு கிளையே, தர்பார் கிருஷ்ணர், ஐஸ்வர்யப் பூக்கள், குறளோவியம் போன்ற கருத்தாக்க அடிப்படையிலும், கிராண்ட் ரிவர்சிபிள் சேலை, 50 ஆயிரம் கலர் சேலை, வர்ணஜாலம் ரகங்கள் போன்ற புதுமைகளைப் புகுத்தியும் பட்டுச்சேலைகளை அறிமுகப்படுத்தி, மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பினைப் பெற்றது குறிப்பிடத் தக்கது.