திரிபலா 
அழகு / ஃபேஷன்

இந்த மூலிகையைப் பயன்படுத்தினால் உங்க முடியின் ஆரோக்கியம் வேற லெவலுக்கு மாறும்! 

கிரி கணபதி

ஆயுர்வேதத்தின் அற்புத மூலிகைகளில் ஒன்றான திரிபலா அதன் மருத்துவ குணங்களுக்குப் பெயர் பெற்றது. இது சருமம், செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த உடல் நலம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், திரிபலாவின் பயன்கள் இத்துடன் முடிந்து விடுவதில்லை. இது கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் அருமருந்தாக விளங்குகிறது. திரிபலாவை முடிப் பராமரிப்பில் பயன்படுத்துவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.‌ 

திரிபலா என்பது தான்றிக்காய், பூளை, நெல்லிக்காய் ஆகிய மூன்று மூலிகைகளின் கலவையாகும். இந்த மூன்றையும் சேர்த்து தயாரிக்கப்படுவதே திரிபலா. இது வயிற்றுப்புண், வீக்கம், நோய் தொற்றுக்களை எதிர்த்து போராடவும், செரிமானத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது. 

திரிபலா கூந்தலுக்கு அளிக்கும் நன்மைகள்: 

திரிபலாவில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகள், முடி உதிர்தலுக்குக் காரணமான காரணிகளை எதிர்த்துப் போராடுகின்றன. இது முடி வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்தலைக் குறைக்கிறது. திரிபலா ரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வேர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்கச் செய்கிறது. முடி வளர்ச்சியை ஊக்குவித்து அடர்த்தியான கூந்தலைத் தருகிறது. 

திரிபலாவின் ஆண்டி ஃபங்கல் பண்புகள் பொடுகை ஏற்படுத்தும் பூஞ்சைகளை எதிர்த்து போராடி பொடுகை நீக்குகிறது. மேலும், இது முடியில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைத்து முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது. 

உச்சந்தலையை சுத்திகரிப்பதில் திரிபலா பெருமளவில் உதவுகிறது. இதனால், நோய்த் தொற்றுகள் தடுக்கப்பட்டு உச்சந்தலை ஆரோக்கியமாக இருப்பதால் முடி பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். 

திரிபலாவை பயன்படுத்தும் முறை: 

திரிபலா பொடியை தேங்காய் எண்ணெய் அல்லது வேப்ப எண்ணையுடன் கலந்து தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து அலசுவதால், முடியின் ஆரோக்கியம் மேம்படும். அல்லது திரிபலா பொடியை நீரில் கொதிக்க வைத்து குளிர்ந்த பிறகு அந்தத் தண்ணீரை தலையில் தடவி குளிக்கலாம். மேலும், திரிபலா பொடி தயிர் அல்லது முட்டையுடன் சேர்த்து ஹேர்பேக் போல பயன்படுத்துவது, உண்மையிலேயே நல்ல ரிசல்ட் கொடுக்கும். 

திரிபலா கூந்தலின் அழகை மேம்படுத்த வந்த இயற்கையின் வரமாகும். இது முடி உதிர்தல், பொடுகு, முடி நரைப்பு போன்ற பல்வேறு முடிப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவுகிறது. தொடர்ந்து இதைப் பயன்படுத்துவதால் ஆரோக்கியமான அடர்த்தியான மற்றும் பளபளப்பான கூந்தலைப் பெறலாம். இருப்பினும், இதை நீங்கள் முதல் முறை பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், ஒரு சரும மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று பயன்படுத்துவது நல்லது. 

இது என்னது, வித்தியாசமான ரெசிபியா இருக்கே? ஆனா செம டேஸ்ட்! 

அவசரத்துக்குக் கைக்கொடுக்கும் சில எளிய பாட்டி வைத்தியக் குறிப்புகள்!

உங்களை நாய் கடித்துவிட்டால் பதற வேண்டாம்… இவற்றை சரியாக செய்தாலே போதும்! 

தலைக்கு சீயக்காய் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

மனதுக்கு உற்சாகத்தையும் பாதுகாப்பு உணர்வையும் தரும் மஞ்சள் நிற மகத்துவம்!

SCROLL FOR NEXT