அழகு / ஃபேஷன்

கடைக்குப் போகாமலேயே உடைகளை அணிந்து பார்த்து ஷாப்பிங் செய்யலாம். எப்படித் தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

தற்போதைய ஷாப்பிங்கில் உள்ள சிக்கல்கள்:

பெருநகரங்களில் உடைகள், அணிகலன்கள் வாங்க கடைகளுக்கு சென்று வீடு திரும்புவது ஒரு அவஸ்தையான அனுபவம். போக்குவரத்தில் ஊர்ந்து சென்று கடைகளில் பெரும் கூட்டத்தில் சிக்கி உடைகள் வாங்குவது பல மணி நேரத்தை விழுங்கிவிடும். அதிலும் என்னதான் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து, ட்ரையல் ரூமில் உடைகளைப் போட்டுப் பார்த்து வாங்கினாலும், வீட்டுக்கு வந்து பார்த்த பின்பு அவை பிடிக்காமல் போகலாம் அல்லது ஏதேனும் டேமேஜ் இருக்கலாம். மறுபடியும் கடைக்கு சென்று உடையை மாற்றி வேறு வாங்குவது இன்னும் நேரத்தை விழுங்கும் நிகழ்வு.

இந்தத் தொல்லையே வேண்டாம் என ஆன்லைனில் ஆர்டர் போட்டு வாங்கினால் அதிலும் பல சிக்கல்கள். அளவு, நிறம், டிசைன் என பலநேரங்களில் நாம் துல்லியமாக குறிப்பிட்டு ஆர்டர் போட்டாலும், துளியும் சம்பந்தமின்றி வந்து சேரும் உடைகளால் டென்ஷன் எகிறும். மொத்தத்தில் நேரிலோ, ஆன்லைனிலோ, ஷாப்பிங் என்பது அவஸ்தையாக இருக்கிறது.

ஃபேஷன் உலகில் செயற்கை நுண்ணறிவின் பங்கு (A.I)

செயற்கை நுண்ணறிவின் வரவால் பேஷன் உலகின் எதிர்காலம் மிகப் பிரமாதமாக இருக்கும் என்றும் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை A.I ஏற்படுத்தும் என்றும் கணித்திருக்கிறார்கள். வருங்காலத்தில் வீட்டில் இருந்தபடியே ஷாப்பிங் செய்யும் வசதியை A.I கஸ்டமர்களுக்கு ஏற்படுத்தித் தருமாம்.

வெர்ச்சுவல் பிட்டிங் ரூம் (Virtual fitting room):

முதற்கட்டமாக A.Iயின் உதவியால் வெர்ச்சுவல் பிட்டிங் ரூம் அமைக்கப்படும். நேரடியாக கடைக்கு சென்று, பிடித்த உடையை தேர்வு செய்ய வேண்டும். வெர்ச்சுவல் பிட்டிங் அறையில் இருக்கும் கண்ணாடி முன், கையில் உடையைப் பிடித்தபடி நின்றால் அதை உடலில் அணிந்து பார்க்காமலேயே, நமக்குப் போட்டுக் காட்டிவிடும். கண்ணாடியில் பார்த்து நமக்கு அந்த ஆடை பொருந்துகிறதா என்று அறிந்துகொள்ளலாம். தற்போது கொரியாவில் மேக் அப் சாதனங்களை இந்த முறையில் முயன்று பார்க்கும் வசதி இருக்கிறது. லிப்ஸ்டிக் ஒன்றை வாங்க விரும்பினால், அதை கையில் வைத்து  கண்ணாடியில் காட்டினால், உதடுகளில் வண்ணம் தீட்டிவிடும். விரைவில் உடைகளையும் இப்படி அணிந்து பார்க்க வெர்ச்சுவல் பிட்டிங் ரூம் அமைக்க தீவிரமாக முயன்று வருகின்றனர். 

மெய்நிகர் செயலிகள் மூலம் (Virtual try on apps) மூலம் வீட்டிலிருந்தே ஷாப்பிங்:

அடுத்த கட்டமாக, மெய்நிகர் செயலிகள் மூலம் வீட்டிலிருந்தே ஷாப்பிங் செய்யும் வசதியை A.I ஏற்படுத்தித் தரும். பொதுவாக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஒரு உடை எப்படிப் பொருந்துகிறது என்பதை பலவித கோணங்களில் பார்க்க ஆசைப்படுவார்கள். மெய்நிகர் செயலிகள்  (வெர்ச்சுவல் ட்ரை ஆன் ஆப் - Virtual try on apps) மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த உடைகளை, அவற்றைத் தொட்டுப் பார்க்காமலேயே, வீட்டிலிருந்தபடியே அணிந்து பார்க்க முடியும். இதுபோன்ற ஆப்கள், A.Iயின் உதவியால் வாடிக்கையாளர்களின்  உடலை 3டி எஃபெக்டில் காண்பிக்கிறது. இதன்மூலம் தாங்கள் தேர்ந்தெடுத்த உடைகள், நன்றாகப் பொருந்துகிறதா என அவர்கள் (மெய்நிகர் முறையில்) போட்டுப்பார்த்து அறிந்துகொள்ளலாம்.      

இந்த ஆப்  அலைந்து திரிந்து ஷாப்பிங் செய்யும் சுமையை குறைக்கிறது. மேலும், வாடிக்கையாளர்களின் வேறுபட்ட உடல் அமைப்புக்கு ஏற்றவாறு அந்த குறிப்பிட்ட உடையை அணிந்தால் எப்படி இருக்கும்? என்று காட்டுவதுடன், அதனுடன் பொருத்தமான அணிய வேண்டிய அணிகலன்கள் மற்றும் காலணிகளைப் பற்றியும் ஐடியா கொடுக்கிறது. இதனால் கஸ்டமர்கள் தங்களுக்குத் தேவையான உடைகளை திருப்தியாக வாங்கிக்கொள்ளலாம்.

இதனால் அவர்களுக்கு நேரமும் பணமும் மிச்சம் ஆகிறது. ஒரு பொருளை திரும்பக் கொடுத்துவிட்டு ரீஃபண்ட் வரும் வரை டென்ஷனோடு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை மேலும் டிராபிக்கில் சிக்கி நெரிசலில் பிதுங்கி வழிய வேண்டாம் வீட்டில் இருந்தபடியே மிகவும் அமைதியாக துணிகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்

கடைக்காரர்கள் மற்றும் வியாபாரிகளும் இதனால் நன்மை அடைவார்கள். வாடிக்கையாளரின் மனம் கவர்ந்த ஆடைகள் பற்றிய தகவலை A. Iமூலம் தெரிந்துகொண்டு அதற்கேற்ற ஆடைகளை சந்தைப்படுத்துவதில் முயல்வார்கள். அவர்ளுக்கு நல்ல ஒரு வளமான வியாபார சந்தையையும் உருவாக்கித் தருகிறது.

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

SCROLL FOR NEXT