Handbag 
அழகு / ஃபேஷன்

ஹேண்ட்பேக் வாங்க போறீங்களா? அப்ப இதை கவனிங்க..!

கல்கி டெஸ்க்

- கார்த்திகா

இன்றைய நவீன பெண்கள் முதல் வயது அதிகமுள்ள வேலைக்கு செல்லும் பெண்கள் வரை அனைவரும் விரும்பும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்று ஹேண்ட்பேக்குகள். வெளியில் செல்லும் பெண்கள் உடைகளுக்கு அடுத்தபடியாக விரும்புவது இவ்வாறான கைப்பைகளையே. இன்று எல்லாவற்றிலும் புதுமையை விரும்பும் பெண்கள் தங்களுடன் எடுத்து செல்லும் கைப்பைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் ஆச்சர்யமில்லை. உங்களுக்கான சரியான ஹேண்ட்பேக்கை வாங்க கீழ்கண்ட விஷயங்களை நிச்சயமாக கவனத்தில் கொள்ளவேண்டும்.

  • அதிக பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை என்றால், பெரிய கைப்பைதான் வேண்டும் என்று இல்லை. அதிக பொருட்களை வைக்கும் அளவிலான விசாலமான கைப்பையை வாங்கலாம்.

  • பையின் எடை உங்கள் கைகள் மற்றும் தோள்களில் அழுத்தம் மற்றும் வலியை கொடுக்காத அளவில் இருக்க வேண்டும்.

  • நீங்கள் கொடுக்கும் விலைக்கான தரத்துடன் ஹேண்ட்பேக் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

  • நீண்ட காலம் உழைக்கும் வகையிலான ஹேண்ட் பேக்குகள் சிறிது விலை கூடுதல் என்றாலும் தயங்காமல் வாங்கலாம்.

  • மலிவாக இருக்கிறதே என வாங்கினால், சிறிது நாட்களிலேயே கைப்பிடி இணைப்பு, தையல்கள் பிரிந்து உபயோகம் அற்றதாகிவிடும். மேலும் பொது இடங்களில் சேதாரம் ஆகி நம்மை சங்கடமாக்கும்.

  • ஹேண்ட்பேக்கின் கைப்பிடி உறுதியாக உள்ளதா என முதலில் கவனியுங்கள்.

  • ஹேண்ட் பேக்கின்டிசைன்களை விட அவற்றின் தரமே முதன்மையானது. அதன் ஜிப்புகளை பரிசோதித்து வாங்குவது அவசியமானதாகும்.

  • வாங்குவது மட்டுமின்றி பராமரிப்பும் மிகவும் முக்கியமாகும். நாம் பராமரிக்கும் முறையில்தான், அதன் நீடித்த உழைப்பும் வெளிப்படும்.

  • நீண்ட நாளைக்கு ஒரே கைப்பை பயன்பாடு மற்றும் அளவுக்கு அதிகமான கனத்தை பைகளில் வைப்பதன் காரணமாகவும் தரமான பைகளும் எளிதில் சேதாரம் ஆகின்றன.

கைப்பை உபயோகிப்பது அவசியம் மற்றும் பேஷன் ஆக மாறிப்போன இன்றைய காலத்தில், காணும் அனைத்தையும் வெறும் டிசைன் மற்றும் வண்ணங்களின் ஈர்ப்புக்காக வாங்காமல், தரத்தை நன்கு ஆய்வு செய்த பின், அதன் டிசைனை பார்த்து வாங்குவது உங்களுடைய கைப்பைக்கும் நல்லது; அதனுள் இருக்கும் பணத்திற்கும் நல்லது!

கணவன் மனைவி இந்த 7 விஷயங்களில் வெளிப்படையாக இருக்க வேண்டும்! 

ஆந்திரப் பிரதேசத்தின் புவிசார் குறியீடு பெற்ற பாரம்பரிய இனிப்பு ஆத்ரேயபுரம் பூதரெகுலு!

இந்த கண்ணாடி உங்களை தூங்க விடாது!

மஸ்குலர் டிஸ்டிராபியின் காரணமும் தீர்வும்!

நுரையீரலுக்கு நன்மை செய்யும் நொச்சி இலை பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT