Back packs
Back packs 
அழகு / ஃபேஷன்

பயணத்தின்போது பெண்கள் அவசியம் பயன்படுத்த வேண்டிய பெண்களுக்கான -Back packs!

பாரதி

குடும்பத்துடன் பயணம் செய்யும்போது மட்டும்தான் நம் வாழ்விலேயே மிகவும் சந்தோஷமாக உணர்வோம். அந்த சமயத்தில் நம்மை கடுப்பாக்கும் ஒரு விஷயம் என்றால் அது நமது லக்கேஜ்தான். சில பொருட்களை மறந்துவிடுவோம், சில பொருட்களை பையில் இடமில்லை என்று வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துவிடுவோம். அல்லது ஆடைகளைக் குறைத்துவிட்டு மேக்கப் பொருட்கள் மற்றும் இன்னும் சில தேவையான பொருட்களை எடுத்து வருவோம். குளிர் பிரதேசங்களுக்கு போகும்போது நிறைய ஆடைகள் பெண்கள் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

குளிரிலிருந்து நமது சருமத்தைக் காக்க சில மேக்கப் பொருட்கள், முன்னெச்சரிக்கைக்காக மருந்துப் பொருட்கள் ஆகியவையும் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படியென்றால் அதற்கேற்றவாறு பேக் வாங்குவது மிகவும் அவசியமானது. ஆகையால் பெண்கள் பயணத்தின் போது பயன்படுத்த வேண்டிய Backpacks பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Pegwin Cute style Women Backpack:

Pegwin Cute style Women Backpack:

ந்த பேக் தோலால் செய்யப்பட்டது.  இந்த பேக்கில் உள் ஜிப்புகள் அதிகம் இருக்கும். அதாவது சிறிய பொருட்களை நமது தேவைக்கேற்ப பிரித்து வைத்துக்கொள்ளலாம். மேலும் இது திடமான மற்றும் குஷன் வகையான தோள் பட்டையை கொண்டிருக்கும். ஆகையால் இது தோளில் மாட்டுவதற்கு எளிதாக இருக்கு. அவ்வளவாக எடை அதிகமாகத் தெரியாது. அதேபோல் அதிக பொருட்களையும் எடுத்துக்கொள்ளலாம். இந்த பேக் ட்ரெக்கிங் போகும்போது எடுத்து செல்வதற்கு ஏற்றது.

Vismiintrend fashion stylish vegan leather anti theft Backpack:

Vismiintrend fashion stylish vegan leather anti theft Backpack:

ந்த வகையான பேக் பி யூ தோல், மெட்டல் எக்ஷ்ட்ராஸ் மற்றும் டெக்ஷ்சர் ஆகியவையால் தயாரித்தது. அதனால் இந்த பேக்கிற்கு நீரினால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த பேக்கில் A4 ஷீட், புத்தகங்கள், டைரிக்கள், மொபைல் போன், குடை, சிறிய அளவு மடிக்கண்னி போன்றவை வைத்துக்கொள்வதற்கு வசதியாக இருக்கும். இதேபோல் நாம் அடிக்கடி எடுத்து பயன்படுத்தும் ஹெட் போனுக்கென வசதியான ஒரு தனி இடம்  உள்ளது.

Wildcraft  polyester 35 Ltrs Black and mel backpack:

Wildcraft polyester 35 Ltrs Black and mel backpack:

ந்த பேக் பயணம் செய்பவர்களுக்கு மட்டுமல்ல மாணவர்களுக்கும் வசதியாக இருக்கும். அடுக்கடுக்கான ஜிப்கள் நிறைய இருக்கும். ஆகையால் நிறைய தேவையானப் பொருட்களை நாம் எடுத்துக்கொள்ளலாம். மேலும் எவ்வளவு நிறைய பொருட்கள் எடுத்து வைக்கிறோமோ அதற்கேற்றவாரு பேக்கின் தோள் பட்டையை சரி செய்துக் கொள்ளலாம். மேலும் இது வெகு நாட்கள் உழைக்கும்.

Lino Perros Women Formal Backpack:

Lino Perros Women Formal Backpack:

ந்த பேக் இப்போது நிறைய பேர் பயனப்டுத்தி வருகிறார்கள். பர்ஸ், கீ ச்சைன், மொபைல் போன் போன்ற சிறிய பொருட்களை வைக்க ஒரு ஜிப் உள்ளது. மேலும் டேப் , மடிக்கணினி போன்றவை வைக்க ஒரு இடமுள்ளது. அதேபோல் பயணத்தின்போது பயன்படுத்தும் பெரிய தண்ணீர் பாட்டில் வைக்கவும் இடங்கள் உள்ளன.

Kleio Designer Women Backpack:

Kleio Designer Women Backpack

து வார இறுதி பயணங்களுக்கு மிக மிக ஏற்ற பேக். பாலிஸ்டரால் செய்யப்பட்டிருக்கும் இந்த பேக்கில் போன், டேப் வைக்க ஒரு இடம் உள்ளது. மற்றும் இரண்டு மூன்று ஆடைகள், உணவு, புத்தகங்கள், குடை, வைக்க ஒரு இடமும் உள்ளது. மேலும் பர்ஸ், டிஸு பேப்பர், பணம் போன்றவை வைக்க ஒரு தனி இடம் உள்ளது. இந்த பை கல்லூரி மாணவர்களுக்கும் ஏற்ற ஒன்றாக இருக்கும்.

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

சர்க்கரைவள்ளிக்கிழங்கில் உள்ள இனிப்பான ஆரோக்கிய நன்மைகள்!

நாய்கள் ஏன் செருப்பை அடிக்கடி கடிக்கின்றன தெரியுமா?

உங்கள் திறமைகளை வெளிக்காட்டத் தயங்காதீர்கள்!

நீரிழிவு எச்சரிக்கை: இந்த 5 பழக்கங்கள் இருப்பவர்கள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT