பீட்ரூட் மற்றும் பாதாம் சேர்த்து செய்யும் ஜூஸில் வைட்டமின் E, ஆன்டி ஆக்சிடன்ட் ஆகியவை அதிகம் உள்ளன. இவை சருமத்தில் அழுக்கு நீக்கி சுத்தம் செய்யவும், நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகின்றன.
வாட்டர் மெலன் கிரேப் கலந்த ஜூஸில் வைட்டமின் A, C, ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளன. மேலும் இதிலுள்ள நீர்ச் சத்தானது உடலை நீரேற்றத்துடன் வைக்க உதவுகிறது. சிட்ரஸ் பழமான கிரேப்பில் பொட்டாசியம் சத்து அதிகளவில் உள்ளது. இது செல்கள் ஆரோக்கியமாக இயங்க உதவுகிறது.
கேரட் ஜூஸ் தோலின் நிறத்தைப் பாதுகாத்து, சூரியக் கதிர்களால் செல்களில் சிதைவு ஏற்படுவதையும் தடுக்கிறது.
பப்பாளி ஜூஸில் உள்ள என்சைம்கள் தோலிலுள்ள இறந்த செல்களை உரித்தெடுக்கின்றன; ஆன்டி ஆக்சிடன்ட்கள் தோலிலுள்ள சுருக்கங்களையும் கறைகளையும் நீக்குகின்றன.
ஆரஞ்சு ஜூஸிலிருக்கும் வைட்டமின் C யானது தோலில் ஏற்படும் கோளாறுகளை நீக்குவதில் முன்னிலை வகிக்கிறது.
ஆப்பிள் ஜூஸில் உள்ள பல வகையான வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், அதிகளவு நீர்ச்சத்து ஆகியவை ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை நீக்கி அப்பழுக்கில்லாத பளீரென மின்னும் சருமத்தைத் தருகிறது. தோலுக்கு உள்வரை சென்று சுத்தம் செய்கிறது.
லெமன் ஜூஸிலிருக்கும் வைட்டமின் C யானது சருமத்திலிருக்கும் நச்சுக்களை நீக்கி, மாசற்ற சருமத்தைத் உருவாக்கித் தருகிறது.
மாதுளை ஜூஸில் வைட்டமின் E அதிகளவில் உள்ளது. இது சருமத்தில் உண்டாகியுள்ள சிதைவுகளை குணப்படுத்தி, செல்களுக்கு புத்துயிர் அளிக்கிறது. மந்தத்தன்மையையும் போக்குகிறது.
ஆலுவேரா ஜூஸ் தோலுக்கு நீரேற்றம் கொடுத்து புத்துணர்ச்சி அளிக்கிறது.
பைனாப்பிள் ஜூஸில் உள்ள ப்ரோமெலைன் என்ஸைம்கள் வீக்கங்களை நீக்கி சருமத்தை சமநிலைப்படுத்துகின்றன; இறந்த செல்களை முழுவதுமாக நீக்கி குறைபாடில்லாமல் சருமத்தைப் பாதுகாக்கின்றன. வைட்டமின் C யானது கறைகளை நீங்கச் செய்கிறது.