Some fashion tips for teenagers! 
அழகு / ஃபேஷன்

Teenage வயதினருக்கான சில ஃபேஷன் டிப்ஸ்! 

கிரி கணபதி

டீனேஜ் காலம் என்பது தனிப்பட்ட முறையில் வளர்ச்சி மற்றும் மாற்றம் நிறைந்த ஒரு காலகட்டமாகும். இந்த காலகட்டத்தில் தங்கள் தனித்துவமான ஃபேஷன் ஸ்டைலை கண்டறிந்து வெளிப்படுத்த இளைஞர்கள் விரும்புகிறார்கள். ஃபேஷன் என்பது தன்னுடைய தனித்துவத்தை வெளிப்படுத்த ஒரு சிறந்த வழியாக அவர்கள் கருதுகின்றனர். இந்தப் பதிவில் டீன் ஏஜ் வயதினருக்கான சில ஃபேஷன் டிப்ஸ் பற்றி பார்க்கலாம்.

உங்கள் ஸ்டைலை கண்டறியவும்: ட்ரெண்டுகளை பின்பற்றுவது நல்லதுதான். ஆனால் உங்களுக்குப் பிடித்தமான, உங்களுக்கு நன்றாக பொருந்தக்கூடிய ஸ்டைலை கண்டறிவது முக்கியம். பல்வேறு ஸ்டைல்களை முயற்சி செய்து உங்களுக்கு எது பிடித்துள்ளது, எது நன்றாக இருக்கிறது என்பதை முயற்சித்து பார்த்து சரியாக தேர்ந்தெடுங்கள். 

உங்கள் உடல் வகைக்கு ஏற்ற ஆடைகளை தேர்ந்தெடுங்கள்: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உடல் வகை உண்டு. உங்கள் உடல் வகைக்கு ஏற்ற ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் தோற்றத்தை நீங்கள் சிறப்பாக மேம்படுத்தலாம். ஒல்லியாக இருந்தால் கொஞ்சம் தளர்வான ஆடைகளை தேர்ந்தெடுக்கவும். நடுத்தர உடல்வாகு கொண்டவர்கள் ஃபிட் உடை அணிவது நல்லது. இதுவே குண்டாக இருந்தால், அதிக தளர்வாக இல்லாமல் உங்களை ஒல்லியாக காட்டும்படியான உடைகளை தேர்வு செய்யவும். 

தரமான ஆடைகளை வாங்கவும்: ஆடை விஷயத்தில் எப்போதும் மலிவை நோக்கி செல்லக்கூடாது. உயர்தர ஆடைகள் உங்களை மற்றவர்களுக்கு சிறப்பாக காண்பிக்க உதவும். சில நேரங்களில் உயர்தர ஆடைகளை வாங்குவது அதிக மலிவான ஆடைகளை வாங்குவதைவிட சிறந்தது. தரமான ஆடைகள் நீண்ட காலம் உழைக்கும் என்பதால், விலைக்கு முக்கியத்துவம் தராமல், தரத்திற்கு முக்கியத்துவம் தாருங்கள். 

ஆக்சஸரிகளை பயன்படுத்துங்கள்: ஆக்சஸரிகள் உங்கள் ஸ்டைலுக்கு ஒரு தனித்துவமான தோற்றத்தை சேர்க்க சிறந்த வழியாகும். நெக்லஸ்கள், காதணிகள், வளையல்கள் தொப்பிகள் மற்றும் பைகள் போன்றவற்றை முயற்சி செய்யவும். இவை உங்களது தோற்றத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கும். 

நம்பிக்கையுடன் இருங்கள்: நீங்கள் என்ன அணிந்து இருந்தாலும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். உங்களுடைய நம்பிக்கை உங்களின் லுக்கை வேற லெவலுக்கு எலிவேட் செய்து காட்டும். உங்களது ஸ்டைலில் நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கும்போது, அது மேலும் அழகாக வெளிப்படும். 

எனவே, மேற்கூறிய விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு உங்களுக்கான தனி ஃபேஷன் ஸ்டைலை கண்டுபிடிங்கள். பல்வேறு ஸ்டைல்களை முயற்சி செய்து உங்களுக்கு எது சிறந்ததாக உள்ளது என்பதைப் பாருங்கள். உங்களுடைய தனித்துவத்தை வெளிப்படுத்தி அதில் நம்பிக்கையுடன் இருப்பது மூலமாக, டீனேஜ் பருவத்தில் நீங்கள் அழகான தோற்றத்தை வெளிப்படுத்த முடியும். 

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT