நாம் ஆசை ஆசையாக வாங்கும் பட்டுப்புடவைகளை கல்யாணம் போன்ற முக்கிய விழாக்களுக்கு மட்டுமே அணிவது வழக்கம். மற்ற நேரங்களில் மடித்து பீரோவில் பாதுகாத்து வைப்போம். அப்படி இருக்கும் பட்டுப் புடவையின் ஜரிகை போன்றவை வீணாகாமல் வெகுகாலம் உழைக்க வேண்டும் என்று நினைத்தால், இந்தப் பதிவில் சொல்லப்படும் டிப்ஸை முயற்சித்து பாருங்கள்.
1.முதலில் பட்டுப்புடவையை பிளாஸ்டிக் பைகளிலோ அல்லது வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் ஸ்டீல் பீரோக்களிலோ வைக்கக்கூடாது. அதை ஒரு நல்ல காட்டன் பேகில்தான் பாதுகாத்து வைக்க வேண்டும்.
2. உங்களுடைய பட்டுப்புடவையில் தங்க ஜரிகையோ அல்லது வெள்ளி ஜரிகையோ இருந்தால், அதை ஒரு வேட்டியில் மடித்து பிறகு காட்டன் பேக்கில் வைத்தால் தான் ஜரிகையெல்லாம் பாதுகாப்பாக இருக்கும்.
3.உங்களுடைய பட்டுப்புடவையை வைக்கும்போது அதில் கண்டிப்பாக Naphthalene balls போடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு பதில் வாசனைக்காக Fragrance package வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.
4.பட்டுப்புடவையை அரிதாக பயன்படுத்தினாலும், மூன்று மாதத்திற்கு ஒருமுறை அதை எடுத்து அதனுடைய மடிப்பை மாற்றி உலர்த்தி விட்டு திரும்ப மடித்து வைத்து விடுங்கள். இப்படி செய்வதனால், உங்கள் பட்டுப்புடவையில் ஜரிகை ஏதும் கிழியாமல் பார்த்துக்கொள்ளலாம்.
5.பட்டுப்புடவையைக் கட்டிக்கொண்டு வெளியிலே போகும்போது கண்டிப்பாக பெர்ப்யூம் ஏதும் பட்டுப்புடவையில் படாதவண்ணம் பார்த்துக்கொள்ளவும். ஏனெனில், அது புடவையை பயங்கரமாக டேமேஜ் செய்துவிடும். எனவே, பெர்ப்யூம் போடவேண்டும் என்று நினைத்தால், பல்ஸ் பாயின்டில் மட்டும் பயன்படுத்தவும்.
6. பட்டுப்புடவையை குளிர்ந்த நீரிலே அலசுவது சிறந்தது. ஏதேனும் கடினமான கறையிருந்தால், Dry clean செய்வது அவசியமாகும்.
7.பட்டுப்புடவையை அலசியதும் அதிக தண்ணீரை வெளியேற்ற அதை பிழிய வேண்டாம். சாதாரணமாக சூரிய ஒளி நேராக படாத நிழலான பகுதியில் புடவையை காயவைப்பது சிறந்தது. நேராக சூரிய ஒளியில் படும்படி வைத்தால், புடவையின் நிறம் மங்கிப்போகக்கூடும்.
8. பட்டுப்புடவையின் மீது நேரடியாக அதிக வெப்பத்தை செலுத்தாமல் Muslin cloth பயன்படுத்தி அதன் மீது அயன் செய்வது சிறந்ததாகும். உங்கள் பட்டுப்புடவையை பளபளவென்று வெகுக்காலம் வைத்துக்கொள்ள இந்த 8 டிப்ஸையும் ட்ரை பண்ணிப் பாருங்கள்.