hair care tips 
அழகு / ஃபேஷன்

இளநரையை தடுக்க சில அற்புத யோசனைகள்!

மகாலெட்சுமி சுப்ரமணியன்

முன்பெல்லாம் 45வயதுக்கு மேல்தான் முடி நரைக்கும். அதையும் அவர்கள் இயற்கையான முறையில் கருப்பாக்கி கொள்வர். எளிய வீட்டு வைத்தியமாக கருவேப்பிலை, கரிசிலாங்கண்ணி, கடுக்காய் போன்றவற்றை கொண்டு சாயம் தயாரித்து தலையில் தடவிக் கொள்வர்.

தற்போது பள்ளி படிக்கும்போதே மாணவர்களுக்கு நரைமுடி தோன்ற ஆரம்பித்து விடுகிறது. இளநரை என்பது பெரிய பிரச்னையாக உள்ளது. இது அவர்களுக்கு மனஅழுத்தத்தை தந்து தோற்றத்தை கெடுக்கிறது.

இளநரைக்கு மரபும், ஊட்டச்சத்து குறைபாடும் முக்கிய காரணங்களாக அமைகின்றன. இதில் பரம்பரை காரணமெனில் அதை தடுக்க இயலாது. ஊட்டச்சத்து குறைபாடு என்றால் உணவு, மருந்து, மாத்திரைகளால் கட்டுப்படுத்த முடியும்.

மொட்டை போடுவதால் முடி வளரும். இளநரை தடுக்கப்படும் என பலரும் அடிக்கடி மொட்டை  அடித்துக் கொள்கின்றனர். இது சரியல்ல. தலை முடியின் எந்த பிரச்னையும் அதன் வேர்கள் கால்களில் இருந்துதான் ஆரம்பிக்கிறது‌. நரையும் ஆரம்பத்தில் சரியான மருத்துவ ஆலோசனை பெற்றால் நல்ல வழிகாட்டுதல் கிடைக்கும். நாமாகவே வீட்டு வைத்தியங்களை முயற்சிக்க வழுக்கை ஏற்படும். அதையும் தடுக்க முடியாது.

வயது காரணமாக நரை ஏற்பட்டால் அப்படியே விட்டு விட வேண்டும். இளநரை சிறு வயதில் உண்டாவதற்கு ஹார்மோன் மாற்றங்கள், நாள்பட்ட நீரிழிவு, அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்வதால் என பல காரணங்களை மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

ஊட்டச்சத்து குறைபாடு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, அதிக தூசு, மாசு உள்ள இடத்தில் நீண்ட நேரம் இருப்பதால் இளநரை தோன்றும்.இதற்கு தீர்வாக சில எளிய வழிகளில் தடுக்கலாம்.

காலை, இரவு என இருவேளை தலையில் செக்கு தேங்காய் எண்ணெய் வைத்து காலையில் முடியை அலசலாம்.

சத்தான உணவு முடி வளர்ச்சிக்கு உதவும்.

இளநரை பிரச்னை உள்ளவர்கள் அவர்களது உணவில் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

பழங்கள், காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

செரிமான பிரச்னைகள், மலச்சிக்கல் இல்லாமல் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள முடி உதிர்தல் இருக்காது. இளநரை வராது.

தினமும் வெள்ளை கரிசிலாங்கண்ணி கீரைச் சாறை எடுத்து சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து அரைத்து அதைக் கொதிக்க வைத்து ஆறியதும் பாட்டிலில் வைத்துக்கொண்டு இதை தலையில் தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும்.

மருதாணி இலையை அரைத்து வேம்பாளம்பட்டை கொஞ்சம் சேர்த்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்கவைத்து ஆறியதும் வடிகட்டி உபயோகிக்க முடி வளர்ச்சி அதிகரித்து இளநரை மறையும்.

இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள இளநரை வராது. இரும்புச்சத்து நிறைந்த லோகம் என்ற மருந்து எடுத்துக் கொள்ளலாம்.

நெல்லிக்காய், அகசி போன்றவை சேர்க்கப்பட்ட மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி எடுக்கலாம்.

உணவில் கடுக்காய், சுண்டைக்காய், பேரீட்சை போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

இதனால் முடி வளர்ச்சி தூண்டப்படுவதோடு இளநரையும் மறையும். எல்லாவற்றையும் விட மனஅழுத்தம் இன்றி இருக்க பழக வேண்டும். காற்று மாசில்லாத சூழல், ரசாயன கலப்பில்லாத ஷேம்பூ, டை உபயோகத்தை தவிர்த்தல் என இருந்தால் தலைமுடி பிரச்னைகள் வராது தடுக்கலாம்.

எண்ணெய் குளியல், சத்தான உணவுகள், நிறைய தண்ணீர் அருந்துதல், சந்தோஷமான மனநிலை இவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இளநரை ஏற்படாமல் தடுப்பதோடு நம்மை அழகாக்கும்.

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

SCROLL FOR NEXT