அழகு / ஃபேஷன்

மரு உதிர மருத்துவக் குறிப்புகள்!

பத்மப்ரியா

உங்கள் அழகை கெடுக்கும் மருக்கள் உருவாவதற்கு காரணம், கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாவதே.

  • 1 ஸ்பூன் விளக்கெண்ணெயில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து, மருக்களின் மீது தடவி 30 நிமிடங்கள் கழித்து , வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், மருக்கள் உதிர்ந்துவிடும்.

  • வெங்காய சாற்றினை இரவில் தூங்கு முன் மருக்களின் மீது அப்ளை செய்து வந்தால் மருக்கள் விரைவில் உதிர்ந்து விடும்.

  • எலுமிச்சம் பழம் சாறில் மஞ்சள் தூள் கலந்து, இந்த கலவையை பஞ்சில் நனைத்து மருக்கள் மீது அப்ளை செய்து வந்தால் மருக்கள் விரைவில் உதிர்ந்து விடும்.

  • பூண்டை நீர்விடாமல் அரைத்து மருக்கள் மீது தடவி அரைமணி நேரம் காயவிட்டு எடுக்க வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் வரை செய்தால் மரு உதிர வாய்ப்புண்டு.

  • இஞ்சியை தோல் சீவி பேஸ்ட் போல் அரைத்து மரு உள்ள இடத்தில் தடவி வர வேண்டும். இஞ்சியின் காரத்தன்மை சருமத்தில் எரிச்சலை உண்டு செய்தாலும் கூட தொடர்ந்து செய்து வரும் போது மரு உதிர வாய்ப்புண்டு.

  • இரவு நேரத்தில் மரு இருக்கும் இடங்களில் வாழைப்பழத் தோலை கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். மருக்ஙள் உதிர்ந்து விழவும், புதிதாக மருக்கள் தோன்றாமல் இருக்கவும் வாழைப்பழத் தோல் உதவுகிறது.

  • உருளைக்கிழங்கு சாற்றை இரவில் மருக்கள் மீது தடவ வேண்டும். பின்னர் காலையில் கழுவி வந்தால் மருக்கள் நீங்கிவிடும்.

  • டீ ட்ரீ எசன்ஷியல் ஆயிலை மருக்களின் மீது தடவி வந்தால் குளிர்ச்சியாக  இருப்பதோடு, மரு இருந்த தழும்பு கூட தெரியாமல் உதிர்ந்து விடும்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT