Hair growth 
அழகு / ஃபேஷன்

ஒத்தையா உள்ள முடி கத்தையா வளரணுமா? இதை ட்ரை பண்ணுங்க!

சங்கீதா

நம்மில் பலரும் அடர்த்தியான கூந்தல் இருக்க வேண்டும் என ஆசைப்படுவதுண்டு. அவ்வாறு நீளமான கூந்தல் இல்லை என்றாலும் பரவாயில்லை, அடர்த்தியாக இருந்தால் போதும் என நினைப்போம். ஆனால் பல காரணங்களுக்காக நம்முடைய முடி உதிர்ந்து வருகிறது. அதற்காக நாம் சந்தையில் விற்கப்படும் பல்வேறு வகையான இரசாயனம் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இது மேலும் நம்முடைய முடி உதிர்வை அதிகப்படுத்தும்.

பல்வேறு காரணங்களுக்காக முடி உதிர்வு ஏற்படுவதை நாம் இயற்கையான பொருட்களை கொண்டு சரி செய்ய முடியும். நாம் இந்த பதிவில் முடி உதிர்வை கட்டுப்படுத்தி, எவ்வாறு கூந்தலை நீளமாகவும், அடர்த்தியாகவும் பராமரிக்கலாம் என பார்க்கலாம்.

முடி உதிர்வதற்கான காரணங்கள்:

பொதுவாக முடி உதிர்வதை நாம் சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ள கூடாது. சாதாரணமாக கூந்தலை வாரும் போது ஒன்றிரண்டு முடிகள் உதிரும். ஆனால் திடீரென்று பார்த்தால் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு முடி உதிர்வு ஏற்படும். இது சாதாரணமாக நாம் விட முடியாது. காரணம் முடி உதிர்வு அதிகம் ஏற்படுகிறது என்றால் நம் உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என அர்த்தம்.

பல நாட்களாக மன அழுத்தம், தூக்கமின்மை, கூந்தலை கவனிக்காமல் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கூந்தலை வாருவது, காலநிலை மாற்றம், உடல் உஷ்ணம், உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம், ஊட்டசத்து குறைபாடு, ஹார்மோன் மாற்றம், மருந்துக்களை உட்கொள்வதால் பக்கவிளைவாக கூந்தல் உதிர்வது போன்ற காரணங்களால் முடி உதிர்வு ஏற்படும்.

எவ்வாறு தடுக்கலாம்:

முதலில் கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்துவதற்கு ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் ஆகியவற்றை எடுத்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு கலந்து வைத்துள்ள எண்ணெயை கூந்தலின் வேர்ப்பகுதியில் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் தேய்த்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் 20 நிமிடங்கள் கழித்து தலை குளிக்க வேண்டும். இவ்வாறாக வாரத்திற்கு இருமுறை செய்ய வேண்டும்.

அடுத்தது வெந்தையம். இதனை முதல் நாள் இரவு ஊறவைத்து நன்றாக அரைத்து அதனை தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து தலை குளிக்க வேண்டும். மேலும் வெந்தையத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், புரோட்டீன் மற்றும் நிகோடினிக் அமிலம் காணப்படுவதால் முடி உதிர்வை கட்டுப்படுத்தி முடி வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது.

வெங்காய சாறு தேய்ப்பதால் முடி உதிர்வை கட்டுப்படுத்த முடியும். வெங்காய சாறு முடியின் துளைகளுக்குள் ஊடுறுவிச் சென்று முடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது.

மேலும் நாம் சாப்பிடும் உணவில் கட்டாயம் புரோட்டீன் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். முட்டை, மீன், பச்சை பயிறு, கொண்டக் கடலை, முக்கியமாக கறிவேப்பிலை, பாதம், முளைக்கட்டிய தானியங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரும்பு சத்துள்ள முருங்கை கீரை, பேரிச்சை போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

புரதம், வைட்டமின் பி, துத்தநாகம் மற்றும் இரும்பு சத்துள்ள உணவுகள் ஆரோக்கியமான கூந்தலுக்கு அவசியமான ஒன்றாகும்.

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

SCROLL FOR NEXT