பற்கள் பாதுகாப்பு... pixabay.com
அழகு / ஃபேஷன்

முத்து போன்ற பற்கள் வேண்டுமா? இதை செய்து பாருங்கள்!

நான்சி மலர்

ற்களை பற்றி வர்ணிக்கும் போதே, “முத்து போன்ற பற்கள்” என்றே குறிப்பிடுவார்கள். முத்து போன்று பளபளப்பாகவும், வெண்மையாகவும் இருக்க வேண்டும் என்பதே அதன் பொருளாகும்.

பற்கள் நமக்கு நிறைய விதத்தில் உதவுகிறது. உணவை நன்றாக மென்று தின்பதற்கு, விழுங்குவதற்கு, முகத்தில் உணர்வுகளை பிரதிபலிக்க சிரிப்பதற்கு என்று பற்களால் எண்ணற்ற பயன்கள் உண்டு.

அப்படிப்பட்ட பற்களை பராமரிப்பதில் கண்டிப்பாக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

முன்பெல்லாம் பற்களை வலுவாக வைத்து கொள்ள வேப்பங்குச்சு, கரி, உப்பு போன்றவற்றை பயன் படுத்தினர்.

பின்பு பேஸ்ட், பிரஸ் போன்றவை வந்தது. காலம் மாற மக்கள் அதை வாங்கி பயன்படுத்த தொடங்கினர்.

பற்களை வலுவாக வைத்து கொள்ள

பற்களை பராமரிக்கும் வழிமுறைகள்:

ற்களை இருமுறை ப்ளோரைடு பேஸ்டால் துலக்க வேண்டும். பற்களை எப்போதுமே மிருதுவாக துலக்குவது நல்லது. அழுத்தி துலக்கும் போது ஈருகள் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

ற்களின் இடுக்கில் ஒட்டி கொண்டுள்ள உணவு துகள்களை எடுப்பதற்காக ப்ளாஸை பயன்படுத்தலாம்.

வ்வபோது பல் மருத்துவரை சந்தித்து பற்களை சுத்தம் செய்வதை வாடிக்கையாக்கி கொள்ள வேண்டும்.

திகமாக தண்ணீர் அருந்த வேண்டும்.

புகைப்பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். இதனால் பற்களில் கறை உண்டாக கூடும்.

ணவு முறையை சரியாக கடைப்பிடிக்க வேண்டும்.

சாப்பிட்டு முடித்ததும் வாயை கொப்பளிக்க வேண்டும். அப்போதுதான் பல்லின் இடுக்கில் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவு பொருட்கள்  நீங்கும்.

ற்களை அடிக்கடி பிளீச் செய்யக்கூடாது.

திகமாக இனிப்பு உணவுகளை சாப்பிடுவதும், இனிப்பு பானத்தை அருந்துவதையும் தவிர்க்கவும்.

பற்களை வலுவாக வைத்து கொள்ள உதவும் விட்டமின்களும் உணவுகளும்:

கால்சியம் தான் பற்களின் எனாமலை வழுப்படுத்த உதவும் முக்கியமான மினரலாகும். இது பால், தயிர் போன்ற உணவுகளில் அதிகம் இருந்தாலும் கீரைகள், பீன்ஸ், பாதாம் போன்றவற்றிலும் அதிகம் உள்ளது.

விட்டமின் டி  நம் உடலுக்கு மிகவும் தேவையான கேல்சியம் சத்துக்களை உறிவதற்காக பயன்படுகிறது. இது பால் மற்றும் தானியங்களில் அதிகம் இருந்தாலும் சூரிய ஒளியிலிருந்தும் நம் உடலுக்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விட்டமின் சி  பற்களின் வளர்ச்சிக்கும், பற்களை சரி செய்வதற்கும் பராமரிப்பதற்கும் மிகவும் தேவையான ஒன்றாக இருக்கிறது. ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி அதிகமாக உள்ளது.

பற்களின் மேல் பூச்சான எனாமலூக்கு மிகவும் அவசியமான ஒன்று தான் பாஸ்பரஸ். பற்களின் ஆரோக்கியத்திற்கு பாஸ்பரஸ் மிகவும் அவசியமான ஒன்றாகும் ஏனெனில் இது எனாமலின் ஆரோக்கியதிற்கு பயன்படுகிறது. பாஸ்பரஸ் அதிகமாக உள்ள உணவு, முட்டை, கறி, மீன் ஆகியவையாகும்.

விட்டமின் ஏ ஈறுகளின் வலிமைக்கும் பற்களின் மேல்பூச்சிக்கும் அதிகமாக தேவைப்படுகிறது. இது கேரட், சக்கரைவள்ளி கிழங்குகளில் அதிகமாக உள்ளது.

பற்களை பாதுகாக்கும் ஆயூர்வேத வழிமுறைகள்:

ல் சொத்தையை போக்குவதற்கு மஞ்சள் தூள், கடுகு எண்ணெய், உப்பு ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போல செய்து கொண்டு அதை பற்கள் மற்றும் ஈறுகளில் தடவி விட்டு பின்பு கழுவ வேண்டும்.

துளசி, கருவேலம், ஆலம், வேம்பு ஆகியவற்றின் குச்சுகளை எடுத்து கடித்து பிரஸ் போன்று பற்களில் உபயோகப்படுத்துவதால் பற்கள் வலிமை பெறும்.

ல் வலியினை போக்க நல்லெண்ணை, கிராம்பு, இலவங்கப்பட்டை பயன்படுகிறது.

ஆயில் புல்லிங்

ஆயில் புல்லிங்:

ஆயில் புல்லிங் முறை பல நூற்றாண்டுகளாக பற்களை பாதுகாக்க பயன்படுத்தும் முறையாகும். பல் சொத்தை, ஈறில் இரத்தம் கசிதல், வாய் துர்நாற்றம், தொண்டை வறட்சி, உதட்டு வெடிப்பு ஆகியவற்றை போக்கி பற்களையும் தாடைகளையும் வலிமையாக்க பயன்படுகிறது.

ஆயில் புல்லிங் எப்படி செய்வது:

ஆயில் புல்லிங் செய்வதற்கு நல்லெண்ணை அல்லது தேங்காய் எண்ணையை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இந்த எண்ணெய்களில் பேக்டீரியாக்களை அழிக்க கூடிய தன்மைகள் உள்ளது.

காலையில் வெறும் வயிற்றில் நல்லெண்ணையை வாயில் ஊற்றி 15 முதல் 20 நிமிடங்கள் வரை நன்றாக வாய்க்குள்ளேயே வைத்து கொப்பளிக்க வேண்டும். இந்த முறையை தொடர்ந்து 40 நாட்கள் செய்து வந்தால் நல்ல பலனை தரும். இதனால் ஏற்படும் பலன்கள் என்ன வென்றால், வாயில் இருக்கும் பேக்டீரியாவை வெகுவாக குறைக்கும், வாய் துர்நாற்றத்தை நீக்கும்.

“பல் போனால் சொல் போச்சு” என்ற சொலவடையுண்டு.

பல் சரியாக   அமையவில்லையென்றால் முகத்தின் கட்டமைப்பு, அழகு என்று எல்லாமே மாறிவிடும். எனவே பற்களை பராமரித்து பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

எலான் மஸ்க் தொழில்நுட்பத்திற்கு பச்சைக்கொடி… அடேங்கப்பா! 

SCROLL FOR NEXT