சில பெண்களுக்கு டீ ஷர்ட் அல்லது கையில்லாத ஆடை அணியும்போது ஒரு கூச்சமான உணர்வு ஏற்படும். அவர்களுக்கான புதிய மாடல் தான் Shrug. முன்னதாக இது இடுப்பளவு வரை இருந்தது. பின்னர் இது ட்ரெண்டிற்கு ஏற்றவாரு முழங்கால் அல்லது கணுக்கால் அளவு வரை நீண்ட கோட் போன்ற ஆடையாகவும் உருமாறியுள்ளது. டீ ஷர்ட்டிற்கு துப்பட்டா அணிய முடியாது. அதேபோல் குர்தா போன்ற ஆடைகளுக்கு துப்பட்டா அணிய விரும்பாதவர்கள் Shrug தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது. அதுவும் வெஸ்டர்ன் மாடல் மற்றும் ட்ரெடிஷனல் மாடல் என இரண்டிற்கும் தனித் தனியான Shrug உள்ளன. எந்த மாதிரியான ஆடைகளுக்கு எப்படிப்பட்ட Shrug பயன்படுத்தலாம் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
இது ட்ரெண்டிங்கில் உள்ள மாடல். நீங்கள் அணியும் ஜீன் நிறத்திற்கு எதிரான நிறத்தில் இந்த வகையான Shrug அணியலாம். ஆலிவ் வகையான டீ ஷர்ட் அணிந்து கணுக்கால் வரை இருக்கும் Long Shrug அணிந்தால் ஒரு மாடர்ன் லுக் கிடைக்கும்.
இது இடுப்பு வரை உள்ள Shrug. இதன்மூலம் தான் Shrug நாளுக்கு நாள் புது புது வடிவமைப்புகளுடன் உருமாறி வருகிறது. இந்த வகையான Shrug முட்டி அல்லது முட்டிக்கு மேல் வரை உள்ள கவுன் ஆடைகளுக்கு ஏற்றதாக இருக்கும். அதேபோல் இது மென்மையான துணியால் செய்யபட்டிருக்கும். ஆகையால் Cropped shrug வெயில் காலங்களில் அணிந்துக்கொள்வதற்கு ஏற்றதாக இருக்கும்.
Fringe shrug மிகத் தளர்வாக இருக்கும் ஒன்று. இது முட்டிக்கு மேல் இருக்கும் ஜீன் மற்றும் டீ ஷர்ட் அணியும்போது இந்த வகையான shrug பயன்படுத்துவது வசதியாக இருக்கும். இது தளர்வாக இருப்பதோடு shrug முடியும் ஓரங்களில் நூல் தொங்குவது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆகையால் இது ஒரு க்ளாஸிக் லுக்கைத் தரும்.
இந்த வகையான shrug கையில்லாத ஆடைகளுக்குப் பயன்படுத்தலாம். டீ ஷர்ட், கவுன், ஆகியவற்றிற்கு Floral print shrug பயன்படுத்தலாம். இதன் மேல் செடிகள், பூக்கள் போன்றவை வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இந்த வகையான shrug குர்தி ஆடைக்கு பொறுத்தமானதாக இருக்கும். மேலும் இது முழுக்கை அல்லது அரைக்கை அளவில் இருக்கும் shrug என்பதால் கையில்லாத ஆடைகளுக்குப் பொருந்தும். இது முட்டி அல்லது முட்டிக்கு கொஞ்சம் கீழ் வரை நீண்ட அளவாக இருக்கும். பண்டிகை மற்றும் நிகழ்ச்சிகளில் இந்த வகையான குர்தி மற்றும் shrug அணிவது புது ட்ரெண்டுடன் அழகாக இருக்கும்.
இது நடிகைகளின் மூலம் பெண்களிடையே வெகுவாக கவரப்பட்ட ஒன்று. ஜீன்ஸ் அணிந்து அதற்கு ஏற்ற நிறத்திலோ வடிவமைப்பிலோ வயிற்றுப் பகுதி வரை சீராக வந்து பிறகு கணுக்கால் வரை பிளவு இருக்கும். இதற்கு டீ ஷர்ட் அணிய வேண்டும் என்பது அவசியம் இல்லை. Shrug ஒன்றை மட்டுமே முழு மேலாடையாகப் பயன்படுத்தலாம். இந்த Shrug ஐயும் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்லலாம்.